கவுதம் கம்பீர்
இந்தியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
கவுதம் கம்பீர் (Gautam Gambhir,pronunciationⓘ பிறப்பு: அக்டோபர் 14, 1981) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்[1]. இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இவர் இடது கை மட்டையாளர் ஆவார். துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.[2] உள்ளூர்ப் போட்டிகளில் புது தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.[3] இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவராக விளையாடி வந்தார். ஆனால் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவராக விளையாடுகிறார்[3]. 2003 ஆம் ஆண்டில் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] பின் 2004 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[3] 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஒருநாள் போட்டிகளில் தலைவராக இருந்தார். இந்த ஆறு போட்டிகளிலும் இந்தியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. 2007 ஐசிசி உலக இருபது20,2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை ஆகிய இரு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் இவரின் பங்களிப்பும் இருந்தது.
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 14 அக்டோபர் 1981 (1981-10-14) (அகவை 42) புது தில்லி, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 6 அங் (1.68 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 249) | 3 நவம்பர் 2004 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 17 டிசம்பர் 2012 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 149) | 11 ஏப்ரல் 2003 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 27 ஜனவரி 2013 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 12) | 13 செப்டம்பர் 2007 எ. இசுக்கொட்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 28 டிசம்பர் 2012 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1999/00–present | Delhi | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | டெல்லி டேர்டெவில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–present | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 6 ஜனவரி 2013 |
வங்காளதேசத்திற்கு எதிராக சிட்டகாங்க் தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து ஐந்து துடுப்பாட்டப் போட்டிகளில் (ஐந்து) நூறுகளை எடுத்த நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் ஆத்திரேலிய வீரர் பிராட்மன், தென்னாபிரிக்க வீரர் ஜாக் கலிஸ், பாகித்தானிய வீரர் முகமது யூசுப் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.[4][5] பிராட்மன் ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் (ஆறு) சதங்களை எடுத்த பெருமைக்குரியவர். தொடர்ச்சியாக நான்கு தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஏப்ரல் ,2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] இவரின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது.[3]
2008 ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[7] 2009 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர் தரவரிசையில் முதலிடம் பெற்றார்.[8][9] இதே ஆண்டில் ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்.