Remove ads
மருத்துவச் சிறப்புப் புலம் From Wikipedia, the free encyclopedia
அகச்சுரப்பியல் அல்லது உட்சுரப்பியல் (Endocrinology) உயிரியல், மருத்துவம் ஆகிய அறிவியல் புலங்களின் ஒரு கிளைப்பிரிவாகும். இது அகச்சுரப்பு மண்டலம், அதன் நோய்கள், அது சார்ந்த சிறப்புச் சுரப்புகள்(இயக்குநீர்கள் அல்லது இசைமங்கள்) ஆகியவற்றைப் படிக்கிறது. இது இயக்குநீர்களால் இயக்கப்படும் பல பின்வரும் உயிரியல் செயல்பாடுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது: பரவல், வளர்ச்சி, வேறுபடுதல் ஆகிய வளர்ச்சி நிகழ்வுகள், வளர்சிதைமாற்ற உளவியல் அல்லது நடத்தைச் செயல்பாடுகள், மாந்த வளர்ச்சி(உயிரியல்), இழையச்(திசுச்) செயல்பாடு, உறக்கம், செரிப்பு, மூச்சுயிர்ப்பு, கழிவு, மன உணர்வுநிலை, உடலியக்க இறுக்கம், பால்சுரப்பு, உடலின் இயக்கம், இனப்பெருக்கம், புலன் காட்சி. இதன் சிறப்புப் புலங்களாக நடத்தைசார் அகச்சுரப்பியலும்[1][2][3] ஒப்பீட்டு அகச்சுரப்பியலும் அமைகின்றன.
ஒரு பெண்ணின் முதன்மை அகச்சுரப்பி உறுப்புகளை விளக்கும் படிமம் | |
அமைப்பு | அகச்சுரப்பி |
---|---|
குறிப்பிடத்தக்க நோய்கள் | நீரிழிவு நோய், கேடயச் சுரப்பு, ஆண்ட்ரோசன் |
குறிப்பிடத்தக்க சோதனைகள் | தைராய்டு செயல்பாடு சோதனை, இரத்தச் சர்க்கரை |
சிறப்பு வைத்தியர் | உட்சுரப்பியலாளர் |
அகச் சுரப்பு மண்டலம் பல சுரப்பிகளைக் கொண்டுள்ளது. இந்தச் சுரப்பிகள் உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இவை சுரப்பை (இயக்குநீரை) நாளங்கள் வழியாக அல்லாமல் நேரடியாகக் குருதியோட்டத்தில் சுரக்கின்றன. எனவே, அகச்சுரப்பிகள் நாள்மில்லாச் சுரப்பிகள் எனப்படுகின்றன. இயக்குநீர்கள் அல்லது இயக்குமங்கள் அல்லது இசைமங்கள் பல்வேறுபட்ட செயல்களையும் செயல்முறைமைகளையும் கொண்டுள்ளன; ஒரு இயக்குமமே பல்வேறு இலக்கு உறுப்புகளில் பல விளைவுகளைப் பெற்றிருக்கலாம்;, எதிர்நிலையாக ஓர் இலக்கு உறுப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குமங்களால் தாக்கமுறலாம்.
அகச்சுரப்பியல் மாந்த உடலின் அகச்சுரப்பு மண்டலத்தைப் படிக்கும் அறிவியல் புலமாகும்.[4]இது இயக்குமங்களைச் சுரக்கு மண்டலமாகும்மியக்குமங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வேதிமங்களாகும். எடுத்துகாட்டாக, கேடயச் சுரப்பி இயக்குமம், வளர்ச்சி இயக்குமம், கணையச் சுரப்பு இயக்குமம் (insulin) என்பவற்றைக் கூறலாம். அகச்சுரப்பு மண்டலம் பலவகை பின்னூட்ட இயங்கமைப்புகளைக் கொண்டுள்ளது கேடயச்சுரப்பு தூண்டும் ஓர் இயக்குமம் மற்றொரு துணைஇயக்குமமாகிய கேடயச் சுரப்பு இயக்குமத்தின் செயல்பாட்டை அல்லது சுரப்பைக் கட்டுப்படுத்தும். துணை இயக்குமச் சுரப்பு மிகவும் கூடுதலாக இருந்தால், இது எதிர்மறைப் பின்னூட்டத்தை முதன்மை இயக்குமத்துக்குத் தந்து, சுரப்புச் சமனிலையைப் பேணும்.[சான்று தேவை]
