யுரேனசு
ஞாயிற்றுக் குடும்பத்தில் ஞாயிறிலிருந்து ஏழாவது கோள் From Wikipedia, the free encyclopedia
இராகு (Uranus) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் இயுரேனசின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாகக் கருதவில்லை.
![]() Uranus as a featureless disc, photographed by வொயேஜர் 2 in 1986 |
||||||||||
கண்டுபிடிப்பு
| ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | வில்லியம் ஹேர்ச்செல் | |||||||||
கண்டுபிடிப்பு நாள் | பிழை: செல்லாத நேரம் | |||||||||
காலகட்டம்J2000 | ||||||||||
சூரிய சேய்மை நிலை | 20.11 AU (3,008 Gm) |
|||||||||
சூரிய அண்மை நிலை | 18.33 AU (2,742 Gm) |
|||||||||
அரைப்பேரச்சு | 19.2184 AU (2,875.04 Gm) |
|||||||||
மையத்தொலைத்தகவு | 0.046381 | |||||||||
சுற்றுப்பாதை வேகம் | ||||||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 369.66 days[4] | |||||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 6.80 km/s[4] | |||||||||
சராசரி பிறழ்வு | 142.238600° | |||||||||
சாய்வு | 0.773° to ecliptic 6.48° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு 1.02° to invariable plane |
|||||||||
Longitude of ascending node | 74.006° | |||||||||
Argument of perihelion | 96.998857° | |||||||||
துணைக்கோள்கள் | 27 | |||||||||
சிறப்பியல்பு
| ||||||||||
சராசரி ஆரம் | 25,362±7 km[5][b] | |||||||||
நிலநடுக்கோட்டு ஆரம் | 25,559±4 km 4.007 Earths[5][b] |
|||||||||
துருவ ஆரம் | 24,973±20 km 3.929 Earths[5][b] |
|||||||||
தட்டையாதல் | 0.0229±0.0008[c] | |||||||||
பரிதி | 159,354.1 km[2] | |||||||||
புறப் பரப்பு | 8.1156×109 km2[2][b] 15.91 Earths |
|||||||||
கனஅளவு | 6.833×1013 km3[4][b] 63.086 Earths |
|||||||||
நிறை | (8.6810±0.0013)×1025 kg 14.536 Earths[6] GM=5,793,939±13 km3/s2 |
|||||||||
அடர்த்தி | 1.27 g/cm3[4][b] | |||||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 8.69 m/s2[4][b] 0.886 g |
|||||||||
விடுபடு திசைவேகம் | 21.3 km/s[4][b] | |||||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 0.71833 d 17 h 14 min 24 s[5] |
|||||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 2.59 km/s 9,320 km/h |
|||||||||
அச்சுவழிச் சாய்வு | 97.77° (to orbit)[4] | |||||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் | 17h 9m 15s 257.311°[5] |
|||||||||
வடதுருவ இறக்கம் | −15.175°[5] | |||||||||
எதிரொளி திறன் | 0.300 (Bond) 0.51 (geom.)[4] |
|||||||||
மேற்பரப்பு வெப்பநிலை 1 bar level[7] 0.1 bar (tropopause)[8] |
| |||||||||
தோற்ற ஒளிர்மை | 5.9[9] to 5.32[4] | |||||||||
கோணவிட்டம் | 3.3″ to 4.1″[4] | |||||||||
பெயரெச்சங்கள் | Uranian | |||||||||
அளவீட்டு உயரம் | 27.7 km[4] | |||||||||
வளிமண்டல இயைபு | (Below 1.3 bar) Gases:
Ices:
|
இயுரேனசு ஒரு பெரிய வளிக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்ற வளிகள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 பாகை செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் இயுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாள்கள் ஆகும்.
வரலாறு
இக்கோள் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செருசல் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர். இக்கோள் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரிதாக்கியது. அதன் காரணம் சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமே, சனிக் கோளுக்கும் இயுரேனசுக்கும் இருந்தது.
தன்மைகள்
இதனுடைய வளி மண்டலத்தில் 83 விழுக்காடு ஐதரசனும், 15 விழுக்காடு ஈலியமும் மீதி அளவில் மீத்தேனும் ஐதரோ கார்பன்களும் உள்ளது. அதனால் இது வளிக்கோள்களில் மூன்றாவது பெரிய அளவுடையது ஆகும். முதல் இரண்டு பெரிய வளிக்கோள்கள் வியாழனும், சனியும் ஆகும்.
