From Wikipedia, the free encyclopedia
கரிம வேதியியலில் வேதி வினைக்குழு அல்லது தொழிற்பாட்டுக் கூட்டம் (இலங்கை வழக்கு) என்பது ஒரு சேர்மம் அது வேதி வினைகளில் பங்குகொள்ளும் பொழுது தொழிற்படும் அச் சேர்மத்தின் பகுதியாக உள்ள ஒரு சில குறிப்பிட்ட அணுக்களைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு ஆக்சிசனும் ஓர் ஐதரசனும் சேர்ந்த OH என்னும் அணுக்கள் ஐதராக்சைல் (hydroxyl) குழு (வேதி வினைக்குழு) எனப்படுகின்றது. இந்த ஐதராக்சைல் குழு பல ஆல்க்கஃகாலில் காணப்படுகின்றது. ஒரு சேர்மத்தின் உள்ள வினைக்குழு, அது இருக்கும் சேர்மத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியான வேதி வினைகளுக்கு உட்படுகின்றன. [1][2]. ஆனால் அது வினைப்படும் திறம் அருகில் உள்ள மற்ற வினைக்குழுக்களைப் பொருத்தும் அமையும்.
மோயிட்டி (moiety) என்று ஒரு கலைச்சொல்லும் அடிக்கடி இந்த வேதி வினைக்குழுவுக்கு ஈடாகப் பயன்பாடுகின்றது, ஆனால் மோயிட்டி என்னும் சொல் ஒரு சேர்மத்தின் ஒரு பகுதி என்பது மட்டுமே. ஐயுபிஏசி(IUPAC)யின் வரையறையின்,[3] படி மோயிட்டி என்பது ஒரு சேர்மத்தின் பாதி. இதில் அதன் உள் அமைப்புகளும், வேதி வினைக்குழுக்களும் அடங்கும். எடுத்துக்காட்டாக ஒரு எசுத்தரை இரு பகுதிகளாக (மோயிட்டிகளாக) பிரிக்கலாம் - ஆல்க்கஃகால் மோயிட்டி (alcohol moiety), அசைல் மோயிட்டி (acyl moiety), ஆனால் எசுத்தர் வினைக்குழு கொண்டுள்ளது. ஈடாக வேறு விதமாக எண்ணினால், கார்பாக்சலேட் (carboxylate), ஆல்க்கைல் (alkyl) மோயிட்டிகளாகப் பிரிக்கலாம்.
வேதி வினைக்குழுக்களின் பெயர்களை அதற்கான ஆல்க்கேன்களின் பெயர்களோடு இணைத்து பெயர் சூட்டும்பொழுது கரிமச் சேர்மங்களின் பெயர்களை முறைப்படி பெயரிட ஒரு நல்ல முறை கிட்டுகின்றது.
கரிம வேதியியலில் வினைக்குழு இணைந்துள்ள கரிம அணுவுக்கு அடுத்த முதல் கரிம அணுவுக்கு ஆல்ஃவா (alpha) கரிமம் அல்லது முதல் கரிமம் என்று பெயர். அடுத்த கரிம அணுவுக்கு பீட்டா அல்லது இரண்டாவது கரிமம், அதற்கு அடுத்த கரிம அணு காமா கரிமம் அல்லது மூன்றாவது கரிமம் என்னும் வகையில் கிரேக்க எழுத்துகளால்பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக காமா-அமினோபியூடானாயிக் காடி (gamma-aminobutanoic acid) என்பதில் காமா-அமைன் (gamma-amine) என்பது கார்பாக்சைலிக் காடிக் குழுவுடன் இணைந்திருக்கும் கரிம சட்டத்தில் உள்ள மூன்றாவது கரிம அணுவில் (காமா கரிமம்) இணைந்திருப்பது.
கீழ்க்காணும் அட்டவணையில் பொதுவாகக் காணப்படும் வேதி வினைக்குழுக்களைக் காணலாம். இவற்றில் உள்ள வாய்பாட்டில் R, R' என்னும் குறிகள் இணைக்கப்பட்ட ஐதரசனையோ ஐதரோகார்பன் கிளைச் சங்கிலியையோ குறிக்கும் ஆனால் ஒருசில நேரங்களில் வேறு சில அணுக்கூட்டங்களையும் குறிக்கும்.
π பிணைப்புகளின் (பை-பிணைப்புகளின்) எண்ணிக்கையும் அடுக்கையும் பொருத்து வேதியியல் வினைகள் மாறும். கீழுள்ள அட்டவனையில் C-H (கரிம-ஐதரச) பிணைப்புகள் கொண்டுள்ளவை காட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை ஒவ்வொன்றும் வினையுறும் தன்மையும் தரமும் மாறக்கூடியது.
