ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரம் ஆனது சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் இதுவே ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப் பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரம் சுவீடன் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரைப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் ஸ்டாக்ஹோம் நகரம் ஸ்டாக்ஹோம்ஸ் ஸ்ராட், நாடு ...
ஸ்டாக்ஹோம் நகரம்
ஸ்டாக்ஹோம்ஸ் ஸ்ராட்
நாடுசுவீடன்
மாநகரசபைகள்
11
  • Stockholm Municipality
  • Huddinge Municipality
  • Järfälla Municipality
  • Solna Municipality
  • Sollentuna Municipality
  • Botkyrka Municipality
  • Haninge Municipality
  • Tyresö Municipality
  • Sundbyberg Municipality
  • Nacka Municipality
  • Danderyd Municipality[1]
கவுண்டிஸ்டாக்ஹோம் கவுண்டி
மாகாணங்கள்Södermanland and Uppland
First mention1252
Charter13வது நூற்றாண்டு
அரசு
  நகரபிதாஸ்டென் நோர்டின் (m)
பரப்பளவு
  நகர்ப்புறம்
377.30 km2 (145.68 sq mi)
மக்கள்தொகை
 (2008)[2]
  நகரம்7,98,715 ( Source: www.scb.se)
  அடர்த்தி4,230/km2 (11,000/sq mi)
  நகர்ப்புறம்
12,52,020
  நகர்ப்புற அடர்த்தி3,318/km2 (8,590/sq mi)
  பெருநகர்
19,49,516
நேர வலயம்ஒசநே+1 (CET)
  கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
இணையதளம்www.stockholm.se
மூடு
ஸ்டாக்ஹோமின் முதன்மை படிமம்

புவியியல்

ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன குங்ஸோல்மென் (Kungsholmen), சொடர்மல்ம் (Södermalm), நொர்மல்ம்(Norrmalm), மற்றும் ஒஸ்டர்மல்ம் (Östermalm) என்பவையாகும். குங்ஸோல்மென் மற்றும் சொடர்மல்ம் என்னும் இரண்டும் தீவுகளாகும். இங்க்கு பற்பல தீவுகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பற்பல தீவுகளும் பாலங்களால் இணைக்கப்பட்டே இருக்கின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்திய பகுதியில் மட்டும் பதினான்கு தீவுகள் காணப்படுகின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் 30% வீததிற்கும் மேலதிகமான பகுதி நீர் வழியினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. மற்றைய 30% வீதப் பகுதியும் பூங்காக்களாலும் புல்வெளிகளாலும் மூடப்பட்டுள்ளது.

கம்லா ச்டான் (Gamla Stan) எனும் நகரமே ஸ்டாக்ஹோம் நகரத்தின் மிகவுய்ம் பழமை வாய்ந்த பகுதியாகும், அதாவது பழமையான நகரம் ஆகும்.

இதன் சராசரியான வருடாந்த வெப்பநிலை 10 °C (50 °F) ஆகும். ஸ்டாக்ஹோம் நகரத்தின் சராசரியான வருடாந்த மழைவீழ்ச்சி முப்பது தொடக்கம் அறுபது வரையியான இன்ஞ்சஸ் ஆகும்.

கல்வி

விஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப் படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது 1811 ஆம் ஆண்டில் கரோலின்ஸ்கா மையமாக இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஸ்காண்டிநேவியா எனும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனமே ஸ்டாக்ஹோமில் உள்ள மாபெரும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனம் ஆகும். ஸ்காண்டிநேவியா தொழினுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 13,000 மாணவர்கள் மட்டில் கல்வி கற்கின்றனர்.

ஸ்டாக்ஹோமின் மக்கள் வகைப்பாடு

சுவீடனின் மொத்த சனத்தொகையில் ஸ்டாக்ஹோமின் சனத்தொகை 22% வீதமாகக் காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் ஸ்டாக்ஹோம் நகரத்தினால் சுவீடனுக்கு 29% வீத வருமானம் கிடைக்கின்றது.

ஸ்டாக்ஹோம் நகரத்தின் சனத்தொகை (ஆண்டுகள் வாரியாக)

மேலதிகத் தகவல்கள் வருடம், சனத்தொகை ...
வருடம் சனத்தொகை
15709,100
16108,900
163015,000
165035,000
169055,000
173057,000
175060,018
177069,000
180075,517
181065,474
182075,569
183080,621
184084,161
185093,070
1860113,063
1870136,016
1880168,775
1890246,454
1900300,624
1910342,323
1920419,429
1930502,207
1940590,543
1950745,936
1960808,294
1970740,486
1980647,214
1990674,452
2000750,348
2010847,073
2012871,952
மூடு

அருங்காட்சியகங்கள்

Thumb
சுவீடனின் தேசிய அருங்காட்சியகம்

ஸ்டாக்ஹோம் நகரம் உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் பற்பல உள்ள அருங்காட்சியக-நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் 100 மட்டில் உள்ள்ன, இங்கு பல மில்லியன் கணக்கான மக்களும் ஒவ்வொரு ஆண்டும் வந்து போவார்கள்.

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், ஸ்டாக்ஹோம், மாதம் ...
தட்பவெப்ப நிலைத் தகவல், ஸ்டாக்ஹோம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -0.7
(30.7)
-0.6
(30.9)
3.0
(37.4)
8.6
(47.5)
15.7
(60.3)
20.7
(69.3)
21.9
(71.4)
20.4
(68.7)
15.1
(59.2)
9.9
(49.8)
4.5
(40.1)
1.1
(34)
10.0
(50)
தாழ் சராசரி °C (°F) -5.0
(23)
-5.3
(22.5)
-2.7
(27.1)
1.1
(34)
6.3
(43.3)
11.3
(52.3)
13.4
(56.1)
12.7
(54.9)
9.0
(48.2)
5.3
(41.5)
0.7
(33.3)
-3.2
(26.2)
3.6
(38.5)
பொழிவு mm (inches) 39
(1.54)
27
(1.06)
26
(1.02)
30
(1.18)
30
(1.18)
45
(1.77)
72
(2.83)
66
(2.6)
55
(2.17)
50
(1.97)
53
(2.09)
46
(1.81)
540
(21.26)
சராசரி பொழிவு நாட்கள் 18 15 13 11 11 12 15 14 15 14 17 18 173
சூரியஒளி நேரம் 40.3 73.5 136.4 186.0 275.9 291.0 260.4 220.1 153.0 99.2 54.0 34.1 1,823.9
Source #1: World Meteorological Organisation[3]
Source #2: Hong Kong Observatory[4]
மூடு
Thumb
ஸ்டாக்ஹோமின் பரந்ததோற்றம்

இணைப்புகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.