ஆப்பிள் நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
ஆப்பிள் நிறுவனம் (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும் (CEO), தவிசாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் விளங்கினார்[4]. 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள்.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
வகை | பொது |
---|---|
நிறுவுகை | ஏப்ரல் 1, 1976 (1976-04-01) |
நிறுவனர்(கள்) | ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டீவ் வாஸ்னயிக் ரொனால்ட் வேய்ன்[1] |
தலைமையகம் | ஆப்பிள் கம்பஸ் 1 இன்பினிட் லூப் குபெர்டினோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
அமைவிட எண்ணிக்கை | 511 விற்பனை நிலையங்கள். (2021 இன் கணக்கெடுப்பின் படி)[2] |
சேவை வழங்கும் பகுதி | உலகம் பூராகவும் |
முதன்மை நபர்கள் | ஸ்டீவ் ஜொப்ஸ் (தவிசாளர் and முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | கணினி வன்பொருள் கணினி மென்பொருள் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் எண்ணிம விநியோகம் |
உற்பத்திகள் | பொருள்கள் பட்டியல்
|
வருமானம் | US$ 65.23 பில்லியன் (FY 2010)[3] |
இயக்க வருமானம் | US$ 18.39 பில்லியன்(FY 2010)[3] |
இலாபம் | US$ 14.01 பில்லியன் (FY 2010)[3] |
மொத்தச் சொத்துகள் | US$ 75.18 பில்லியன் (FY 2010)[3] |
மொத்த பங்குத்தொகை | US$ 47.79 பில்லியன் (FY 2010)[3] |
பணியாளர் | 49,400 (2010)[3] |
துணை நிறுவனங்கள் | Braeburn Capital FileMaker Inc. |
இணையத்தளம் | www.apple.com |
ஸ்டீவ் ஜாப்ஸ் , ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினார். இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், "ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது. ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்கள், "மேக் ஓஎஸ் எக்ஸ்' எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் , "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸைத் திரும்ப அழைத்துக் கொண்டது.