உருளும் கோள்
சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கோள் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கோள்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
வளையங்கள்
இக்கோளைச் சுற்றி 11 பெரு வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும் மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன. இந்த வளையங்களில் சில 2500 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன.
இந்த வளையங்கள் இயுரேனசு கோளின் வயதை விட வயதில் இளையதாய் இருப்பதால் இவை இயுரேனசு கோள் தோன்றிய போது உருவாகவில்லை. அதனால் இது முன்பு இயுரேனசின் நிலவாக இருந்த ஒரு துணைக்கோள். இயுரேனசின் ஈர்ப்பு விசையால் நொறுக்கவோ வேறு துணைக்கோள்களின் மீது மோதப்பட்டு பொடி ஆக்கப்பட்டிருக்கலாம். இப்பொடிகளே நாளடைவில் வளையங்களாக மாறின என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.
நிலவுகள்
இக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.[12][13] மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். கார்டிலியா மற்றும் கப்டிலியா என்ற இரண்டு நிலவுகள் மற்ற நிலவுகள் போல் தனிச் சுற்றுப்பாதை இல்லாமல் மேற்கொடுத்த வளையங்கள் ஊடாக சுற்றி வருவதால் அவை யுரேனசு வளையங்களின் மேய்பான்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமல் இருந்தன.
யுரேனசின் நிலவுகள் கண்டறியப்பட்ட வரலாறு
நிலவின் பெயர் | கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு (கி. பி. களில்) | கண்டறிந்தவர். குறிப்புகள் |
---|---|---|
இடைட்டனியா | 1781 | கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார். |
ஒபெரோன் | 1781 | கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார். |
ஏரியல் | 1851 | லேசல் |
அம்ரியல் | 1851 | லேசல் |
மிரண்டா | 1948 | கியூப்பர் |
பக்கு | 1985 | சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
சூலியட்டு | 1986 | சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
போர்ட்டியா | 1986 | சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
கிரசுடியா | 1986 | சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
டெசுடமோனா | 1986 | சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
ரோசலின்டு | 1986 | சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
பெலிண்டா | 1986 | சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
கார்டலியா | 1986 | இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
ஒபலியா | 1986 | இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
பியங்கா | 1986 | சுமித்து, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
பெர்டிடா | 1986 | கர்கோசா, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். |
கலிபான் | 1997 | கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு. |
சைக்கோரக்சு | 1997 | கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு. |
செடபோசு | 1999 | கவிலார்சு, கிளாட்மேன், கோல்மன், பெடிட்டு, சுகால். |
சுடவன்னோ | 1999 | கிளாட்மேன், கோல்மன், கவிலார்சு, பெடிட்டு, சுகால். |
பிராசுபெரோ | 1999 | கோல்மன், கவிலார்சு, கிளாட்மேன், பெடிட்டு, சுகால். |
இடிரின்குலோ | 2001 | கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு. |
பெர்டினான்டு | 2001 | கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு. |
பிரான்சிசுக்கோ | 2001 | கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு, கிளாடுமேன். |
மேப் | 2003 | சோவால்டரு, இலிசாவுவரு. |
கியூபிட் | 2003 | சோவால்டரு, இலிசாவுவரு. |
மார்கரட்டு | 2003 | இசெப்பர்டு, ஜெவிட்டு. |
வாயேஜர் 2
1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. இந்த விண்கலம் 145 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் 27 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
மேகங்கள்
யுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை.[14]
யுரேனசில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம்
சூரியக்கோள்களில் மிகப்பெரும் நான்கு வாயுக்கோள்களில் இந்த யுரேனசு கோளே குறைந்த விடுபடு வேகத்தைக் கொண்டது. அதனால் இக்கோளுக்கான துணைக்கோள்களில் மானிடர் வசிக்க முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேளை அது சாத்தியப்படவில்லை என்றால் மானிடர் அக்கோளைச் சுற்றி வருமாறு மிதக்கும் நகரங்களை கட்டமைக்க நேரும். அப்போது மானிடர் செயற்கைக்கோள் 1 பார் அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
குறிப்புகள்
- Calculated using data from Seidelmann, 2007.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.