Remove ads
From Wikipedia, the free encyclopedia
பொருண்மை அல்லது திணிவு (தமிழக வழக்கு: நிறை[குறிப்பு 1], Mass) என்பது, இயற்பியலில் உள்ள அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது ஒரு பண்டத்தில் எவ்வளவு பொருள் அளவு இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இது, மரபார்ந்த விசையியலுக்கும் அதனுடன் தொடர்புள்ள பிற துறைகளுக்கும் ஓர் அடிப்படைக் கருத்துருவாக விளங்கியது. சார்பு இயங்கியலில் பொருண்மைக்குப் பல வரையறைகள் உள்ளன. சார்புக் கோட்பாட்டில், பொருண்மை பற்றிய செவ்வியற்கால எண்ணக்கருவுக்கு நெருக்கமான மாறாப்பொருண்மை என்பது நோக்கர்களைப் பொறுத்து மாற்றம் அடைவதில்லை.
Mass | |
பொதுவான குறியீடு(கள்): | m |
SI அலகு: | கிலோகிராம் |
அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, எடை (weight) ஆகிய இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால், இயற்பியல், பொறியியல் ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருள் ஆட்படும் புவியீர்ப்பு விசையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். இதனால், இந்நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்பு விசையில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பாகவும், விண்வெளி, வேறு கோள்கள் போன்ற வான்பொருளின் மேற்பரப்புசார் இடங்களிலும், திணிவுக்கும் எடைக்கும் உள்ள வேறுபாடு முதன்மை பெறுகின்றது.
நியூட்டனியல் இயற்பியலில், பொருண்மை ஒருளில் உள்ள பொருண்மத்தின் அளவாகப் பொதுமைப்படுத்தப்படுகிறது. என்றாலும், பொருளின் மிக உயர்ந்த வேகங்களில், சிறப்புச் சார்புக் கோட்பாடு பொருளின் இயக்க ஆற்றல் பொருண்மையின் கணிசமான கூடுதல் வாயிலாக அமைவதாக்க் கூறுகிறது. எனவே, நிலையாகவுள்ள பொருளின் பொருண்மை அதற்குச் சமனான ஆற்றல் அளவைப் பெற்றுள்ளது. மேலும் ஆற்றலின் அனைத்து வடிவங்களும் முடுக்கத்தை எதிர்க்கின்றன; எனவே ஈர்ப்பு விசையைப் பெற்றுள்ளன. நிகழ்கால இயற்பியலில், வரையறுக்கவியலாமையால், பொருண்மம் ஓர் அடிப்படை கருத்துப்படிமமாக்க் கொள்ளப்படுவதில்லை.
பொருண்மையை அளக்க பல தெளிவான நிகழ்வுகளைப் பயன்படுத்தலாம். சில கோட்பாட்டாளர்கள் இவை ஒன்றையொன்று சாரதனவாகவும் கருதுகின்றனர்.[1] நடப்பு செய்முறைகள், பின்வரும் எந்தமுறையில் பொருண்மையை அளந்தாலும் முடிவுகள் மாறுவதில்லையென நிறுவியுள்ளன:
ஒரு பொருளின் பொருண்மை அதன்மீது விசை செயல்படும்போது ஏற்படும் முடுக்கத்தைத் தீர்மானிக்கிறது. உறழ்வும் உறழ்வுப் பொருண்மையும் புறப்பொறுலின் அதே இயல்புகளை முறையே பண்பியல், அள்வியல் மட்டங்களில் விவரிக்கின்றன. சுருங்க, பொருண்மை உறழ்வை அளவியலாக விவர்இக்கிறது எனலாம். நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, நிலையான m பொருண்மை வாய்ந்த ஒரு பொருள் ஓர் F எனும் ஒற்றை விசைக்கு ஆட்படும்போது அதன் முடுக்கம் a F/m ஆல் தரப்படும்.ஒரு பொருளின் பொருண்மை ஈர்ப்புப் புலத்தை உருவாக்கும் அல்லது அதனால் விளைவுக்குள்ளாகும் அளவையும் கூடத் தீர்மானிக்கிறது. mA பொருண்மையுள்ள முதல் பொருளில் இருந்து, mB பொருண்மையுள்ள இரண்டாம் பொருள் r (பொருண்மை மையத்தில் இருந்து பொருண்மை மையத்துக்கு இடையிலான) தொலைவில் வைக்கப்பட்டால் இவற்றில் ஒவ்வொரு பொருளும்
Fg = GmAmB/r2}}
ஈர்ப்பு விசைக்கு ஆட்படும். இங்கு, G = 6.67×10−11 N kg−2 m2}} ஆகும். இது "பொது ஈர்ப்பு மாறிலி" எனப்படுகிறது. இது சில வேளைகளில் ஈர்ப்புப் பொருண்மை எனப்படுகிறது.[குறிப்பு 2] 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட செய்முறைகள் உறழ்வுப் பொருண்மையும் ஈர்ப்புப் பொருண்மையும் முற்றொருமித்தன என்பதை நிறுவியுள்ளன; 1915 ஆம் ஆண்டில் இருந்து இந்த நோக்கீடு பொதுச் சார்புக் கோட்பாட்டின் சமன்மை நெறிமுறையில் அடிக்கோளாக ஏற்கப்பட்டுள்ளது.
