கீட்டீன்

From Wikipedia, the free encyclopedia

கீட்டீன்

கீட்டீன் (ketene) என்பது R'R''C=C=O என்ற படிவத்தில் அமைந்துள்ள ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இப்பெயர் குறிப்பாக மிகச்சிறிய கீட்டீனான எத்தினோனையும் குறிக்கிறது. இச்சேர்மத்தில் R' மற்றும் R'' இரண்டும் ஐதரசன் அணுக்களாகும். கீட்டீன்களை முதன் முதலில் ஆராய்ந்து அறிந்தவர் எர்மான் சிடாடிங்கர் ஆவார்.[1]

Thumb
கீட்டீன்களுக்கான பொது வாய்ப்பாடு

உருவாக்கம்

எத்தினோன் என்ற எளிய கீட்டீனை அசிட்டோனை காற்றில்லா வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினால் கீட்டீனைத் தயாரிக்கலாம்.

CH3−CO−CH3 + ΔT → CH2=C=O + CH4

இவ்வினை "சிமிட்லின் கீட்டீன் தொகுப்புமுறை" என அழைக்கப்படுகிறது.[2][3]

அசைல் குளோரைடுகளை நீக்கல் வினைக்கு உட்படுத்தினாலும் அவை ஐதரசன் குளோரைடை இழந்து கீட்டீன்கள் உருவாகின்றன.

Thumb
Formation of a ketene from an acyl chloride.

இவ்வினையில், ஒரு காரம், வழக்கமாக மூவெத்திலமைன், அமிலப்பகுதி ஆல்பாவை நீக்கி கார்பனைல் குழுவுக்கு மாற்றி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பு உருவாதலைத் தூண்டுகிறது. ஒரு குளோரைடு அயனி இழப்பு ஏற்படுகிறது.

ஆல்பா ஈரசோகீட்டோன்களை உல்ப் மறுசீரமைப்பு வினையின் மூலமும் கீட்டீனாக மாற்றமுடியும்.

வினைகள்

கீட்டீன்கள் பொதுவாக வினைத்திறம் மிக்கவைகளாகும். இவை பல்வேறு வளையச் சேர்ப்பு வினைகளில் பங்கேற்கின்றன. மேலும் இவை இலத்திரன்-செறிவுள்ள ஆல்க்கைன்களுடன் [2+2] வளையச் சேர்ப்பு வினைகளில் ஈடுபட்டு பீட்டா-லாக்டோன்களை உருவாக்குகின்றன. பீட்டா-லாக்டோன்கள் இமின்களுடன் உருவாகின்றன. இவ்வினையே சிடாடிங்கர் தொகுப்பு வினை எனப்படுகிறது. கீட்டீன்களைத் தயாரிப்பதற்கு மிகவும் எளிமையான முதன்மையான வழிமுறை இதுவாகும்

டையால்களுடன் (HO–R–OH) பிசு-கீட்டீன்கள் (O=C=CH–R'–CH=C=O) வினைபுரிந்து பாலியெசுத்தர்களை உருவாக்குகின்றன, இதில் (–O–R–O–CO–R'–CO–) அலகுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன.

இருகீட்டீனை எத்தனாலுடன் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் அசிட்டோவசிட்டேட்டு என்ற முக்கியமான கரிமப்பொருள் தயாரிக்கமுடியும். இப்பொருள் கரிம தொகுப்பு வினைகளுக்கு மிகமுக்கியமான தொடக்கமாகும். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அதிக அளவு அசிட்டோவசிட்டேட்டு விளை பொருளாகப் பெறமுடியும். எனவே இம்முறையை தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.