கரிமச் சேர்மங்கள் From Wikipedia, the free encyclopedia
கரிம பெராக்சைடுகள்(Organic peroxides) என்பவை பெராக்சைடு வேதி வினைக்குழுவைக் (ROOR′) கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் ஆகும். R′ தொகுதிக்குப் பதிலாக ஐதரசன் காணப்படின், இந்தச் சேர்மங்கள் கரிம ஐதரோபெராக்சைடுகள் என அழைக்கப்படுகின்றன. பெர்எஸ்தர்கள்(Peresters) என்பவவை RC(O)OOR என்ற பொதுவான அமைப்பு வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. O−O பிணைப்பானது எளிதில் உடைந்து, RO•( • என்பது இணையாகாத தனித்த இலத்திரனைக் குறிக்கிறது) என்ற வடிவிலான தனித்த உறுப்புகளை உருவாக்குகின்றன. ஆகையால், கரிம பெராக்சைடுகளானவை சில வகை பலபடியாக்கல் வினைகளுக்குத் (கண்ணாடி-வலுவூட்டப்பட்ட நெகிழிகள் மற்றும் ஈபாக்சி பிசின்கள் போன்ற) தேவையான தனித்த உறுப்புக்களை உருவாக்கித் தருகின்ற தொடக்கப் பொருளாக பயனுள்ளவையாக இருக்கின்றன. மெதில் எதில் கீட்டோன் பெராக்சைடு மற்றும் பென்சாயில் பெராக்சைடு போன்றவை இத்தகைய நோக்கத்திற்காக பொதுவாகப் பயன்படுபவையாகும். இருப்பினும், இதே பண்பானது கரிம பெராக்சைடுகள் தெரிந்தோ, தெரியாமலோ நிறைவுறாத பிணைப்புகளைக் கொண்ட சேர்மங்களில் வெடிக்கத்தக்க பலபடியாக்கல் வினைகளைத் தொடங்கும் பொருட்களாக அமைந்து விடுவதாகவும் பொருள் கொள்ளலாம். ஆகவே, இந்தச் செயல்முறையானது, வெடிக்கத்தக்க பொருட்களை உருவாக்குவதில் பயன்படுகின்றது. இதர இதனையொத்த கனிம பெராக்சைடுகளைப் போலவே கரிம பெராக்சைடுகளும் சாயத்தை வெளுக்கும் காரணிகளாக அமைகின்றன[1]
பெராக்சைடுகளில் உள்ள O−O பிணைப்பு நீளமானது ஏறத்தாழ 1.45 Å ஆகவும் மற்றும் R−O−O பிணைப்புக் கோணமானது (R = H, C) கிட்டத்தட்ட 110° ஆகவாகவும் (நீரைப்போன்ற) உள்ளது. பண்புரீதியாக, C−O−O−R (R = H, C) இருசமபக்கத் தளங்களிடையே காணப்படும் கூர்க்கோணம் சற்றேழத்தாழ 120° ஆகும். பெராக்சைடிலுள்ள O−O பிணைப்பானது 45–50 kcal/mol (190–210 kJ/mol) என்ற பமதிப்புடன் ஒப்பீட்டளவில் வலிமை குறைந்த பிணைப்பாகவே காணப்படுகிறது. இந்த பிணைப்பு வலிமையானது C−C, C−H, மற்றும் C−O பிணைப்புகளுக்கிடையே உள்ள வலிமையைக் காட்டிலும் பாதியளவு குறைவானதாகும்.[2][3]
கரிம பெராக்சைடுகளின் முக்கிய வகைப்பாடுகள் கீழே கொடுத்துள்ளவாறு உள்ளன:
இயற்கையில் கிடைக்கும் இந்த சேர்மங்கள் வணிக ரீதியில் பெரும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டியும் இன்னும் சில சிறப்புத்தன்மை மிக்க பெராக்சைடு சேர்மங்களும் உள்ளன. [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.