அனைத்துலக முறை அலகுகள் (SI) இல் பொருண்மை அலகு கிலோகிராம் (கிகி - kg) ஆகும். ஒரு கிலோகிராம் என்பது 1000 கிராம் (g) ஆகும், கிலோகிராம் 1795 இல் முதன்முதலாக நீரின் ஒரு பருடெசிமீட்டர் (மீ3) பருமன் வாய்ந்த பனிக்கட்டி ஒன்றின் உருகுநிலையில் அமையும் பொருண்மையாக வரையறுக்கப்பட்டது. பிறகு, 1889 இல் கிலோகிராம் பன்னாட்டு முன்வகைமைக் கிலோகிராமின் பொருண்மையாக மீள்வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறை மீட்டரையோ, நீரின் இயல்புகளையோ சாராத ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டளவில், பிளாங்கு மாறிலியால் (:en:Planck constant) வரையறுக்கும் முன்மொழிவு உட்பட கிலோகிராமை மீள வரையறுப்பதற்கான பல முன்மொழிவுகள் உள்ளன.[2] இது தவிர, பொருண்மைக்கு பன்னாட்டுச் செந்தர முறை ஏற்கும் வேறு அலகுகளும் உண்டு.
பன்னாட்டுச் செந்தர (SI) அலகு முறைக்கு வெளியே, தேவையைப் பொறுத்துப் பின்வரும் பலவகையான அலகுகள் பயன்படுகின்றன.
சார்புக் கோட்பாட்டு அடிப்படையில் பொருண்மைக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக ஆற்றலுக்கான அலகு எதையும் பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, eV ஆற்றல் அலகை பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்துவது உண்டு. இது ஏறத்தாழ 1.783 × 10−36 கிலோகிராமிற்குச் சமமாகும்.
இயற்பியலில், கருத்தியலாக, ஏழு வேறுபட்ட பொருண்மையின் கூறுபாடுகளால் தெளிவாகப் பிரித்து அதை இயற்பியல் குறிமானங்களால் சுட்டலாம்:[3] இந்த வகை ஏழு மதிப்புகளும் விகித சமத்திலோ அல்லது சமமாகவோ அமைவதாக ஒவ்வொரு செய்முறையும் நிறுவியுள்ளது. இந்த விகித சமம் பொருண்மை குறித்த நுண்ணிலைக் கருத்துப்படிமத்துக்கு இட்டுச் செல்கிறது. எனவே பொருண்மையை அளக்க அல்லது நடைமுறையில் வரையறுக்க பின்வரும் பல வழிமுறைகள் உள்ளன:
ஒரு பொருளில் உள்ள பொருண்ம அளவே அப்பொருளின் பொருண்மை எனப்படும்.[சான்று தேவை]
ஒரு பொருளில் உள்ள பொருண்மத்தின் மீது செயற்படும் புவியீர்ப்புவிசை எடை எனப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.