From Wikipedia, the free encyclopedia
செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan; பிறப்பு: சூன் 10, 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் முன்னாள் போராளியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.
செல்வம் அடைக்கலநாதன் | |
---|---|
2015 இல் அடைக்கலநாதன் | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2000 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2015 – 2 மார்ச் 2020 | |
முன்னையவர் | முருகேசு சந்திரகுமார் |
பின்னவர் | அங்கஜன் இராமநாதன் |
தலைவர் தமிழீழ விடுதலை இயக்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1986 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமிர்தநாதன் அடைக்கலநாதன் 10 சூன் 1962 |
இறப்பு | appointer |
இளைப்பாறுமிடம் | appointer |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை இயக்கம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
பெற்றோர் |
|
வாழிடம் | மன்னார் |
வடக்கு இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த அடைக்கலநாதன், தனது 15வது அகவையில் டெலோ இயக்கப் போராளியாக இணைந்தார்.[2] டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 மே 5 இல் கொல்லப்பட்டதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் அவ்வியக்கத்தின் தலைவரானார்.[2]
செல்வம் அடைக்கலநாதன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈதேசவிமு/ஈமபுவிமு/டெலோ/தவிகூ கூட்டு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். க்ட்டணி வேட்பாளர்களில் மூன்ற்ஃபாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்றிருந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4] இவர் மீண்டும் 2000 தேர்தலில் டெலோ வேட்பாளராகப் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்றம் சென்றார்.[5]
2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.[6][7] அடைக்கலநாதன் 2001 தேர்தலில் டெலோ சாஅர்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8] இவர் மீண்டும் 2004,[9] 2010,[10][11] 2015 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[12][13] இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் 2014 செப்டம்பர் 1 இல் கூடிய போது, இவர் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[14][15]
அடைக்கலநாதன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16][17][18]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
1989 நாடாளுமன்றம்[3] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | ஈ.என்.டி.எல்.எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/ தவிகூ | 5,771 | தெரிவு செய்யப்படவில்லை | ||
2000 நாடாளுமன்றம்[5] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | 15,490 | தெரிவு | |||
2001 நாடாளுமன்றம்[8] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 28,548 | தெரிவு | ||
2004 நாடாளுமன்றம்[9] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 39,535 | தெரிவு | ||
2010 நாடாளுமன்றம்[19] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 17,366 | தெரிவு | ||
2015 நாடாளுமன்றம்[20] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 26,397 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம்[21] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 18,563 | தெரிவு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.