சுன்சரி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சுன்சரி மாவட்டம் (Sunsari District) (நேபாளி: ne:सुनसरी जिल्ला Listenⓘ), தெற்கு நேபாளத்தின் தராய் சமவெளியின், கோசி மண்டலத்தில், நேபாள மாநில எண் 1-இல் அமைந்த பதினான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் இதாரி ஆகும். இதன் மற்றொரு நகரம் தரண் ஆகும்.
இம்மாவட்டம் 1,257 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 7,63,487 மக்கள் தொகையும் கொண்டது. [1]இம்மாவட்டத்தில் முக்கிய பௌத்த மற்றும் இந்துக் கோயில்கள் உள்ளது.
இம்மாவட்டத்தின் தெற்கு பகுதி, இந்தியாவை எல்லையாகக் கொண்டுள்ளது.