பேலிசும் சுட்டார்லிங்கும் 1902 இல் இயக்குநீர் அல்லது இயக்குமத்தை வரையறுத்தனர். அந்த வரையறைப்படி, இயக்குமம் உடல் உறுப்பால் வெளியிடபடவேண்டும். அது கூறைந்த அள்வில் குருத்தியில் நேரடையாக வெளியிடப்பட வேண்டும். தொலைவில் உள்ள உடல் உறுப்பின் குறிப்பிட்ட செயலை நிறைவேற்ற அந்த உறுப்புவரை குருதியூடாகக் கடத்தப்படவேண்டும் இந்த வரையறை பெரும்ப்பாலான செவ்வியல் இயக்குமங்கலுக்குப் பொருந்தும்; ஆனால், இணைச்சுரப்பு இயங்கமைப்புகளும் ( உறுப்பு அல்லது இழைய உயிர்க்கலங்களுக்கு இடையில் வேதியியல் தொடர்புறவை நிகழ்த்துபவை) தற்சுரப்புக் குறிகைகளும் (குறிப்பிட்ட உயிர்க்கலத்தில் மட்டும் செயல்ப்படும் வேதிமம்) இடைச்சுரப்புக் குறிகைகளும் ( ஒரே உயிர்க்கலத்தில் செயல்படும் வேதிமம்) உள்ளன.[5] ஒரு நரம்பியல் அகச்சுரப்புக் குறிகை என்பது ஒரு நரம்பனால்(நரம்பணுவால்) குருதியில் வெளியிடப்படும் செவ்வியல் வகை இயக்குமம் ஆகும் ( நரம்பியல் அகச்சுரப்பியல் கட்டுரையைக் காண்க).
இயக்குமங்கள் இலக்கு உறுப்பில் குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு ஏற்ப தகவமைந்து செயல்படுகிறது. பவ்லியூ குறிப்புகளின் படி ஓர் ஏற்பி குறைந்தது பின்வரும் இரண்டு அடிப்படை பகுதிக்கூறுகளைக் கொண்டிருக்கிறது:
இந்த இரண்டு பகுதிகளுக்கு இடையில் மாற்று உருமாற்றத்தைத் தூண்டும் இயக்குமக் கட்டமைப்பு நிகழும் "குறுக்குக் கடத்துகை இயங்கமைப்பு" ஒன்றும் இருக்கிறது. இவை வரிசை முறையில் தகுந்த எதிர்வினையைச் செய்கின்றன.
நார் எபிநெப்பிரைன், எபிநெப்பிரைன், டோப்போமைன் (கேட்டெகொலாமைன்கள்) போன்ற அமைன்கள் டைரோசைன் எனும் ஒற்றை அமினோஅமிலத்தில் இருந்து பெறப்பட்டவை. 3,5,3’-triiodothyronine (T3) and 3,5,3’,5’-tetraiodothyronine (thyroxine, T4) போன்ற கேடயச்சுரப்பி இயக்குமங்களும் மேற்கூறிய வகையின் உட்கணமேவ் ஏனெனில் இவையும் இரண்டு அயோடினேற்ற டைரோசைன் அமினோஅமில் எச்சங்களில் இருந்தே பெறப்பட்டவையாகும்.[சான்று தேவை]
பெப்டைடு இயக்குமங்களும் புரத இயக்குமங்களும் மூன்றிலிருந்து(தைரோட்டிரோப்பின் இயக்கும வகை) 200 (போலிக்கிள் தூண்டலால் விடுவிப்பு இயக்கும வகை) வரையிலான அமினோஅமில எச்சங்களில் இருந்தே பெற்ற இயக்குமங்களைக் கொண்டுள்ளன. இவர்றின் மூலக்கூற்றுப் பொருண்மை(நிறை) மோல் ஒன்றுக்கு 31,000 கிராம்கள் அமையும் அளவுக்குப் பெரியனவாக உள்ளன. கணையத்தில் இன்சுலினும் வயிற்றில் கிரெலினும் கொழுப்புக்கலங்களில் லெப்ட்டினும் சுரத்தல் போல, அடிமூளைச்(பிட்டியூட்டரை) சுரப்பியில் சுரக்கும் அனைத்து இயக்குமங்களும் பெப்டைடு இயக்குமங்கள் ஆகும்.[சான்று தேவை]
பருவக இயக்குமங்கள் அவற்றின் தாய்ச்சேர்மமான கொழுப்பில் இருந்து மாற்றப்பட்டவையாகும். பாலூட்டிகளின் பருவக இயக்குமங்கள் இவை பிணையும் ஏற்பிகளைச் சார்ந்து பின்வரும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: குளூக்கோக்காட்டிகாய்டுகள், கனிமக்காட்டிகாய்டுகள், ஆந்திரோஜென்கள், எசுத்திரோஜன்கள், புரோஜெசுட்டோஜென்கள். கால்சிட்டிரியால் போன்ற சில உயிர்ச்சத்து டி வடிவங்கள், பருவகத்தை ஒத்தவையாகும். இவை சற்றொப்ப அமைந்த ஏற்பிகளோடு பிணைகின்றன; ஆனால், இவற்றில் உண்மைப் பருவகத்தின் சிறப்பு வலயக் கட்டமைப்பு அமையாது.
