தமிழ் மொழியின் 18 மெய்யெழுத்துக்களுள், வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia
த் (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபதாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "தகர மெய்" அல்லது "தகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும் போதும் இவ்வெழுத்தை "இத்தன்னா" என வழங்குவர்.
தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் த் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் த் வல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வன்மையான ஓசை உடையது ஆதலால் வல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது த், ந் என்னும் இரண்டும் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்த உருவாவதால் த், ந் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.