அங்கஜன் இராமநாதன்
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan; பிறப்பு: 9 சூலை 1983) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரும், யாழ் மாவட்டக் கட்சித் தலைவரும் ஆவார்.[2][3] இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும்,[4] யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னர் பிரதி வேளாண்மை விவசாய அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்தார்.
விரைவான உண்மைகள் அங்கஜன் ராமநாதன், இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் ...
அங்கஜன் ராமநாதன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 ஆகத்து 2020 | |
முன்னையவர் | செல்வம் அடைக்கலநாதன் |
வேளாண்மைத் துறைத் துணை அமைச்சர் | |
பதவியில் 1 நவம்பர் 2018 – 15 திசம்பர் 2018 | |
பதவியில் 12 சூன் 2018 – 26 அக்டோபர் 2018 | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2013–2015 | |
பின்னவர் | அகிலதாஸ் சிவக்கொழுந்து |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 சூலை 1983 (1983-07-09) (அகவை 40) |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு |
மூடு