வேதி வகுப்பு Chemical class |
குழு Group |
வாய்பாடு | அமைப்பு வாய்பாடு Structural Formula |
முன்னொட்டு Prefix |
பின்ன்னொட்டு Suffix |
எடுத்துக்காட்டு |
---|---|---|---|---|---|---|
ஆல்க்கேன் | ஆல்க்கைல் | RH | ஆல்க்கைல்- alkyl- | -ஏன் -ane |
எத்தேன் Ethane | |
ஆல்க்கீன் | ஆல்க்கினைல் Alkenyl |
R2C=CR2 | ஆல்க்கினைல்- alkenyl- | -ஈன் -ene |
எத்திலீன் Ethylene (எத்தீன், Ethene) | |
ஆல்க்கைன் | ஆல்க்கைனைல் Alkynyl |
RC≡CR' | ஆல்க்கைனைல்- alkynyl- | -ஐன் -yne |
அசிட்டிலீன்Acetylene (எத்தைன், Ethyne) | |
பென்சீன் வழியது | ஃவீனைல் Phenyl |
RC6H5 RPh |
ஃவீனாஇல்- phenyl- | -பென்சீன் -benzene |
கியூமீன் Cumene (2-ஃவினைல்புரொப்பேன், 2-phenylpropane) | |
தொலுயீன் வழியது | பென்சைல் Benzyl |
RCH2C6H5 RBn |
பென்சைல்- benzyl- |
1-(substituent)toluene | பென்சைல் புரோமைடு Benzyl bromide (1-புரோமோதொலுயீன், 1-Bromotoluene) | |
கரிம-ஆக்சிசன் (C-O) பிணைப்புகள் கொண்ட குழுக்களில் அவற்றின் வேதியியல் வினையுறும் தன்மை அவை எங்கு அமைந்துள்ளது என்பதைப் பொருத்தும், எதிர்மின்னி வலயக் கலப்பைப் (orbital hybridization) பொருத்தும் அமையும்.
வேதி வகுப்பு Chemical class |
குழு Group |
வாய்பாடு | அமைப்பு வாய்பாடு Structural Formula |
முன்னொட்டு Prefix |
பின்ன்னொட்டு Suffix |
எடுத்துக்காட்டு |
---|---|---|---|---|---|---|
அசைல் ஆலைடு Acyl halide | ஆலோபார்மைல் Haloformyl |
RCOX | ஆலோபார்மைல்- haloformyl- | -ஒயில் ஆலைடு -oyl halide |
அசிட்டைல் குளோரைடு (எத்தனோயில் குளோரைடு Ethanoyl chloride) | |
ஆல்க்கஃகால் Alcohol | ஐதராக்சைல் Hydroxyl |
ROH | [[Image::Hydroxy-group-bw.svg|60px|ஐதராக்சைல் Hydroxyl]] |
ஐதராக்சைல்- hydroxy- | -ஆல் -ol |
மெத்தனால் Methanol |
கீட்டோன் Ketone | கார்போனைல் Carbonyl |
RCOR' | கீட்டோ-, ஆக்சோ- keto-, oxo- | -ஓன் -one |
மெத்தில் எத்தில் கீட்டோன் Methyl ethyl ketone (பியூட்டனோன், Butanone) | |
ஆல்டிகைடு Aldehyde | ஆல்டிகைடு Aldehyde |
RCHO | ஆல்டோ- aldo- | -அல் -al |
அசிட்டால்டிஃகைடு Acetaldehyde (எத்தனல், Ethanal) | |
கார்பபொனேட் எசுத்தர் Carbonate ester, Carbonate |
கார்பொனேட் எசுத்தர் Carbonate ester |
ROCOOR | ஆல்க்கைல் கார்பொனேட் alkyl carbonate |
|||
கார்பாக்சைலேட் Carboxylic acid;Carboxylate |
கார்பாக்சைலேட் Carboxylate | RCOO− | கார்பாக்சி- carboxy- | -ஒயேட் -oate |
சோடியம் அசிட்டேட் Sodium acetate (சோடியம் எதனோவேட், Sodium ethanoate) | |
கார்பாக்சைலிக் காடி Carboxylic acid |
கார்பாக்சைல் Carboxyl | RCOOH | கார்பாக்க்சி- carboxy- | -ஆயிக் காடி -oic acid |
அசிட்டிக் காடி Acetic acid (எத்தனாயிக் காடி, Ethanoic acid) | |
ஈத்தர் Ether | ஈத்தர் Ether |
ROR' | ஆல்க்காக்சி- alkoxy- |
ஆல்க்கைல் ஆல்க்கைல் ஈத்தர் alkyl alkyl ether |
டையெத்தைல் ஈத்தர்ர் Diethyl ether (எத்தாக்சியெத்தேன், Ethoxyethane) | |
எசுத்தர் Ester | எசுத்தர் Ester |
RCOOR' | ஆல்க்கைல் ஆல்க்கன்ஓவேட் alkyl alkanoate |
எத்தைல் பியூட்டைரேட் Ethyl butyrate (எத்தைல் பியூடனோவேட், Ethyl butanoate) | ||
ஐதரோபெராக்சைடு Organic peroxide, Hydroperoxide |
ஐதரோபெராக்சி Organic peroxide,Hydroperoxy |
ROOH | ஐதரோபெராக்சி- hydroperoxy- |
ஆல்க்கைல் ஐதரோபெராக்சைடு alkyl hydroperoxide |
மெத்தைல் எத்தைல் கீட்டோன் பெராக்சைடு Methyl ethyl ketone peroxide | |
பெராக்சைடு Organic peroxide,Peroxide |
பெராக்சி Organic peroxide, Peroxy |
ROOR | பெராக்சி- peroxy- |
ஆல்க்கைல் பெராக்சைடு alkyl peroxide |
டை-டெர்ட்-பியூட்டைல் பெராக்சைடு Di-tert-butyl peroxide | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.