From Wikipedia, the free encyclopedia
மா (Mangifera) என்பது பூக்குந் தாவரவகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை புவிமையக் கோட்டுப் பகுதியில் காணப்படுகின்றன. இவை இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்தியச் சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.
மா | |
---|---|
இந்திய மா பழங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | ரோசிதுகள் |
வரிசை: | Sapindales |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Anacardioideae |
பேரினம்: | |
வேறு பெயர்கள் [1] | |
Mangas Adans. Phanrangia Tardieu |
இந்தியாவின் புராணங்களில் மா பற்றிய குறிப்புகள் அதை கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ(Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும்.
இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.
மாமரம் 35 – 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 – 35 செ.மீ நீளமும், 6 – 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 – 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.
மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 – 25 செ.மீ நீளமும், 7 – 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 – 7 செ.மீ நீளமும், 3 – 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.
மாமரங்கள் ஆசியா, அமெரிக்கா, தென் மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் பூமத்தியரேகைப்பகுதிகளிலும், பிற உறைபனியற்ற பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. மாமரம் வளர்ப்பது எளிது; மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன. உலகிலேயே, அதிகம் அப்படியே உண்ணப்படும் பழம் என்ற சிறப்பு மாம்பழத்தையே சாரும். ஹவாய் தீவுகளின் சில காடுகள் வேற்று நாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மாமரங்களால் நிறைந்திருக்கின்றன.
நல்ல வடிகால் வசதியும் சற்றே அமிலத்தன்மையும் (pH 6-7) உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன்கு வளரும். மேற்கூறியவாறு, உறைபனியற்ற எந்த பகுதிகளிலும் மாமரங்கள் வளரும்; ஆனால், 12-15 பாகை C வெப்பநிலைக்குக் கீழே வளர்ச்சி குன்றிவிடும். 15 பாகை C க்கு கீழேயும், 40 பாகை C க்கு மேலும் பூக்கள் உதிர்ந்து, மகரந்தம் குறைவதால் காய் பிடிப்பு குறைந்துவிடும். காய் முதிரும்போது அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. அதிக காற்று, பூக்களையும், காய்களையும் உதிர்த்து விடும். மாமரத்தின் இலைகளாலும், பூக்களாலும் சிறிதளவு உறைபனியை கூட தாங்க முடியாது. மாமரம் சுமார் -5 பாகை C வரை தாங்கவல்லது.
இந்திய மாம்பழ வகைகள் பெரும்பாலும் ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமாக வளரக்கூடிய இரகத்தை சேர்ந்த ஒரு வருட மாங்கன்றின் மேல் விருப்பப்படும் இரகத்தினை ஒட்டுவது பொதுவான முறையாகும். சிலநேரம், மண்ணுக்கேற்ப உகந்த இரகங்களின் மேல் சிறந்த குணமுடைய மா இரகங்கள் ஒட்டப் படுகின்றன. இந்தியசீன வகை இரகங்கள் சில விதையிலிருந்தும் வளர்க்கப்படுகின்றன. இவை ஒரு விதையில் பல முளை கருக்களைக் (embryo) கொண்டுள்ளன.
தோட்டம் அமைக்கும் போது கன்றுகள் 40 – 50 அடி இடைவெளியில் 90x90x90cm pit (ஏக்கருக்கு சுமார் 100 மரங்கள்) நடப்படுகின்றன. சாதாரணமாக, மாமரத்தோட்டங்களில் கழித்து விடுதல் தேவையற்றது. எனினும், முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்.
மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.
மாங்காய் நன்கு முற்றியதன் அடையாளம், அதன் நிறம் பச்சையிலிருந்து மஞ்சள் நிறமாவதாகும். பழத்தின் சதையும் உள்ளிருந்து வெளியாக மஞ்சளாக மாறும். முழுதாகப் பழுக்காமல் பாதியளவு மஞ்சளாக இருக்கும்போதே இவை அறுவடை செய்யப்படுகின்றன. பழங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே கையாலோ, நீண்ட கழியின் நுனியில் பொருத்திய கத்தியாலோ பறிக்கப்படுகின்றன. பழங்கள் கீழே விழாதவாறு ஒரு பையில் சேமிக்கப்படுகின்றன.
ஏற்றுமதிக்கான மங்காய்கள் நான்கு அங்குலம் காம்பு விட்டு பறிக்கப் படுகின்றன. இது பழத்தின் மேல் மாம்பால் கறை படுவதைத் தவிர்க்கிறது. பின்னர், பழங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன. பழ ஈக்களை நீக்கவும், பூஞ்சைப் புள்ளிகள் இல்லாதிருக்கவும் சுடுநீர் மற்றும் சுடுகாற்றினால் பதப்படுத்தப்பட்டு, 12 பாகை C க்கு அதிகமான வெப்பநிலையில் வைக்கப்படுகின்றன. இதற்கு குறைவான வெப்பநிலையில், மாம்பழத்தோல் கறுத்து அழுகத் துவங்கிவிடும். விற்பனைக்குத் தயாராகும்போது, பெரும்பாலும், கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில், எத்திலீன் வாயு செலுத்தப்பட்டு பழங்கள் சீராக பழுக்கவைக்கப்படுகின்றன.
உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். மாப்பழத்தின் விளைச்சல் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் ஆகிய மற்றெல்லாப் பழங்களைக்காட்டிலும் கூடுதல் ஆகும். உலகநாடுகள் மன்ற உணவு, வேளாண்மை நிறுவனம் (The Food and Agriculture Organization of the United Nations), கணித்தபடி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது[2]. இதில் இந்தியாவில் விளைந்த அளவு 12 மில்லியன் டன். இது உலக விளைவில் பாதிக்கு மேலாகும். சீனாவில் 3 மில்லியன் டன்னும், பாக்கித்தானில் 2.25 மில்லியன் டன்னும், மெக்சிக்கோவில் 1.5 மில்லியன் டன்னும் தாய்லாந்தில் 1.35 டன்னும் அடுத்து நிற்கும் நாடுகள். முன்னணி 10 நாடுகளின் மொத்த விளைச்சல் உலக விளைச்சலில் 80% ஆகும்.
மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. இந்தியாவில், இது மிக அதிக அளவில் காணப்படும் பழக்கம். பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.
மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன. மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில், மாங்காயைக் காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக பயன்படுத்தப்படுகிறது.
உணவாற்றல் | 272 கிசூ (65 கலோரி) |
---|---|
17.00 g | |
சீனி | 14.8 g |
நார்ப்பொருள் | 1.8 g |
0.27 g | |
.51 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (5%) 38 மைகி(4%) 445 மைகி |
தயமின் (B1) | (5%) 0.058 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (5%) 0.057 மிகி |
நியாசின் (B3) | (4%) 0.584 மிகி |
(3%) 0.160 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (10%) 0.134 மிகி |
இலைக்காடி (B9) | (4%) 14 மைகி |
உயிர்ச்சத்து சி | (33%) 27.7 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (1%) 10 மிகி |
இரும்பு | (1%) 0.13 மிகி |
மக்னீசியம் | (3%) 9 மிகி |
பாசுபரசு | (2%) 11 மிகி |
பொட்டாசியம் | (3%) 156 மிகி |
துத்தநாகம் | (0%) 0.04 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொறுத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.
மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்குக் காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.
இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆகிய பல வகைகள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.