Remove ads
செருமானிய-பிரித்தானிய வானியலாளர், தொழில்நுட்ப வல்லுனர், இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
சேர் பிரெடெரிக் வில்லியம் எர்செல், பிரெடெரிக் வில்லியம் எர்ழ்செல் (Frederick William Herschel, வில்லியம் ஹெர்செல்)[1] (German: பிரீட்ரிக் வில்கெல்ம் எர்ழ்செல் (Friedrich Wilhelm Herschel); நவம்பர் 15, 1738 – ஆகத்து 25, 1822) என்பவர் செருமனியில் பிறந்த பிரித்தானிய வானியலாளரும், இசைவல்லுனரும் கரோலின் எர்ழ்செலின் அண்ணனும் ஆவார். இவர் கனோவரில் பிறந்தார். இவர் 1757 இல் பிரித்தானிய நாட்டுக்குப் புலம்பெயரும் முன்பு தன் தந்தையைப் போலவே தன் 19 ஆம் அகவையில் கனோவர்ப் படையணியில் சேர்ந்தார்.
சர் வில்லியம் எர்செல் Sir William Herschel | |
---|---|
பிறப்பு | பிரீடிரிக் வில்லெம் எர்செல் 15 நவம்பர் 1738 அனோவர், புரூன்சுவிக்-உலூனேபர்கு,செருமனி, புனித உரோமைப் பேரரசு |
இறப்பு | 25 ஆகத்து 1822 83) சுலோகு, இங்கிலாந்து | (அகவை
அடக்கத் தலம் | புனித இலாரன்சு பேராயம், சுலோகு |
வாழிடம் | வான்காணக இல்லம் |
தேசியம் | கனோவையர்; பின்னர் பிரித்தானியர் |
துறை | வானியல், இசை |
அறியப்படுவது | யுரேனசு கண்டுபிடிப்பு அகச்சிவப்புக் கதிர் கண்டுபிடிப்பு ஆழ்வான் ஆய்வுகள் விண்மீன் படிமலர்ச்சி |
விருதுகள் | கோப்பிளே பதக்கம் (1781) |
துணைவர் | மேரி பால்டுவின் எர்செல் |
பிள்ளைகள் | ஜான் எர்செல் (மகன்) |
கையொப்பம் |
இவர் 1774 இல் தன் முதல் தொலைநோக்கியைக் கட்டியமைத்தார். பின்னர் ஒன்பது ஆண்டுகள் இரட்டை விண்மீன்களைத் தேடி ஆழ்விண்வெளி ஆய்வில் ஈடுபட்டார். இவரது தொலைநோக்கியின் உயர்பிரிதிறன் மெசியர் வான் அட்டவணையில் உள்ள ஒண்முகில்கள் (ஒளிர்வளிமுகில்கள்) விண்மீன்களின் கொத்துகள் என புலப்படுத்தியது; இவர் 1802 இல் ஒண்முகில்களின் அட்டவணையை வெளியிட்டார் (2,500 வான்பொருள்கள்).மேலும் இவர் 1820 இல் 5,000 வான்பொருள்கள் கொண்ட அட்டவணையை வெளியிட்டார். 1781 மார்ச்சு 13 ஆம் நாள் நோக்கீட்டின்போது ஒரு வான்பொருளை அது விண்மீனல்ல, ஆனால் ஒருகோளெனக் கண்டார். இது யுரேனசு கோளாகும். பண்டைய காலத்துக்குப் பின் முதலில் கண்டறிந்த கோல் இதுவே ஆகும். ஒரே நாளில் இவரது புகழ் ஓங்கியது. இதனால் பிரித்தானிய மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இவரை அரசு வானியலாளராகப் பணியமர்த்தினார். மேலும் அரசு வானியல் கழகத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெருநிதி நல்கி தொலைநோக்கிகளைச் செய்ய ஊக்குவித்தது.
எர்ழ்செல் கதிர்நிரல் ஒளியளவியலை வானியல் ஆய்வுக்கு பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக அவர் பட்டகங்களையும் வெர்ரநிலை அளக்கும் கருவிகளையும் விண்மீன் கதிர்நிரல்களின் அலைநீளப் பரவலைக் கண்டறியப் பயன்படுத்தினார். இவரது பிற பனிகளாக, செவ்வாயின்வட்டணை அலைவுநேரத்தைதுல்லியமாக மதிப்பீடு செய்தமை, செவ்வய் நிலமுனைக் கவிப்புகள் பருவந்தோறும் வேறுபடுதல், யுரேனசின் தித்தானியா, ஓபெரான் நிலாக்களின் கண்டுபிடிப்பு, காரிக்கோளின் என்சிலாடசு, மீமாசு நிலாக்களின் கண்டுபிடிப்பு, ஆகியவை அடங்கும். மேலும் இவர் அகச்சிவப்புக் கதிர்வீச்சையும் கண்டுபிடித்தார். இவர் 1816இல் பிரித்தானிய தகைமை ஆணைகள், வீரப்பட்டம் மேலும் பிற தகைமைகளும் அளிக்கப்பட்டார். இவர் 1822 ஆகத்தில் இறந்தார். இவரது ஒரே மகனாகிய ஜான் எர்ழ்செல் இவரது பணிகளைத் தொடர்ந்தார்.
இவர் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தமைக்காகச் சிறப்புப் பெற்றார். இது தவிர அகச்சிவப்புக் கதிர் போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தெரிவித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.