From Wikipedia, the free encyclopedia
அகச்சுரப்பித் தொகுதி அல்லது அகஞ்சுரக்குந் தொகுதி (Endocrine system) என்பது இயக்குநீர்கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, வளர்சிதைமாற்றம், வளர்ச்சி, திசுக்களின் செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை அகச்சுரப்பியியல் எனப்படுகின்றது.
அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.
கலச் சைகையின் பொதுவான முறை அகச்சுரப்புச் சைகை ஆகும். இத்துடன், பராகிறைன், ஆட்டோகிறைன், நியூரோஎண்டோகிறைன் ஆகிய வேறு பல சைகை முறைகளும் உள்ளன. நுரோன்களுக்கு இடையிலான தனி நியூரோகிறைன் சைகை முறை நரம்புத் தொகுதிக்கு உரியது ஆகும்.
சுரக்கப்படும் இயக்குநீர் | சுருக்கக் குறி | உற்பத்தி செய்யப்படுவது | தாக்கம் |
---|---|---|---|
தைரொட்ரொப்பின் சுரக்கும் இயக்குநீர் | TRH | Parvocellular neurosecretory neurons | Stimulate thyroid-stimulating hormone release from [[anterior முன் பிட்யூட்டரி சுரப்பி ஆல் சுரக்கப்படும், தைரொயிட் தூண்டு இயக்குநீரை (TSH) சுரக்கும் |
டொப்பாமின் (Prolactin-inhibiting hormone) |
DA or PIH | Dopamine neurons of the arcuate nucleus | புரோலாக்டின் இனை நிரோதிக்கும் முன் பிட்யூட்டரி சுரப்பியினால் சுரக்கப்படும் |
வளர்ச்சி இயக்குநீரை சுரக்கும் இயக்குநீர் | GHRH | Neuroendocrine neurons of the Arcuate nucleus | வளர்ச்சி இயக்குநீரைத் தூண்டும், முன் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் |
வளர்ச்சியூக்கத் தடுப்பி |
SS, GHIH, or SRIF | Neuroendocrine cells of the Periventricular nucleus | Inhibit Growth hormone (GH) release from anterior pituitary Inhibit thyroid-stimulating hormone (TSH) release from anterior pituitary |
கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் | GnRH or LHRH | Neuroendocrine cells of the Preoptic area | Stimulate follicle-stimulating hormone (FSH) release from anterior pituitary Stimulate luteinizing hormone (LH) release from anterior pituitary |
Corticotropin-releasing hormone | CRH or CRF | Parvocellular neurosecretory neurons of the Paraventricular Nucleus | Stimulate adrenocorticotropic hormone (ACTH) release from anterior pituitary |
ஆக்சிடாசின் | OT or OXT | Magnocellular neurosecretory neurons of the Supraoptic nucleus and Paraventricular nucleus | Uterine contraction Lactation (letdown reflex) |
வாசோபிரெசின் (antidiuretic hormone) |
ADH or AVP or VP | Parvocellular neurosecretory neurons, Magnocellular neurosecretory neurons of the Paraventricular nucleus and Supraoptic nucleus | Increases water permeability in the distal convoluted tubule and collecting duct of சிறுநீரகத்தி, thus promoting water reabsorption and increasing blood volume |
வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறம் மிக்கவையாகக் காணப்படுகின்றன.
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் கபச் சுரப்பி (அல்லது மூளையடிச் சுரப்பி) ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால், இது நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது.
மூளையடிச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது.
இது, மூளைப்பகுதியிலுள்ள கார்பஸ் கலோசத்தின் அடியில் காணப்படுகிறது. இது கருப்புநிறமி (Melatonin) இயக்குநீரை உற்பத்திச் செய்கிறது. மார்புக் காம்பு, விதைப்பை போன்ற பகுதிகளில் நிறமிகளின் அடர்த்திக்கு இந்நிறமி முக்கியப் பங்கு வகிக்கிறது.
