From Wikipedia, the free encyclopedia
மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena, சிங்களம்: මෛත්රිපාල සිරිසේන) என்று அழைக்கப்படும் பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன (பிறப்பு: 3 செப்டம்பர் 1951)[2] இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக 2015 முதல் 2019 வரை பதவியில் இருந்தார்.[3] 1989 இல் அரசியலில் நுழைந்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். பாதுகாப்புப் பதில் அமைச்சராகவும்[4] இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2014 நவம்பர் 21 அன்று அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தார். சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, புதிய சனநாயக முன்னணியின் சார்பில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டு[5] வெற்றி பெற்றார்.[6]
மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena මෛත්රිපාල සිරිසේන | |
---|---|
7-வது இலங்கை அரசுத்தலைவர் | |
பதவியில் 9 சனவரி 2015 – 18 நவம்பர் 2019 | |
முன்னையவர் | மகிந்த ராசபக்ச |
பின்னவர் | கோத்தாபய ராசபக்ச |
21வது சுகாதார அமைச்சர் | |
பதவியில் 23 ஏப்ரல் 2010 – 21 நவம்பர் 2014 | |
முன்னையவர் | நிமல் சிரிபால டி சில்வா |
பின்னவர் | திஸ்ஸ அத்தநாயக்க |
விவசாய அபிவிருத்தி, வேளாண் சேவைகள் அமைச்சர்1 | |
பதவியில் 23 நவம்பர் 2005 – 23 ஏப்ரல் 2010 | |
பின்னவர் | மஹிந்த யாப்பா அபேவர்தன |
அவை முதல்வர் | |
பதவியில் 3 மே 2004 – 9 ஆகத்து 2005 | |
முன்னையவர் | டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார |
பின்னவர் | நிமல் சிரிபால டி சில்வா |
ஆற்றுப் பெருநிலம் மற்றும் ரஜரட்டை அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2004 – 23 நவம்பர் 2005 | |
7வது மகாவலி அபிவிருத்தி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் | |
பதவியில் 1997–2001 | |
பொதுச் செயலர் இலங்கை சுதந்திரக் கட்சி | |
பதவியில் அக்டோபர் 2001 – 21 நவம்பர் 2014 | |
முன்னையவர் | எஸ். பி. திசாநாயக்க |
பின்னவர் | அனுர பிரியதர்சன யாப்பா |
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 15 பெப்ரவரி 1989 – 20 சனவரி 2015 | |
பின்னவர் | டி. ஆர். ஜெயசிங்க பண்டார[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பல்லேவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன 3 செப்டம்பர் 1951 யாகொட, கம்பகா மாவட்டம், இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி (1968 – இன்று) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங்) (-1968) |
பிற அரசியல் தொடர்புகள் | புதிய சனநாயக முன்னணி (20-இன்று) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (2004 – 2014) மக்கள் கூட்டணி (1994 – 2004) |
துணைவர் | ஜெயந்தி புஷ்பகுமாரி |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | மாக்சிம் கோர்க்கி இலக்கியக் கல்வி நிலையம், உருசியா |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வேளாண்மையியலாளர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | www |
1951 இல் பொலன்னறுவையில் [7] விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த சிறிசேன பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.[8] பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் பயின்று 1973 ஆம் ஆண்டில் பட்டயப் படிப்பை முடித்தார். 1971 ஜேவிபி புரட்சியின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[9] 1980 இல் இவர் உருசியாவின் மாக்சிம் கோர்க்கி கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டயம் பெற்றார்.[10]
1979 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேன இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]
1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9] அதன் பின்னர் ஆற்றுப் பெருநிலம் மற்றும் ரஜரட்டை அபிவிருத்தி அமைச்சராகவும், விவசாய அபிவிருத்தி, வேளாண் சேவைகள் அமைச்சராகவும், இறுதியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் 2014 நவம்பர் 21 வரை பதவியில் இருந்தார்.
அக்டோபர் 9, 2008 அன்று கொழும்பின் புறநகரான பிலியந்தலை, பொரலஸ்கமுவ என்ற இடத்தில் சிறிசேன சென்ற வாகன அணித் தொடர் மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சென்ற வாகனம் தாக்குதலில் இருந்து தப்பியது. ஆனாலும் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.[11]
பல வாரங்களாக ஊடகங்களில் இடம்பெற்றுவந்த ஊகங்களுக்கு இடையே,[12] சிறிசேன நவம்பர் 21, 2014 அன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருந்து மேலும் பல கட்சி உறுப்பினர்களுடன் விலகி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து கொண்டார். சனவரி 8, 2015 அரசுத் தலைவர் தேர்தலில் இவர் பொது எதிர்க்கட்சி வேட்பாளராக மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டார்.[13] இலங்கையின் அனைத்து நிருவாகக் கூறுகளும் ராசபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஊழல், உறவினருக்கான சலுகை போன்றவற்றால் இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.[14][15] தாம் பதவிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப் போவதாகக் கூறினார். இவரது கட்சித் தாவலை அடுத்து, இவரது அமைச்சுப் பதவியும், கட்சிச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.[16]
முக்கிய எதிர்க்கட்சியான ஐதேகவின் ஆதரவைப் பெற்றதோடு, முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா, ஆளும் கட்சி உறுப்பினர்கள் (துமிந்த திசாநாயக்க, ராஜித சேனாரத்தின, ரஜீவ விஜேசிங்க), சரத் பொன்சேகா என பலரும் சிறிசேனவிற்கு ஆதரவளித்தனர்.[17][18][19]
2015 சனவரி 8 இல் நடைபெற்ற தேர்தலில் சிறிசேன 51.28% வாக்குகள் பெற்றார். 2015 சனவரி 9 அன்று இலங்கையின் 6வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக சிறிசேன உச்சநீதிமன்ற நீதியரசர் க. சிறீபவன் முன்னிலையில் பதவியேற்றார்.[20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.