புல்வெளி
From Wikipedia, the free encyclopedia
புல்வெளி அல்லது புன்னிலம் என்பது பரந்துவிரிந்த ஓரளவு தட்டையான புல் நிலப்பகுதியாகும். சில மில்லிமீற்றர் உயரப் புற்கள் முதல் 2.1 மீற்றர் உயரமும் 1.8 மீற்றர் வேர்நீளமும் கொண்ட புற்கள் ஈறாகப் பலவகையான புற்களைக் கொண்ட புல்வெளிகள் உலகில் காணப்படுகின்றன.

புல்வெளி என்பது புற்கள் மற்றும் மரம் அல்லாத சிறு தாவரஙகள் வாமும் இடமாகும்.[1] புல்வெளியானது சூழ்நிலையியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புல்வெளியில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் செழித்து வாழ்கிறது. ஏனெனில், அவ்வாழிடம் திறந்த வெளியாகவும், சூாிய வெளிச்சம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் நன்றாக ஈர்த்துக்கொள்ளும் படியும் அமைந்துள்ளது. இதே போன்ற தட்பவெப்பம் வேறு எங்கும் காணமுடியாது. புல்வெளியானது இயற்கையாக காணப்படும் அல்லது செயற்கையான முறையில் புதர்செடிகள் அல்லது மரவகைகளை அழித்துவிட்டு கூட அமைக்கலாம். புல்வெளிகளில் தாவரங்கள் போதுமான அளவில் இருந்தால் பலவிதமான வனவிலங்கு கூட்டத்தை பெருக்குவதுடன், விலங்குகள் இணை சேர்வதற்கான இடமாகவும், கூடு கட்டுவதற்கு, உணவு சேகாிப்பதற்கு மற்றும் சில நேரங்களில் வாழிடமாகவும் அமைகிறது. நிறைய புல்வெளிகளில் பரந்த வாிசையில் காட்டுமலர்கள் காணப்படுகின்றன இவை மகரந்தசேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கையில் ஈடுபடக்கூடிய புசிசியினங்கள் தேனீகள் போன்றகற்றை கவர்ந்திழுக்கப் பயன்படுகின்றன. மேலும் அந்த சூழ்நிலையியல் முழுவதும் மகரந்தசேர்க்கை நடைபெற உதவுகின்றன. விவசாயத்தில், புல்வெளி என்பது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளால் வழக்கமாக மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் கால்நடைகளானது தேவையற்ற தாவரங்கள் உற்பத்தி ஆகாமல் தாவரங்களை தடையின்றி வளர அனுமதிக்கிறது. விவசாயம்
வேளாண்மை
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மற்றும் அயர்லாந்தில், புல்வெளி என்பது காய்ந்த வைக்கேலையும் பசும்புல் வெளி நிலத்தினையும் குறிக்கிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் காய்ந்த புல்லாக காணப்படுகிறது. வேளாண்மை செய்யக்கூடிய புல்வெளியானது பொதுவாக தாழ்ந்த பகுதிகள் அல்லது உயர்ந்த விளை நிலங்களிலும் காணப்படுகிறது. அதற்கும் மேலே மேய்ச்சல் புற்கள் காணப்படுகின்றன. இவை தானாகவே முளைக்கிறது அல்லது கைகளால் விதைக்கப்படுகிறது. பழங்காலத்தில் வைக்கோல் புல்லானது இங்கிலாந்து கிராமங்களில் காணப்பட்டது ஆனால் தற்போது குறைந்து விட்டது. சூழ்நிலையாளர் பேராசிாியர் சான் சாட்வெல் என்பவர் கூறியதாவது கடந்த நுாற்றாண்டுகளில் இந்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் 97 சதவீதம் புல்வெளியை இழந்துள்ளது [2] என்கிறார். 3 சதவீதத்திற்கும் மிகக் குறைவான 15.000 ஏக்கர் நிலம் மட்டுமே ஐக்கிய நாடுகள் மற்றும் நிறைய பகுதிகளில் சிறு சிறு துண்டுகளாக காணப்படுகின்றன. 25 சதவீத புல்வெளியானது வெர்சென்டர்சயரில் உள்ளது. வெர்சென்டர்சயர் வன உயிாிகள் அறக்கட்டளையின் மூலம் இது முக்கிய பகுதியாக பாதுகாக்கப்படுகிறது.
