நேபாள மாநில எண் 1

From Wikipedia, the free encyclopedia

நேபாள மாநில எண் 1map

நேபாள மாநில எண் 1 (Province No. 1) நேபாளத்தின் 7 எண்களின் பெயர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். மாநில எண் 1 நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு சட்டப்படி, 20 செப்டம்பர் 2015 அன்று துவக்கப்பட்டது.[2][3]17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக விராட்நகர் அறிவிக்கப்பட்டுள்ளது.[4] [5] [6] நேபாளத்தின் கிழக்குப் பகுதியின் இமயமலையில் அமைந்த இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 25,905 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,534,943 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 175.6 ஆக உள்ளது. [7]இம்மாநிலம் 14 மாவட்டங்களைக் கொண்டது.

விரைவான உண்மைகள் प्रदेश न० १, நாடு ...
மாநில எண் 1
प्रदेश न० १
Thumb
மேலிருந்து கடிகாரச் சுற்றில்: எவரெசுட்டு சிகரம், நம்ச்சி பஜார், கன்யாம், வருண் சமவெளி
Thumb
நேபாளத்தில் மாநில எண் 1ன் அமைவிடம்
வார்ப்புரு:Province No. 1 districts labelled map

மாநில எண் 1
ஆள்கூறுகள்: 26°27′15″N 87°16′47″E
நாடு நேபாளம்
மாநிலம்மாநில எண் 1
நிறுவப்பட்டது.20 செப்டம்பர் 2015
தலைநகரம்விராட்நகர்[1]
பெரிய நகரங்கள்விராட்நகர், இதாரி, தரண், தன்குட்டா, வீரதமோத்
மாவட்டங்கள்14 மாவட்டங்கள்
அரசு
  நிர்வாகம்மாநில எண் 1 அரசு
  ஆளுநர்கோவிந்த சுப்பா
  முதலமைச்சர்செர்தன் ராய் ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)
  சட்டமன்ற அவைத் தலைவர்பிரதீப் குமார் பண்டாரி
  சட்டமன்றத் தொகுதிகள்
  மாநில சட்டமன்றம்
அரசியல் கட்சிகள்
பரப்பளவு
  மொத்தம்25,905 km2 (10,002 sq mi)
உயர் புள்ளி
8,848 m (29,029 ft)
தாழ் புள்ளி
59 m (194 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்45,34,943
  அடர்த்தி180/km2 (450/sq mi)
இனம்நேபாளிகள்
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
புவிசார் குறியீடுNP-ON
அலுவல் மொழிகள்நேபாளி, லிம்பு மொழி மற்றும் ராய் மொழி
பிற மொழிகள்ராஜ்வம்சி, லெப்ச்சா, செர்பா முதலியன
மூடு
Thumb
நேபாள மாநில எண் 1ல் உள்ள 14 மாவட்டங்களின் வரைபடம்

அமைவிடம்

நேபாளத்தின் தூர-கிழக்கில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவின் பிகார், கிழக்கில் சிக்கிம், தென் மேற்கில் நேபாள மாநில எண் 2, மேற்கில் நேபாள மாநில எண் 3 எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 1-இல் அமைந்துள்ள 14 மாவட்டங்களின் விவரங்கள்:

1.. தாப்லேஜங் மாவட்டம்
2. பாஞ்சதர் மாவட்டம்
3. இலாம் மாவட்டம்
4. சங்குவாசபா மாவட்டம்
5. தேஹ்ரதும் மாவட்டம்
6. தன்குட்டா மாவட்டம்
7. போஜ்பூர் மாவட்டம்
8. கோடாங் மாவட்டம்
9. சோலுகும்பு மாவட்டம்
10. ஒகல்டுங்கா மாவட்டம்
11. உதயபூர் மாவட்டம்
12. ஜாப்பா மாவட்டம்
13. மொரங் மாவட்டம்
14. சுன்சரி மாவட்டம்

அரசியல்

இம்மாநில சட்டமன்றத்தின் 93 சட்டமன்ற உறுப்பினர்களில் 56 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும்; 37 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 28 உறுப்பினர்களையும் தேர்வு செய்கின்றனர்.

இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் செர்தன் ராய் 15 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். [8]

சுற்றுலாத் தலங்கள்


மாநில சட்டமன்றத் தேர்தல், 2017

2017ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இம்மாநில சட்டமன்றத்தின் 93 உறுப்பினர்களுக்கான பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 51 இடங்களையும், மாவோயிஸ்ட் 15 இடங்களை வென்று கூட்டணி அரசு அமைத்துள்ளது. நேபாளி காங்கிரஸ் 21 இடங்களையும், பிற கட்சிகள் ஆறு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மேலதிகத் தகவல்கள் அரசியல் கட்சி, நேரடி தேர்தலில் ...
அரசியல் கட்சி நேரடி தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 36 673,709 38.79 15 51
நேபாளி காங்கிரஸ் 8 586,246 33.76 13 21
மாவோயிஸ்ட் 10 206,781 11.91 5 15
நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி 1 70,476 4.06 2 3
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி 0 57,342 3.30 1 1
சாங்கிய லோக்தாந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் 0 26,123 1.50 1 1
பிறர் 0 115,945 6.68 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 56 1,736,622 100 37 93
Source: Election Commission of Nepal
மூடு
Thumb
எவரெஸ்ட் மலைத்தொடர்கள், மீரா சிகரத்திலிருந்து

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.