தொழில் | |
---|---|
பெயர்கள் | மருத்துவர், மருத்துவச் சிறப்புப் புலமையர் |
வகை | மருத்துவச் சிறப்புப் புலம் |
செயற்பாட்டுத் துறை | மருத்துவம் |
விவரம் | |
தேவையான கல்வித்தகைமை | *மருத்துவ முனைவர் (M.D.)
|
தொழிற்புலம் | மருத்துவமனைகள், தனிமருத்துவகங்கள் |
மூளை, நுரையீரல், இதயம், குடல், தோல், சிறுநீரகம் ஆகிய ஒவ்வொரு உறுப்பும் இயக்குமத்தைச் சுரந்து, அதற்குத் துலங்கினாலும் அகச்சுரப்பியல், அகச்சுரப்பு உறுப்புகளை அதாவது இயக்குமத்தைச் சுரத்தலையே முதன்மைப் பணியாகக் கொண்டுள்ள உறுப்புகளிலேயே தன் சிறப்புக் கவனத்தைக் குவிக்கிறது. இவற்றில் அடிமூளைச்சுரப்பி, கேடயச்சுரப்பி, அண்ணீரகங்கள், சூல்சுரப்பிகள், விரைகள், கணையம் ஆகியன உள்ளடங்கும். அகச்சுரப்பியல் வல்லுனர் என்பவர் நீரிழிவு, அதிதைராய்டியம், மேலும் பிற அகச்சுரப்பியல் கோளாறுகளையும் நோய்களையும் தீர்ப்பதில் சிறப்புப் புலமை பெற்ற மருத்துவர் ஆவார்.
அகச்சுரப்பியல் மருத்துவச் சிறப்புத் துறையில் அகல்விரிவான பல்வகை நோய் அறிகுறிகளையும் மாற்றங்களையும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இயக்குமங்களின் மிகை/குறையால் ஏற்படும் கோளாறுகளின் நீண்ட கால அளவிலான மேலாண்மையும் உள்ளடங்கும்.[சான்று தேவை]
மற்ற மருத்துவச் சிறப்புப் புலஙளைவிட டாகச்சுரப்பு நோய்களை அறியவும் தீர்க்கவும் பேறளவில் ஆய்வக ஓர்வுகளளுதவுகின்றன. பல நோய்கள் கிளர்த்தல்/தூண்டுதல் அல்லது தடுத்தல்/அடக்குதல் ஓர்வுகளால் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கு அகச்சுரப்பு உறுப்புச் செயல்பாட்டை அறிய கிளர்த்தல் பொருள் உடலுக்குள் குருதிவழியாகச் செலுத்தப்ப்படுகிறது. பிறகு, குருதியின் பதக்கூற்றை எடுத்து குறிப்பிட்ட இயக்குமத்திலோ வளர்சிதைபொருளிலோ ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிடலாம். ஓர் அகச்சுரப்பியலாளருக்கு மருத்துவ வேதியியலிலும் உயிர்வேதியியலிலும் ஆழ்ந்த அகன்ற அறிவு, ஆய்வுகளில் அவற்றின் பயன்களையும் வரம்புகளையும் புரிந்து செயல்படத் தேவையாகிறது.
அகச்சுரப்பியல் நடைமுறையின் இரண்டாவது இன்றியமையாத கூறுபாடு உடல்மாற்றத்தையும் நோயையும் பிரித்துணர்வதாகும். உடல் வளர்ச்சியும் இயல்புக்கு மாறான ஓர்வு முடிவுகளும் பற்றிய மாறுபட்ட பானிகளை அவை நோய் சார்ந்தனவா அல்லனவா என மதிப்பீடு அறிதல் வேண்டும்.மகச்சுரப்பு உறுப்புகளின் நோயறியும் படிமமாக்கம் தற்செயலான மாற்றம் சார்ந்த கூறுபாடுகளை வெளிப்படுத்தலாம். இவை நோயைக் காட்டுகிறதா இல்லையா என அறிதல் வேண்டும்.[சான்று தேவை]
அகச்சுரப்பியல் துறையில் நோயைக் கவனிப்பது போலவே நோயாளியையும் கவனித்தல் வேண்டும். பெரும்பாலான அகச்சுரப்பியல் நோய்கள் நாட்பாடனவாக் அமைந்து, வாழ்நாள் முழுவதுமான கவனிப்பைக் கோரிநிற்கிறது. சில பொதுவான அகச்சுரப்பியல் நோய்களாக, நீரிழிவு, அதிதைராய்டியம், வளர்சிதைமாற்ற நோய்த்தொகை ஆகியன் அமைகின்றன. நீரிழிவு, எடைமிகைமை, இன்னும் பிற நாட்பட்ட நோய்களைக் கவனிப்பதற்கு, தனியரை ஆளளவிலும் சமூக அளவிலும் புரிந்துக் கொள்வதோடு, உடல்சார் மூலக்கூற்று மட்ட்டத்திலும் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது; மருத்துவர்-நோயாளி உறவும் மருத்துவச் செயல்பாட்டில் இன்றியமையாதது ஆகிறது.
