From Wikipedia, the free encyclopedia
காமோரா (ஆங்கில மொழி: Gamora) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ஜிம் ஸ்டார்லின் என்பவர் உருவாக்கினார். இவரின் முதல் தோற்றம் ஜூன் 1975 இல் வெளியான 'ஸ்ட்ரேன்ஜ் டேல்ஸ்' #180 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய சக்தி மனிதநேயமற்ற வலிமை மற்றும் சுறுசுறுப்பு மற்றும் சிறந்த தற்காப்புக் கலைஞர் ஆவார். இவரால் விண்மீன் மண்டலத்தில் உள்ள பெரும்பாலான எதிரிகளை வெல்ல முடியும். அவர் இன்ஃபினிட்டி வாட்ச், அண்ணிகிளாடின் மற்றும் கார்டியன்சு ஒப் த கலக்சி[1] போன்ற மீநாயகன் அணியில் உறுப்பினராக உள்ளார்.[2]
காமோரா | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் வரைகதை |
முதல் தோன்றியது | 'ஸ்ட்ரேன்ஜ் டேல்ஸ்' #180 (ஜூன் 1975) |
உருவாக்கப்பட்டது | ஜிம் ஸ்டார்லின் |
கதை தகவல்கள் | |
இனங்கள் | ஜென்-வூபெரிஸ் |
குழு இணைப்பு | கார்டியன்சு ஒப் த கலக்சி இன்ஃபினிட்டி வாட்ச் ஃபாலன்க்ஸ் அண்ணிகிளாடின் யூனிட் பிரோன்ட் நோவா கார்ப்ஸ் |
பங்காளர்கள் | பீட்டர் குயில், ஆடம் வார்லாக் |
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள் | பிரபஞ்சத்தில் மிகவும் ஆபத்தான பெண் |
திறன்கள் |
|
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை ஜோ சல்டனா என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.