ஜெத்கரே இசேசி
From Wikipedia, the free encyclopedia
ஜெத்கரே இசேசி (Djedkare Isesi) எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் எட்டாவது பார்வோன் ஆவார். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை கிமு 2436 முதல் கிமு 2404 முடிய 32 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவருக்குப் பின் உனாஸ் அரியணை ஏறினார்.
ஜெத்கரே இசேசி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ஜெத்கரே இசேசியின் குறுங்கல்வெட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 2436 - கிமு 2404 முடிய 32 ஆண்டுகள், ஐந்தாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மென்கௌஹோர் கையூ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | உனாஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | சேத்திப்ஹோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | நெசெர்கௌஹோர் ♂, கேகேரெத்நெப்தி ♀, மீரத்-இசேசி♀, ஹெட்ஜெத்நெபு♀, நெப்திமெப்ரெஸ் ♀ ரயிம்கா♂,கேயும்த்ஜென்னென்ட்♂, இசேசி-ஆங்க்♂ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | ஜெத்கரே இசேசியின் பிரமிடு, சக்காரா |
பார்வோன் ஜெத்கரே இசேசி ஆட்சியின் போது, மத்திய கிழக்கின் லெவண்ட் கடற்கரை நகரங்களுடன் வர்த்தக உறவுகளை பேணினார். மேலும் கானானில் தண்டனைத் தாக்குதல்களை நடத்தினார். சக்காரா நகரத்தில் உள்ள பிரமிடில் ஜெத்கரே இசேசியின் மம்மி அடக்கம் செய்யப்பட்டது. தற்போது இப்பிரமிடு பாழடைந்துள்ளது.
1940களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது, புதைகுழியில் ஜெத்கரே இசேசியின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. மம்மியை பரிசோதித்ததில் அவர் தனது ஐம்பதாவது வயதில் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர் எகிப்திய மக்களின் ஒரு வழிபாட்டின் பொருளாக இருந்தார். இந்த வழிபாடு, பழைய இராச்சியத்தின் இறுதி வரை நீடித்தது. ஆறாவது வம்சத்தின் நடுப்பகுதியில் அவர் குறிப்பாக உயர் மதிப்பிற்குரியவராகத் தோன்றினார். தொல்பொருள் சான்றுகள் ஜெத்கரே இசேசியின் இறுதி சடங்குகள், புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 - கிமு 1077) காலம் வரை தொடர்ந்தது.
படக்காட்சிகள்
- கேக்கரத்நெப்தி மற்றும் நெசெர்கௌஹோர் மரச்சிலைகள்
- ஜெத்கரே இசேசி கொண்டாடிய முதல் சேத் திருவிழாவின் குறிப்புகள் கொண்ட குடுவை
- ஜெத்கரே இசேசி நிறுவிய பார்வோன் தாஹோதேப்பின் இரண்டு சிலைகள்
- பார்வோன்கள் ஜெத்கரே இசேசி மற்றும் மென்கௌஹோர் கையூ உருவங்கள் பொறித்த தங்கத்திலான உருளை முத்திரை
- ஜெத்கரே இசேசி நிறுவிய செசென்த்ஜெமிப் இண்டியின் பெரிய மஸ்தபா
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.