நோயாளிகளுக்கு மருத்தவப்பணி செய்வதோடு, அகச்சுரப்பியல் வல்லுனர்கள் மருத்துவமனை அறிவியல் மருத்துவ ஆராய்ச்சி, கல்விபயிற்றுதல், மருத்துவமனை மேலாண்மை ஆகிய பயில்வுகளிலும் ஈடுபடுகின்றனர்.
அகச்சுரப்பியல் வல்லுனர்கள் அக மருத்துவம் அல்லது குழந்தை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெருகின்றன. இனப்பெருக்க அகச்சுரப்பியலாளர்கள் முதன்மையாகக் கருவுறுதலிலும் மாதவிடாய் நிகழ்விலும் பயிற்சி பெருமுன் மகப்பேரியலில் பயிற்சி பெறுகின்றனர். பெரும்பாலானோர் அக மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர் சில ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறுவர். இச்சிறப்புப் பயிற்சி களநிலைமைகளைப் பொறுத்தது. ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், மருத்துவப் படிப்பிற்குப் பிறகான அக மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் சார்ந்த வாரியச் ச்சான்றிதழுக்கான பயிற்சி உறைவிடப் பயிற்சி எனப்படுகிறது. மேலும் கூடுதலான அகவைமுதிர்ந்தோர், குழந்தை, இனப்பெருக்க அகச்சுரப்பியலுக்கான சிறப்புப் பயிற்சி ஆய்வுப் பயிற்சி எனப்படுகிறது. இவ்வாறு, ஒரு வட அமெரிக்க அகச்சுரப்பியல் வகைமைப் பயிற்சி 4 ஆண்டுகள் கல்லூரியிலும் 4 ஆண்டுகள் மருத்துவப் பள்ளியிலும் 2 ஆண்டுகள் உறைவிடப் பள்ளியிலும் 2 ஆண்டுகள் ஆய்வகப் பள்ளியிலும் அமைகிறது. ஐக்கிய அமெரிக்காவில், அகவைமுதிர்ந்தோர் அகச்சுரப்பியலாளர்கள் அமெரிக்க அகமருத்துவ வாரியச் (ABIM) சான்றிதழைப் பெறுவர் அல்லது அகச்சுரப்பியல், நீரிழிவு, வளர்ச் சிதை மாற்றம் சார்ந்த அமெரிக்க அகமருத்துவ என்புநோய் வாரியச் (AOBIM) சான்றிதழைப் பெறுவர்.[சான்று தேவை]
அகச்சுரப்பியல் அகச்சுரப்பு மன்டல நோய்களையும் ஆய்கிறது. மிகவும் குறைவாகவோஅல்லது மிகவும் கூடுதலாகவோ இயக்குமம் சுரத்தல், இயக்குமத்தின் மிகவும் குறைந்த அல்லது மிகவும் கூடுதலான செயல்பாடு, இயக்குமம் பெருவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை அகச்சுரப்பு மண்டல நோய்களை உருவாக்குகின்றன.
உட்சுரப்பியலில் பல நோய்களும் நோய் சார்ந்த கட்டுத்தளைகளும் உள்ளடங்கியிருப்பதால் பல நிறுவனங்கள் நோயாளிகளுக்கும் பொது மக்களுக்கும் இந்நோய்கள சார்ந்த அறிவுறைகளைக் கற்பிக்கின்றன. அகச்சுரப்பியல் கழகத்தின் ஓர் உறுப்பான இயக்குநீர் அறக்கட்டளை மக்கள் கல்விக்கான நிறுவனமாகச் செயல்படுகிறது. அமெரிக்க நீரிழிவு நோய்க் கழகம், தேசிய எலும்புப்புரை அறக்கட்டளை, மாந்த வளர்ச்சி அறக்கட்டளை, அமெரிக்க மாதவிடாய் அறக்கட்டளை, அமெரிக்கத் தைராய்டு அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அகச்சுரப்பு நோய்கள் அல்லது கோலாறுகள் சார்ந்த நிலைமைகளில் கவனம் செலுத்தும் கல்விசார் அமைப்புகள் ஆகும்.