கழுத்துப் பகுதியில் குரல்வளையின் இரண்டு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளைக் கொண்டு காணப்படும் அமைப்பிற்கு கேடயச் சுரப்பி என்றுபெயர். கேடயச் சுரப்பியக்குநீர் (Thyroxine) இங்குதான் சுரக்கிறது. இச்சுரப்பியக்குநீரில் அமினோ அமிலமும் அயோடினும் காணப்படுகின்றன. இச்சுரப்பியானது, உடல் வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிப்பதன் காரணமாக ஆளுமை இயக்குநீர் எனவும் குறிப்பிடப்பெறுகிறது.
கேடயச் சுரப்பியக்குநீர், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது. உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த துணைசெய்கிறது. திசு வளர்ச்சி மற்றும் மாறுபாடு அடைவதைத் தூண்டுகின்றது. மேலும், குருதியில் அயோடின் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்துகிறது. சிறுநீரகச் செயல்பாட்டையும், சிறுநீர்ப் போக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
கேடயச் சுரப்பியக்குநீரின் குறை சுரப்புக் காரணமாக, முன் கழுத்துக் கழலை, குறை வளர்சிதை மாற்றம், உடல் வளர்ச்சிக் குறை நோய் (Cretinism) முதலான குறைபாடுகள் ஏற்படுகின்றன.
கேடயச் சுரப்பியக்குநீரின் மிகைச் சுரப்பினால், மிகையான வளர்சிதை மாற்றம், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, மிகுதியாக வியர்த்தல், எடை குறைவு, களைப்படைதல், கண்களில் பிதுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
இவை கேடயச் ச்ரப்பிக்கு உள்ளே இருக்கின்றன. இணை இயக்குநீர் (Parathormone) ,கால்சிடோனின் (Calcitonin) ஆகிய இயக்குநீர் இங்கு உருவாக்கப்படுகின்றன. இவை, கால்சியம் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிக்கின்றன.
இதயத்தின் மேல் அமைந்திருக்கும் பெரும் நிணநீர் அமைப்பு தைமசு சுரப்பியாகும். இது தைமொசின் என்னும் இயக்குநீரினைச் சுரக்கின்றது. தைமொசின், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், தைம நிணவணு (T lymphocyte) வேறுபாடு அடைவதைத் தூண்டிவிடுகிறது.
இச்சுரப்பியானது சிறுநீரகத்தின் மேல் அமைந்துள்ளது. இது அண்ணீரக புறணியையும் (Adrenal cortex), அண்ணீரக அகணியையும் (Adrenal medulla) உள்ளடக்கியதாகும்.
இதில் ஆல்டோஸ்டீரோன், கார்டிசோன் என்னும் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இவற்றுள், ஆல்டோஸ்டீரோன் நீர், சோடியம் மீண்டும் உரிஞ்சப்படுவதை ஊக்குவித்து பொட்டாசியம், பாசுபேட் அயனிகளைக் கழிவு நீக்கம் செய்கின்றது. தாது உப்புகளின் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிப்பு மேற்கொள்கிறது. மேலும், மின் பகுளிகளின் (Electrolytes) சமநிலை, உடல்திரவ அடர்த்தி. சவ்வூடு பரவல் அழுத்தம், இரத்த அழுத்தம் முதலியவற்றையும் இது பராமரிக்கிறது. கார்டிசோன் இயக்குநீர், கிளைக்கோசனைக் குளுக்கோசாகச் சிதைவடையச் செய்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. தவிர, அழற்சித் தடுப்பு வினைகளைத் தோற்றுவித்து நோய்த்தடைக் காப்புத் துலங்கலைக் கட்டுப்படுத்துகின்றது.
இது, உருமாறிய நரம்புப் புறணியணுக்களால் ஆனது. அதிரனலின், இயலண்ணீரலின் என்கிற இருவகையான இயக்குநீர்களைச் சுரக்கின்றது. இவை ஆபத்துக் கால இயக்குநீர் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அழுத்தமான, அபாயகரமான சூழ்நிலைகளை உடல் விரைந்து எதிர்கொள்ள இவை துணைபுரிகின்றன. மேலும், இவை இதயத்துடிப்பு, சுவாசம், விழிப்புணர்வுத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கின்றன. அதுபோல், கண் பாவையை விரிவடையச் செய்கின்றன. மிகையான வியர்த்தல், முடி சிலிர்க்கச் செய்தல் போன்றவற்றையும் உண்டாக்குகின்றன.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.