ஆத்திரேலியப் பழங்குடிகள் (Indigenous Australians) என்போர் பிரித்தானியக் குடியேற்றத்திற்கு முன்னர் இன்றைய ஆத்திரேலியாவின் எல்லைக்குள் வாழ்ந்த பல்வேறு இனக்குழுக்களின் குடும்ப பாரம்பரியம் மற்றும்/அல்லது அங்கீகரிக்கப்பட்ட மக்களைக் குறிக்கும்.[3][4] இவர்கள் இரண்டு வேறுபட்ட குழுக்களைக் கொண்டுள்ளனர், இதில் பல இனக்குழுக்கள் அடங்கும்: பிரதான நிலப்பரப்பின் ஆத்திரேலியத் தொல்குடிகள் (Aboriginal Australians) மற்றும் தசுமேனியா உட்பட பல தீவுகள் மற்றும் மெலனீசியாவில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து, பப்புவா நியூ கினி இடையே உள்ள கடல்களின் டொரெசு நீரிணை தீவினர் (Torres Strait Islanders). இப்பழங்குடிகளைக் குறிக்க அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் என்ற சொல் பெரும்பாலும் விரும்பப்படுகிறது, இருப்பினும் ஆத்திரேலியாவின் முதல் தேசங்கள், ஆத்திரேலியாவின் முதல் மக்கள், முதல் ஆத்திரேலியர்கள் என்ற சொற்களும் பெருகிய முறையில் பொதுவானவை;[5][lower-alpha 1] 2021 ஆத்திரேலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 812,728 பேர் தங்களை ஆத்திரேலியத் தொல்குடியினர் மற்றும்/அல்லது டொரெசு நீரிணைத் தீவைச் சேர்ந்தவர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்தினர், இது ஆத்திரேலியாவின் மொத்த மக்கள்தொகையில் 3.2% ஆகும். இவர்களில், 91.4% தொல்குடியினராகவும், 4.2% டொரெசு நீரிணை தீவினர் எனவும் அடையாளம் காணப்பட்டனர்; 4.4% இரு குழுக்களுடனும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[8] 1995 ஆம் ஆண்டு முதல், ஆத்திரேலியத் தொல்குடியினக் கொடி, டொரெசு நீரிணைத் தீவுக் கொடி ஆகியவை ஆத்திரேலியாவின் அதிகாரப்பூர்வ கொடிகளாக உள்ளன.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, மாநிலம்/ஆள்புலம் வாரியாக மக்கள்தொகைப் பகிர்வு ...
ஆத்திரேலியத் தொல்குடிகளும் டொரெசு நீரிணை தீவினரும்
Aboriginal Australians and Torres Strait Islanders
ஆத்திரேலியப் பழங்குடிகள்
மொத்த மக்கள்தொகை
812,728 (2021 கணக்கெடுப்பு)[1]
அத்திரேலிய மக்கள்தொகையின் 3.2%
மாநிலம்/ஆள்புலம் வாரியாக மக்கள்தொகைப் பகிர்வு
நியூ சவுத் வேல்சு2,65,685(3.55%)
குயின்சுலாந்து2,21,276(4.57%)
மேற்கு ஆத்திரேலியா1,00,512(3.93%)
வட ஆள்புலம்74,546(30.34%)
விக்டோரியா57,767(0.94%)
தெற்கு ஆத்திரேலியா42,265(2.47%)
தசுமேனியா28,537(5.51%)
ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்7,513(1.86%)
நியூசிலாந்து795[2]
மொழி(கள்)

சிறுபான்மை

  • ஆத்திரேலியத் தொல்குடியின மொழிகள்
  • டொரெசு நீரிணை கிரியோல்
  • ஆத்திரேலியக் கிரியோல் மொழி
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பப்புவான்கள், மெலனீசியர்கள்
மூடு

வரலாறு

பழங்குடிகளின் வருகை

ஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாக நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.

ஐரோப்பியரின் வருகை

1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. பழங்குடி அல்லது பழங்குடி ஆத்திரேலியன் என்ற சொற்களின் பயன்பாடு மிகவும் பொதுவானதும் மனிதநேயமற்றதாகவும் இருப்பதால் இச்சொற்கள் பலரால் ஊக்கவிக்கப்படுவதில்லை.[6] [7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.