அகச்சுரப்பியல் பல நோயகளையும் அதற்கான கட்டுத்தளைகளையும் கொண்டிருப்பதால், பொதுமக்கலுக்கும் நோயாளிகளுக்கும் கல்விதரும் பல நிறுவனங்கள் உள்ளன. அகச்சுரப்பியல் கழகத்தின் இயக்குநீர் அறக்கட்டளை பொதுமக்களுக்கு அனைத்து அகச்சுரப்பியல் கட்டுத்தளைகளைச் சார்ந்த தகவல்களைப் பற்றிய கல்வியை நல்குகிறது. அகச்சுரப்பியல் கட்டுத்தளைகளைச் சார்ந்த ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களில் கவனம் செலுத்தும் பிற நிறுவனங்களாக, அமெரிக்க நீரிழிவுக் கழகம், மாந்த வளர்ச்சி அறக்கட்டளை, அமெரிக்க மாதவிடாய் அறக்கட்டளை, அமெரிக்கத் தைராய்டு அறக்கட்டளை ஆகியன அமைகின்றன.[சான்று தேவை]
வட அமெரிக்காவில் முதன்மையான தொழில்முறை அகச்சுரப்பியலாளர் நிறுவனங்களாக, அகச்சுரப்பியல் கழகம்,[7] அமெரிக்க மருத்துவமனைசார் அகச்சுரப்பியலாளர் கழகம்(AACE)[8] அமெரிக்க நீரிழிவுக் கழகம்,[9] இலாவுசன் வில்கின்சு குழந்தை மருத்துவக் கழகம்,[10] அமெரிக்கத் தைராய்டுக் கழகம் ஆகியன அமைகின்றன.[11]
ஐரோப்பாவில், ஐரோப்பிய அகச்சுரப்பியல் கழகம் (ESE), the ஐரோப்பிய குழந்தை அகச்சுரப்பியல் கழகம் (ESPE) ஆகியன முறையே அகவைமுதிர்ந்தோர், குழந்தைகளுக்கான தொழில்முறை அகச்சுரப்பியல் புலங்களுக்கான முதன்மை நிறுவனங்களாக உள்ளன.
ஐக்கிய அரசில், அகச்சுரப்பியல் கழகம் [12] பிரித்தானியக் குழந்தை அகச்சுரப்பியல், நீரிழிவுக் கழகம்[13] ஆகியன முதன்மை தொழில்முறை நிறுவனங்களாக அமைந்துள்ளன.
ஐரோப்பியக் குழந்தை அகச்சுரப்பியல் கழகம்[14] குழந்தை அகச்சுரப்பியலுக்குப் பாடுபடும் மிகப்பெரிய பன்னாட்டு தொழில்முறை நிறுவனமாகும். உலகளவில் இதையொத்த பல கழகங்கள் உள்ளன.
அகச்சுரப்பியலின் தொடக்கநிலை ஆய்வு சீனாவில் தொடங்கியது.[15] கிமு 200 அளவிலேயே சீனர்கள் மாந்த சிறுநீரில் இருந்து அடிமூளைச் சுரப்பி இயக்குமத்தையும் பாலியல் சார்ந்த இயக்குமங்களையும் மருத்துவ நோக்கத்துக்காகப் பிரித்தெடுத்துள்ளனர்.[15] இவர்கள் இதற்காக பருவக இயக்குமங்களின் பதங்கமாதல் போன்ற பல சிக்கலான முறைகளைப் பயன்படுத்தினர்.[15] சீன நூல்கள் குறிப்பிடும் மற்றொரு முறை— கிபி 1110 அளவில் மிகவும் முதலில் முறை, இயக்குமங்களைப் பிரித்தெடுக்க கிளெடித்சியா சைனென்சிசு அவரையில் இருந்து பெற்ற சப்போனினைப் பயன்படுத்தலாகும்; மேலும், கால்சியம் சல்பேற்றுள்ள ஜிப்சமும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.[15]
பிரீமனும் அவர்து குழுவும் முன்வைக்கும் கூற்றின்படி, தொடக்கநிலை உடற்கூற்றியலாளர்கள் பெரும்பாலாமிழையங்கலையும்(திசுக்களையும்) அகச்சுரப்பியல் சுரப்பிகளையும் இனங்கண்டுள்ளனர். உயிரியல் செயல்பாடுகளையும் நோய்களையும் புரிந்துகொள்ள, கூடுதலான தாதுநீர் அணுகுமுறை பண்டைய கிரேக்க, உரோமச் சிந்தனையாளராகிய அரிசுட்டாட்டில், இப்போக்கிரட்டிசு, இலியூக்கிரெட்டியசு அவுலசு கார்னீலியசு செல்சசு, காலென் ஆகியவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[16] இந்தக் கோட்பாடுகள் 19 ஆம் நுற்றாண்டில் நோய்களுக்கான குறுமிக் கோட்பாடு, உடலியக்கவியல், நோய்க்கான உறுப்புசார் நோயியல் உருவாகும் வரையில் ஆளுமை செலுத்தியுள்ளன.
