இன்செப்சன் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
இன்செப்சன் (Inception) 2010 இல் வெளியான அமெரிக்க அறிவியல் அதிரடித் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன் எழுதி, தயாரித்து, இயக்கினார். லியோனார்டோ டிகாப்ரியோ, கென் வட்டனபே, ஜோசப் கோர்டன்-லேவிட்ட், எலன் பேஜ், சில்லியன் மர்பி, டோம் ஹார்டி, மரியன் கோடிள்ளர்ட், திலீப் ராவ், டோம் பெரெங்கெர், மைகேல் கயின் ஆகியோர் நடித்துள்ளனர்.
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இன்செப்சன் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிறிஸ்டோபர் நோலன் |
தயாரிப்பு | |
கதை | கிறிஸ்டோபர் நோலன் |
இசை | ஹான்ஸ் சிம்மர் [1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வாலி பிஸ்டர் |
படத்தொகுப்பு | லீ ஸ்மித் |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் பிக்சர்ஸ் |
வெளியீடு | லண்டன் முதல் காட்சி: சூலை 13, 2010 (2010-07-13) அமெரிக்கா: சூலை 16, 2010 (2010-07-16) |
ஓட்டம் | 148 நிமிடங்கள் [2] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $160 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $825,131,943[4] |
பிறர் கனவில் சென்று அவர்களிடமிருந்து வெளிக்கொண்டுவர இயலாத ரகசியங்களை பிரித்து எடுத்து வரும் டோம் காப் எனும் கதாபாத்திரத்தில் டிகாப்ரியோ நடித்துள்ளார்[5]. மனைவியின் மரணத்தின் மர்மங்களால் தன் குடும்பம் மற்றும் நாட்டுரிமையை இழந்து வாடும் டோம் காபிற்கு மறு வாழ்வு வேண்டுமெனில் ஓர் பன்னாட்டு நிறுவன தலைவரின் மகன் மனதில் ஓர் எண்ணத்தை விதைக்க வேண்டும்.[6] காபின் சாதாரண வேலையான ரகசியத்தை பிரித்து எடுப்பதை விட இந்த எண்ணத்தை விதைப்பது என்பது கடினமான வேலை.[6]
படத்தின் படப்பிடிப்பு 2009-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கி, அவ்வருட இறுதியில் கனடாவில் முடிந்தது.[7][8]
இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இசைக்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.