From Wikipedia, the free encyclopedia
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Mas; ஆங்கிலம்: Pasir Mas Federal Constituency; சீனம்: 巴西马国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P022) ஆகும்.[6]
பாசிர் மாஸ் (P022) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Pasir Mas (P022) Federal Constituency in Kelantan | |
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி (P022 Pasir Mas) | |
மாவட்டம் | பாசிர் மாஸ் மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 94,755 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | பாசிர் மாஸ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, குபாங் கிரியான், பாசிர் மாஸ், கெத்தேரே, பாசிர் பூத்தே, பாச்சோக் |
பரப்பளவு | 176 ச.கி.மீ |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமத் பட்லி சாரி (Ahmad Fadhli Shaari) |
மக்கள் தொகை | 113,476 (2020)[2] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1955 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[3] |
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1955-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
பாசிர் மாஸ் நகரம் கிளாந்தான் மாநிலத்தில்; பாசிர் மாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 14 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 434 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பாசிர் மாஸ் கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். 1918-ஆம் ஆண்டில், பாசிர் மாஸ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோத்தா பாரு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டன. பின்னர் அந்தப் பகுதிகளுக்கு என பாசிர் மாஸ் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8]
பாசிர் மாஸ் நகரம் தாய்லாந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் பாசிர் மாஸ் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.பாசிர் மாஸ் நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அதன் பெயர் பாசிர் மாஸ் தொடருந்து நிலையம். இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களை இணைக்கிறது.
பாசிர் மாஸ் மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் பாசீர் மாஸ் நகரம் ஆகும்.[9] இந்த மாவட்டத்தின் வடக்கில் தும்பாட் மாவட்டம் (Tumpat District); கிழக்கில் கோத்தா பாரு மாவட்டம் (Kota Bharu District); தெற்கில் தானா மேரா மாவட்டம் (Tanah Merah District); மற்றும் தாய்லாந்து நாட்டின் சுங்கை கோலோக் மாவட்டம் ஆகிய நிலப்பகுதிகள் எல்லைகளாக உள்ளன.
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1955-ஆம் ஆண்டில் கோத்தா பாரு தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | 1955–1959 | தெங்கு அகமத் தெங்கு சாபர் (Tengku Ahmad Tengku Ja'afar) |
மலேசிய கூட்டணி (அம்னோ) | |
பாசிர் மாஸ் தொகுதி (பாசிர் மாஸ் ஈலிர்; பாசிர் உலு) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது | ||||
மலேசிய மக்களவை | ||||
பாசிர் மாஸ் ஈலிர் தொகுதியில் இருந்து பாசிர் மாஸ் தொகுதி உருவாக்கம் | ||||
4-ஆவது மக்களவை | P018 | 1974–1978 | தெங்கு சாயிட் தெங்கு அகமத் (Tengku Zaid Tengku Ahmad) | பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | அப்துல் ரகுமான் தாவூத் (Abdul Rahman Daud) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | வான் இப்ராகீம் வான் அப்துல்லா (Wan Ibrahim Wan Abdullah) | மலேசிய இசுலாமிய கட்சி | |
7-ஆவது மக்களவை | P020 | 1986–1990 | இப்ராகீம் அலி (Ibrahim Ali) | பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | செமாங்காட் 46 | ||
9-ஆவது மக்களவை | P022 | 1995–1999 | சைனுதீன் முகமது நோர் (Zainuddin Mohamad Nor) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | இசுமாயில் நோ (Ismail Noh) | மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
12-ஆவது மக்களவை | 2008 | இப்ராகீம் அலி (Ibrahim Ali) | பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
2008–2013 | சுயேச்சை | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | நிக் முகமது நிக் அப்துல் அசீஸ் (Nik Mohamad Nik Abdul Aziz) | பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2020 | அகமத் பட்லி சாரி (Ahmad Fadhli Shaari) | PAS | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 94,544 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) | 79,028 | 68.91% | - 8.76% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) | 65,153 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) | 173 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) | 819 | ||
பெரும்பான்மை (Majority) | 30,717 | 47.14% | + 22.72 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |
கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | அகமத் பட்லி சாரி (Ahmad Fadhli Shaari) |
65,153 | 44,444 | 68.21% | + 15.77% | |
பாரிசான் நேசனல் | அப்துல் கனி அருண் (Abdul Ghani Harun) |
- | 13,727 | 21.07% | - 6.95% | |
பாக்காத்தான் அரப்பான் | உசாம் மூசா (Husam Musa) |
- | 6,439 | 9.88% | - 0.37 % | |
பூமிபுத்ரா கட்சி | நசுருல் அசன் லத்தீப் (Nasrul Ali Hassan Abdul Latif) |
- | 543 | 0.83% | + 0.83% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.