இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
இந்தோ கிரேக்க நாடு (Indo-Greek Kingdom or Graeco-Indian Kingdom) (ஆட்சிக் காலம்; கி மு 180 - கி பி 10) தெற்காசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் நாடுகளை ஆண்ட கிரேக்கர்கள் ஆவர். இருபதிற்கும் மேற்பட்ட இந்தோ கிரேக்க மன்னர்கள் இப்பகுதிகளை, கி மு 180 முதல் கி பி 10 முடிய இருநூறு ஆண்டுகள் ஆண்டனர்.[5]
இந்தோ கிரேக்க இராச்சியம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி. மு. 200–கி. பி. 10 | |||||||||||||
தலைநகரம் | காக்கேசியாவின் (இந்து குஃசு) அலெக்சாந்திரியா (நவீன பாக்ராம்) [3] தக்சசீலா | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | கிரேக்கம் (கிரேக்க எழுத்துக்கள்) பாளி (கரோஷ்டி எழுத்துமுறை script) சமசுகிருதம் பிராகிருதம் (பிராமி எழுத்துமுறை) | ||||||||||||
சமயம் | பௌத்தம் எலனியம் இந்து சமயம் சரதுசம் | ||||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||||
மன்னர் | |||||||||||||
• கி. மு. 200 – கி. மு. 180 | முதலாம் தெமித்திரஸ் (முதல்) | ||||||||||||
• கி. மு. 25 – கி. பி. 10 | மூன்றாம் இசுதிராதோ (கடைசி) | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | பண்டைக் காலம் | ||||||||||||
• தொடக்கம் | கி. மு. 200 | ||||||||||||
• முடிவு | கி. பி. 10 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
கி. மு. 150[4] | 1,100,000 km2 (420,000 sq mi) | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | ஆப்கானித்தான் பாக்கித்தான் இந்தியா |
கி மு இரண்டாம் நூற்றாண்டில் பாக்டீரிய - கிரேக்க மன்னர் முதலாம் டெமிடிரியஸ் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது படையெடுத்து வென்ற போது இந்தோ கிரேக்க நாடு நிறுவப்பட்டது.
தெற்காசியாவில் கிரேக்க மன்னர்கள் ஆப்கானித்தானுக்கும் - உஸ்பெக்கிஸ்தானுக்கும் நடுவே அமைந்த பாக்டீரியவை மையமாகக் கொண்டு தாங்கள் வென்ற பகுதிகளை பிரித்துக் கொண்டு தன்னாட்சியுடன் ஆண்டனர்.
இந்தோ-கிரேக்க மன்னர்களில் பெரும் புகழ் பெற்றவர் முதலாம் மெனாண்டர் மற்றும் ஸ்டாட்ரோ ஆவார்கள். சகலா எனப்படும் தற்கால சியால்கோட் நகரமே இந்தோ கிரேக்க நாட்டின் தலைநகரம் ஆகும். தக்சசீலா நகரம் நாட்டின் வடமேற்கு பகுதியின் தலைநகராக விளங்கியது.
இருநூறு ஆண்டு கால ஆட்சியில், இந்தோ கிரேக்கர்களின் கிரேக்க மொழி மற்றும் நாகரீகத்தின் தாக்கத்தால் இந்தோ ஈரானிய மற்றும் இந்தோ ஆரிய மொழிகளில் மட்டுமல்லாது, பௌத்தம் சமயக் கட்டிடம் மற்றும் சிற்பக் கலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது.[6]
இந்தோ-சிதியர்களின் படையெடுப்புகளால் கி பி 10-இல் நாடுகளை இழந்த இந்தோ கிரேக்கர்கள், இந்தோ-சிதியப் பேரரசு மற்றும் குசான் பேரரசு ஆளுகையில் நடு ஆசியா மற்றும் இந்தியத் துணைக் கண்டத்து நாடுகளின் உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். இந்தோ கிரேக்கர்களில் பலர் இந்திய மன்னர்களிடம் படைவீரர்களாகவும் இருந்தனர்.
தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் இந்தோ கிரேக்கர்களை யவனர்கள் எனக் குறிப்பிடுகிறது.
கி மு 326-இல் அலெக்சாண்டரின் இந்தியா மீதான படையெடுப்பிற்குப் பின், அவருடன் வந்த சில படைத்தலைவர்களும், பெரும் படைவீரர்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் நிரந்தரமாகத் தங்கி, நடு ஆசியா மற்றும் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளை பிரித்துக் கொண்டு, தத்தம் பகுதிகளை ஆளத் துவங்கினர்.[8]
இந்தியாவிலேயே சில படையணிகளுடன் தங்கியிருந்த அலெக்சாண்டரின் படைத்தலைவரான முதலாம் செலுக்கஸ் நிகோடர் கி மு 305-இல் மகத நாட்டின் சந்திர குப்த மௌரியருடன் போரிட்டான். போரின் முடிவில் செலுக்கஸ் நிகோடருக்கு, சந்திரகுப்த மௌரியர் ஐநூறு யானைகளைப் பரிசாக வழங்கினார்.[9]; மேலும் தரப்பினருக்கும் இடையே நடந்த கலப்புத் திருமண உறவுகளால், இரு நாட்டவர்களுக்கிடையே நல்லுறவு உண்டானது.[10]
கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தெனஸ் சந்திரகுப்தரின் அவையில் செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக தங்கியிருந்தார்.[11]
அசோகரது காலத்தில் இந்தியாவின் வடமேற்கில் இருந்த கிரேக்கர்களை பௌத்த சமயத்திற்கு மாற்றினார் என்பதை கந்தகாரில் கிடைத்த அசோகரின் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
கி பி முதல் பத்தாண்டுகளின் முடிவில் இந்தோ-கிரேக்க மன்னர்கள் தாங்கள் ஆண்ட மேற்குப் பகுதிகளை பார்த்தியர்களிடமும், கிழக்குப் பகுதிகளை இந்தோ சிதியர்களிடமும் மற்றும் இந்தோ பார்த்தியர்களிடமும் இழந்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.