பாரம்பரியமான புல்வெளி
பாரம்பரியமான புல்வெளி எங்கு காணப்படுகிறது என்றால் விளைநிலங்கள், மேய்சல் நிலங்கள், துாய்மையாக சுத்தம் செய்யப்பட்டாத போன்ற நிலங்களில் நீண்ட நாட்கள் வெட்டப்படாத அல்லது மேய்ச்சலுக்கு உட்படுத்தப்படாத நிலங்களில் புற்கள் அமோகமாக வளர்ந்து காணப்படும். இவை பூத்து தானாகவே விதைகளைப் பரப்புகின்றன. இவை காட்டுப் பூக்களை உடைய சிற்றினமாக கருதப்படுகிறது.[3] இந்த நிலையானது தற்காலிகமானதே, ஏனெனில் புற்கள் உண்மையிலேயே புதர்களும் மர வகைத் தாவரங்களும் நன்கு வளர்ந்து விடும் சூழ்நிலையில் தானாகவே கருகத் தொடங்குகின்றன.[4] இந்நிலை தற்காலிகமானது தான், ஏனெனில் புற்களானது புதர்கள் மற்றும் மரங்களின் நிழலாலும் மறைக்கப்படுகிறது. பாரம்பாிய முறைப்படி செயற்கையாக இரு விளைநிலம் சாகுபடி முறை பின்பற்றப்படுகிறது. இதில் மண் வளபராமாிப்பும் மற்றும் புல்வெளி மாறிமாறி 10 முதல் 12 வருடம் பாதுகாக்கப்படுகிறது.[3]
நிரந்தர புல்வெளி
நிரந்தர புல்வெளி, இயற்கையான புல்வெளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்புல்வெளிக்கு சூழ்நிலைக் காரணிகளான தட்பவெப்பம் மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப எப்பொழுதும் நிரந்தரமாக காணப்படுகிறது. இதன் வளர்ச்சியானது மரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.[5] நிரந்தர புல்வெளியின் வகைகள்: ஆல்பைன் புல்வெளியானது மிக உயர்ந்த பகுதிகளில் அதாவது மரங்களின் உயதத்திற்கு மேல் உயரம்
- அதிகம் உள்ள இடங்களிலேயே காணப்படுகிறது. இவை மிக கடுமையான தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரக்கூடியது.
- கடற்கரை புல்வெளியானது கடலேரங்களில் கடல் நீரால் பாதுகாக்கப்படுகிறது.
- பாலைவன புல்வெளியானது தாழ்வான படிவுகளில் அல்லது மிகக் குறைந்த சத்துப்பொருட்கள் மற்றும் ஈரப்பதத்தையும் கொண்டது.
- சதுப்புநில புல்வெளியானது கடுமையான வறட்சி மற்றும் காட்டு தீ ஏற்படும் போதும் பாதுகாக்கப்படுகிறது.
- ஈரபுல்வெளி, நீர் வருடம் முழுவதும் அதிக அளவில் காணப்படக்கூடிய இடங்களில் உள்ளது.
- ஆல்பைன் புல்வெளி உத்தரகாண்ட், இந்தியா (மேற்கு இமாலையாம்).
- பாலைவன புல்வெளி வாலா வாலா, வாசிங்டன், வாசிங்டன் அமொிக்கா.
- சதுப்புநில புல்வெளி ஓரகன், அமொிக்கா.
- இயற்கை புல்வெளி பைகல் ஏாி, ரசியா.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.