ஆர்னோல்டு பெர்த்தோல்டு 1849 இல் காயடிக்கப்பட்ட இளஞ்சேவல்களுக்குக் கொண்டையும் அலகுகளும் வளராமல் கூடுதல் ஆண்மைத் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்டார்.[17] பிறகு அவர் அதே இளஞ்சேவலுக்கோ அல்லது மற்றொரு காயடிக்க்கப்பட்ட இளஞ்சேவலுக்கு அதன் அடிவயிற்றில் விரைகளைப் பொருத்தியதும் அவற்றில் இயல்பான நடத்தையும் புறவுருவமும் மீள்வதைக் கண்டார். எனவே, விரைகள் சுரந்த பொருள் குருதியைப் பதப்படுத்தி(கட்டுப்படுத்திபுடலில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளார். உண்மையில், விரைகள் குறுதியின் ஒர்ர் உட்கூறை மாற்றவோ செயலூக்கமூட்டவோ செய்திருக்கலாம் அல்லது விரைகள் குருதியின் தடுப்புக் காரணியை அழித்திருக்கலாம் எனும் இருமுடிவுகளில் ஒன்று உண்மையாக இருக்கலாம். விரைகள் ஆண் பண்புகளுக்குக் காரணமான பொருட்களை வெளியிடுகின்றன என்பது விரைகளின் பிரித்தெடுத்த கூறொன்று காயடித்த விலங்குகளில் அவற்றின் செயல்பாட்டை மாற்றுகின்றன என இதுவரை நிறுவப்படவில்லை. தூய்மையான படிகநிலை ஆண்மைச் சுரப்பு இயக்குமம்(டெஸ்டிஸ்டீரோன்) 1935 ஆம் ஆண்டில் பிரித்தெடுக்கப்பட்டது.[18]
கிரேவெசு நோய் அயர்லாந்து மருத்துவரான இராபெர்ட்டு ஜேம்சு கிரேவெசு நினைவாகப் பெயரிடப்பட்டது,[19] இராபெர்ட்டு ஜேம்சு கிரேவெசு 1835 இல் குரல்வளைச் சுரப்பி புறத்தாலமசுடன் இருந்ததை விவரித்துள்ளார். செருமானியரான கார்ல் அடோல்ப் வான் பேசிதோவ் 1840 இல் இதே நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து அறிவித்துள்ளார். இந்நோய் பற்றிய இதற்கு முந்தைய அறிக்கைகளை குவிசெப்பி பிளயானியும் அந்தோனியோ குவிசெப்பி தெசுத்தோவும் முறையே 1802 இலும் 1810 இலும் வெஇட்டனர்.[20] மேலும், ஆங்கிலேய மருத்துவரும் எடுவார்டு ஜென்னரின் நண்பருமான காலெபு கில்லியர் பாரியும் இந்நோய் பற்றி 18 ஆம் நுற்றாண்டின் இறுதிய்ல் வெளிட்டுள்ளார்.[21] அடிசன் நோயை 1849 இல் தாமசு அடிசன் தான் முதன்முதலில் விவரித்தவர் ஆவார்.[22]
இடைக்காலப் பாரசீகத்தில் அவிசென்னா (Avicenna) (980-1037) மருத்துவ வரன்முறைகள்(1025) எனும் நீரிழிவு நோய் குறித்து விளக்கியுள்ளார். அதில் அவர் "நீரிழிவு நோயாளிகளில் இயல்பற்ற சாப்பாட்டு விருப்பம், பாலியல் செயல்பாடுகளில் குழப்பம் ஆகியவற்றை விவரித்திருந்தார். மேலும் அவர் நீரிழிவு நோயாளியின் சிறுநீரில் சர்க்கரை இருப்பதையும் ஆவணப்படுத்தியிருந்தார்." காப்பதோசியா நகரத்து அரித்தேயசு போல அவருக்கு முன்பேயே அவிசென்னா முதன்மை, இரண்டாம் நிலை நீரிழிவு நோயை அடையாளம் கண்டார். மேலும் அவர் நீரிழிவு இழைய அழுகலையும் விவரித்திருந்தார். மேலும் லூபின், ட்ரைகோனெல்லா (ஃபெனுக்ரீக்), ஜெடோரி விதை ஆகியவற்றின் கலவையைக் கொண்டு நீரிழிவு நோய்க்கு