இந்திய மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பாரமுல்லா (Baramulla) நகரம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. இது ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் பழைய பெயர் வரஹமுல்லா ஆகும்.[1]
பாரமுல்லா
வாரமுல்லா | |
---|---|
நகரம் | |
நாடு | India |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பாரமுல்லா |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 61,830 |
Languages | |
• Official | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 193101 (புதிய நகரம்), 193102 (பழைய நகரம்), 193103 (க்வாஜாபாக் பகுதி) |
Telephone code | 01952 |
வாகனப் பதிவு | JK 05 |
ஆண் பெண் விகிதம் | 873 ♂/♀ |
கல்வியறிவு | 66.93% |
இணையதளம் | www |
வராஹமுல்லா இதன் பழைய பெயர்.இந்துமதப் புராணங்களின் படி விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மலையைக் குடைந்து நீரைக் கொண்டுவந்ததால் வரஹமுல்லா (வரஹா: பன்றி , முல்: ஆழம் அல்லது வேர்) என்று பெயர்.[2] இங்கு முகலாய மன்னர்கள் அடிக்கடி வந்துள்ளனர். கோடைக்காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் செல்லும் மன்னர்கள் பாரமுலாவில் தங்கிச் செல்வது வழக்கம். அக்பர் 1508 ஆம் ஆண்டிலும் ஜகாங்கீர் 1620 ஆம் ஆண்டிலும் இங்கே தங்கிச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. மேலும் சீன யாத்ரீகர்களும் இங்கே வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கியமான நகராக இது கருதபடுகிறது. ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயில் எனவும் இது அழைக்கப்படுகிறது.சமீப காலங்களில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் புதிய பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படுகின்றன. ஜீலம் நதியின் குறுக்கே பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தப்பகுதியானது தொடர்வண்டி மூலம் இந்தியாவின் பிற பகுதிகளோடு போக்குவரத்து கொள்ளும் வசதி உள்ளது. இங்கு ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ரீநகரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இங்கு கிட்டத்தட்ட 2,00,000 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 55% மற்றும் பெண்கள் 45% உள்ளனர்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Baramulla (1971–1986) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 7.0 (44.6) |
8.2 (46.8) |
14.1 (57.4) |
20.5 (68.9) |
24.5 (76.1) |
29.6 (85.3) |
30.1 (86.2) |
29.6 (85.3) |
27.4 (81.3) |
22.4 (72.3) |
15.1 (59.2) |
8.2 (46.8) |
19.7 (67.5) |
தாழ் சராசரி °C (°F) | −2.0 (28.4) |
−0.7 (30.7) |
3.4 (38.1) |
7.9 (46.2) |
10.8 (51.4) |
14.9 (58.8) |
18.1 (64.6) |
17.5 (63.5) |
12.1 (53.8) |
5.8 (42.4) |
0.9 (33.6) |
−1.5 (29.3) |
7.3 (45.1) |
பொழிவு mm (inches) | 48 (1.89) |
68 (2.68) |
121 (4.76) |
85 (3.35) |
68 (2.68) |
39 (1.54) |
62 (2.44) |
76 (2.99) |
28 (1.1) |
33 (1.3) |
28 (1.1) |
54 (2.13) |
710 (27.95) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 6.6 | 7.3 | 10.2 | 8.8 | 8.1 | 5.7 | 7.9 | 6.8 | 3.5 | 2.8 | 2.8 | 5.1 | 75.6 |
ஆதாரம்: HKO[3] |
ஸ்ரீநகர் விமான நிலையம் இங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு இந்தி, காஷ்மீரி, குஜ்ஜாரி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகள் இங்கு புழக்கத்தில் உள்ளன.[4]
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாரமுல்லா தொடர்வண்டி நிலையம், ஸ்ரீநகர், அனந்தநாக், காசிகுண்ட் வழியாக ஜம்முவின் பனிஹால் நகரத்தை இணைக்கிறது. இந்த இருப்புப் பாதையானது பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்கிறது.[5]
பாரமுல்லா நகரம் பதான் கோட், யூரி, சோப்பூர், குல்மார்க் மற்றும் டேங்மார்க் ஆகிய பகுதிகளோடு நல்ல சாலை வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீநகர் நகரத்தோடும் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து முசாஃபராபாத் செல்லும் சாலை 2005 -ல் மீண்டும் திறக்கப்பட்டாலும் பொதுமக்களின் பயன்பாடு தடைசெய்யபட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.