அசைல் சயனைடு

வேதி வினைக்குழுவின் ஒரு வகை From Wikipedia, the free encyclopedia

அசைல் சயனைடு

அசைல் சயனைடு (Acyl cyanide) என்பது R−C(O)CN என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாடும் R−C(=O)−C≡N என்ற கட்டமைப்பு வாய்ப்பாடும் கொண்ட கரிம வேதியியல் வேதி வினைக்குழுவாகும். அசைல் குழுவுடன் (R−C=O) ஒரு சயனைடு குழு (−C≡N) சேர்ந்து அசைல் சயனைடு உருவாகிறது. அசிட்டைல் சயனைடு, பார்மைல் சயனைடு, மற்றும் ஆக்சாலைல் இருசயனைடு என்பவை அசைல் சயனைடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் இவை வினையாக்கிகளாகப் பயன்படுகின்றன.[1][2]

Thumb
அசைல் சயனைடின் பொதுவான வேதியியல் கட்டமைப்பு

தயாரிப்பு

பாரம்பரியமாக சோடியம் சயனைடுடன் அசைல் குளோரைடு உப்பைச் சேர்த்து இரட்டைச் சிதைவு வினைக்கு உட்படுத்தினால் அசைல் சயனைடு உருவாகிறது:

மாறாக அசைல் ஆல்டாக்சிமை நீர்நீக்க வினைக்கு உட்படுத்தியும் அசைல் சயனைடை தயாரிக்கலாம்:

கீட்டீன்களை ஐதரோசயனேற்றம் செய்தும் அசைல் சயனைடை தயாரிக்க முடியும்:

வினைகள்

அசைல் சயனைடுகள் இலேசான அசைலேற்ற முகவர்களாகும்.[2] நீரிய காரத்துடன் வினையில் ஈடுபட்டால் அசைல் சயனைடுகள் சயனைடு மற்றும் கார்பாக்சிலேட்டாக உடைகின்றன[3]

அசைடுகளுடன் அசைல் சயனைடுகள் வினைபுரிந்து அசைல் டெட்ரசோல் உருவாகிறது. இவ்வினை கிளிக்கு வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.