மருத்துவம் செய்தார். அது சர்க்கரையின் வெளியேற்றத்தைக் கணிசமான அளவில் குறைத்தது. இம்மூறை இன்றைய உலகிலும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அவிசென்னா "முதன் முதலில் வெற்று நீரிழிவு குறித்து மிகவும் துல்லியமாக விவரித்திருக்கிறார்". எனினும் பின்னர் யோகான் பீட்டர் பிராங்கு (Johann Peter Frank) (1745-1821) முதன் முதலில் நீரிழிவு நோய், வெற்று நீரிழிவு நோய்க்குக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்தார்.[23]
முசுலிம் மருத்துவரான ஜாய்ன் அல்தின் அல்ஜுர்ஜானி 12 ஆம் நூற்றாண்டில் கிரேவெசு நோய் குறித்து முதன் முதலில் விவரித்திருந்தார். மேலும், இவர் தைராய்டு வீக்கம் விழிபிதுக்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்தும் தெசாரஸ் ஆஃப் த சா ஆஃப் காவராச்ம் எனும் நூலில் குறிப்பிட்டிருந்தார். இது அவரது காலத்தில் முதன்மையான மருத்துவக் கலைக்களஞ்சியமாக இருந்தது.[24][25] அல்ஜூர்ஜானி தைராய்டு வீக்கம், நெஞ்சுத்துடிப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.[23] இந்த நோய் பின்னர் அயர்லாந்து மருத்துவரான இராபர் ஜேம்ஸ் கிரேவிசு (Robert James Graves) பெயரால் அழைக்கப்பட்டது.[26] 1835 ஆம் ஆண்டில் விழிபிதுக்கத்துடன் தைராய்டு வீக்கத்தின் நிலையையும் அவர் விவரித்திருந்தார். 1840 ஆம் ஆண்டில் ஜெர்மனைச் சேர்ந்த கார்ல் அடோல்ப் வான் பேசிதோவும் கூட (Karl Adolph von Basedow) இதே அறிகுறிகளின் தொகுப்பைக் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் இந்த நோயின் தொடக்க கால அறிக்கைகள் 1802 ஆம் ஆண்டிலும் 1810 ஆம் ஆண்டிலும் முறையே இத்தாலியைச் சேர்ந்தவர்களான குவிசெப்பெ பிளயானி (Giuseppe Flajani), அந்தோனியோ குவிசெப்பே தெசுத்தா ஆகியோராலும் வெளியிடப்பட்டன.[27] மேலும் 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மருத்துவரும் எடுவார்டு ஜென்னரின் நண்பருமான காலெப் கில்லியர் பாரியாலும் விவரிக்கப்பட்டது.[28]
1902 ஆம் ஆண்டில் பேலிசும் சுட்டார்லிங்கும் மேற்கொண்ட சோதனையில் முன்சிறுகுடலினுள் அமிலத்தினைச் சொட்டு சொட்டாக விடும் போது கணையம் சுரக்கத் தொடங்குவதைக் கண்டனர். அப்போது இந்த இரண்டுக்கும் இடையில் அனைத்து நரம்பு இணைப்புகளையும் கூட நீக்கிவிட்டாலும் கணையச் சுரப்பு தொடர்வதைக் கண்டனர்.[29] தொண்டைக் குருதிச் சிரையில் நடுச்சிறுகுடல் மென்படலக் கோழையில் இருந்து பிரித்தெடுத்த சாரத்தைச் செலுத்திய போதும் இதே போன்ற வினை நிகழ்ந்தது. அதில் மென்படலக் கோழையின் சில காரணிகள் வினைபுரிவது வெளிப்பட்டது. அவர்கள் இந்த பொருளுக்கு "சுரப்புமம்" என்று பெயரிட்டனர். மேலும் இதே போலச் செயல்படும் வேதிமங்களை இயக்குநீர் எனவும் பெயரிட்டு அழைத்தனர்.
