From Wikipedia, the free encyclopedia
தன்குட்டா மாவட்டம் (Dhankuta District) (நேபாளி: धनकुटा जिल्ला) (ⓘ), நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல், கோசி மண்டலத்தில் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிட நகரம் தன்குட்டா ஆகும்.
இம்மாவட்டம் 891 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 1,63,412 ஆகும். [1] இம்மாவட்டத்தில் நேபாள மொழி, நேவாரி மொழி, ராய் மொழி, தமாங் மொழி மஹர் மொழி மற்றும் லிம்பு போன்ற மொழிகள் பேசப்படுகிறது.
தன்குட்டா மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 2500 மீட்டர் உயரத்தில் பரவியுள்ளது. தமூர் மற்றும் அருண் ஆறுகள் பாய்கிறது. நெல், சிறுதானியங்கள், எலுமிச்சைப் பழம், இஞ்சி, முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் தேயிலை போன்ற பணப் பயிர்கள் வளர்க்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் உயரமான மலைப்பகுதிகளில் சால மரங்கள் வளர்ந்துள்ளது.
நேபாளப் புவியியல் & தட்ப வெப்பம்[2] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
கீழ் அயனமண்டலம் | 300 மீட்டருக்கும் கீழ் | 3.7% |
மேல் அயனமண்டலம் | 300 - 1,000 மீட்டர்கள் | 44.7% |
மித அயனமண்டலம் | 1,000 - 2,000 மீட்டர்கள் | 46.6% |
இடை அயனமண்டலம் | 2,000 - 3,000 மீட்டர்கள் | 3.2% |
இம்மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 37 கிராம வளர்ச்சி மன்றங்களும் கொண்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.