1889 ஆம் ஆண்டில் வான் மெரிங்கும்(Von Mering) மெங்கோவுசுகியும் (Minkowski) கணையம் அறுவை வழி நீக்கப்பட்டால் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து அதனைத் தொடர்ந்து புலன்மரத்தல் நிலையும் பின்னர் சாவும் நேர்வதைக் கண்டனர். 1922 ஆம் ஆண்டில் பேண்டிங்கும் (Banting) பெசுட்டும் (Best) கணையங்களை ஓரியல்புப் படுத்திக் கொணர்ந்த கரைசலை உட்செலுத்துதல் வழியாக இந்நிகழ்வு எதிர்த்திரும்புதலைக் கண்டனர்.[30] இயக்குநீரான இன்சுலின் 1953 ஆம் ஆண்டு ஃபிரெடரிக் சாங்கரால் (Frederick Sanger) கண்டுபிடிக்கப்பட்டது. நரம்பு இயக்குமங்கள் 1921 ஆம் ஆண்டில் முதன் முதலில் ஆட்டோ உலோயவியால் கண்டறியப்பட்டது.[31] அவர் தவளையின் இதயத்தை (அதன் மூளை நரம்பு இணைப்புடன் சேர்த்து) உப்புக்கரைசலில் விட்டுவைத்தார். அந்தக் கரைசலைப் பின்னர் மூளை நரம்பு இணைக்கப்படாத இரண்டாவது இதயத்துக்குப் பயன்படுத்தினார். முதல் இதயத்தின் மூளை நரம்பு தூண்டப்பட்டால் இரண்டு இதயங்களிலும் தசை ஊட்டத் துடிப்பு வீச்சும், காலமாறும் துடிப்பு வீதமும் ஆகிய செயல்பாடுகள் காணப்பட்டன. இரண்டு இதயங்களிலும் ஒருங்கே மூளை நரம்பு தூண்டப்பட்டபோது இச்செயல்கள் ஏற்படவில்லை. மூளை நரம்பு உப்புக் கரைசலில் சில செயல்தடுப்புப் பொருட்களைக் கொண்டிருந்துள்ளது. இந்த விளைவை இதய மூளை நரம்புத் தூண்டலைத் தடுக்கும் இயல்புள்ள அத்திரோபீனைப் பயன்படுத்தியும் தடுக்க முடிந்தது. மூளை நரம்பின் மூலமாக ஏதோ ஒரு வேதிப்பொருள் சுரந்து அது இதயத்தைக் கட்டுறுத்துவது தெளிவாக தெரிந்தது. இந்த தசை ஊட்ட, காலமாற்ற விளைவுகளுக்குக் காரணமான இந்த மூளை நரம்பு சுரந்த பொருள்கள் பின்னர் அசெட்டைல்கோலைனும் நார் எப்பிநெப்ரினுமே எனக் கண்டறியப்பட்டன. உலோயவி அவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசை வென்றார்.
அகச்சுரப்பியலின் அண்மையப் பணி இயக்குமங்களின் விளைவுகளைத் தொடங்கிவைக்கும் மூலக்கூறு இயங்கமைப்புகளைக் கண்டறிவதில் கவனம் குவிக்கிறது. இவ்வகைப் பணியின் முதல் எடுத்துக்காட்டாக, 1962 ஆம் ஆண்டு இயர்ள் சதர்லாந்தால் (Earl Sutherland) மேற்கொள்ளப்பட்டஆய்வு அமைந்தது. சதர்லாந்து இயக்குமங்கள் தம் நடவடிக்கையை உயிர்க்கலத்தின் உள்ளிருந்து செய்கின்றனவா அல்லது அவற்றின் புறத்தே இருந்து செய்கின்றனவா என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். கல்லீரலில் கிளைகோஜனை பாசுவரநொதியின் செயலூக்கத்தால் குளுக்கோசாக மாற்றும் நார் எப்பி நெப்ரின் மீது ஆய்வு இவரது ஆய்வு அமைந்தது. இவர் கல்லீரலை மென்படல வடிப்பு, கரையத்தக்க வடிப்பு (பாசுவரநொதி கரையத்தக்கது) ஆகியவற்றால் ஓரியல்புப்படுத்தி, மென்படல வடிப்பில் நார் எப்பி நெப்ரினைக் கலந்து. பிறகு அதன்வழி கிடைக்கும் கரைபொருட்களின் சாரத்தினை எடுத்து அதனை முதலாவது கரையத்தக்க வடிப்பில் இட்டார். இந்த ஆய்வால், பாசுவரநொதியைச் செயலூக்கப்படுத்திய நார் எப்பி நெப்ரினின் இலக்கு, ஏற்பியின் உயிர்க்கல மென்படலத்தில் இருப்பதையும் உயிர்க்கலத்தினுள் அல்ல என்பதையும் கண்டறிந்தார். அவர் பின்னர் அந்த வேதிச் சேர்மம் சுழற்சிவகை AMP (cAMP) எனக் கண்டறிந்தார். மேலும் இவரது கண்டுபிடிப்பு துணைத் தூதுச் செயலூக்கக் கருத்துருவுக்கான வழித்தடத்தை உருவாக்கியது. உலோயவி போன்றே இவரும் அகச்சுரப்பியலில் தனது சிறப்புப் பணிகளுக்காக நோபல் பரிசினை வென்றார்.[32]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.