4வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1605-1627) From Wikipedia, the free encyclopedia
நூருதீன் முகம்மது சலீம்[8] (31 ஆகத்து 1569 – 28 அக்டோபர் 1627),[9] என்பவர் முகலாயப் பேரரசின் 4ஆவது பேரரசர் மற்றும் இந்துஸ்தானின் பேரரசர்[10][11] ஆவார். இவர் பொதுவாகத் தனது பட்டப் பெயரான ஜஹாங்கீர் என்ற பெயரால் அறியப்படுகிறார். இப்பாரசீகப் பெயரின் பொருள் உலகத் துரந்தரர் என்பதாகும்.[12]
ஜஹாங்கீர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாடிஷா அல்-சுல்தான் அல்-ஆசம் ஷாஹின்ஷா-இ ஹிந்த் (இந்தியாவின் மன்னர்களின் மன்னர்) | |||||||||||||||||
![]() அபு அல்-அசன் வரைந்த ஓவியம், அண். 1617 | |||||||||||||||||
இந்துஸ்தானின் 4வது பேரரசர் | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | 3 நவம்பர் 1605 – 28 அக்டோபர் 1627 | ||||||||||||||||
முடிசூட்டுதல் | 24 நவம்பர் 1605 | ||||||||||||||||
முன்னையவர் | முதலாம் அக்பர் | ||||||||||||||||
பின்னையவர் | ஷாஜகான் சகாரியார் மிர்சா (நடைமுறைப்படி) தவார் பக்சு (பெயரளவில்) | ||||||||||||||||
பிறப்பு | நூருதீன் முகம்மது சலீம் 31 ஆகத்து 1569 பத்தேப்பூர் சிக்ரி, முகலாயப் பேரரசு[1] | ||||||||||||||||
இறப்பு | 28 அக்டோபர் 1627 58) பிம்பெர், காசுமீர் சுபா, முகலாயப் பேரரசு | (அகவை||||||||||||||||
புதைத்த இடம் | |||||||||||||||||
பட்டத்து இராணி | |||||||||||||||||
மனைவியர் மேலும்... |
| ||||||||||||||||
குழந்தைகளின் #குழந்தைகள் |
| ||||||||||||||||
| |||||||||||||||||
மரபு | பாபுர் குடும்பம் | ||||||||||||||||
அரசமரபு | முகலாய அரசமரபு | ||||||||||||||||
தந்தை | அக்பர் | ||||||||||||||||
தாய் | மரியம் உசு-சமானி | ||||||||||||||||
மதம் | சன்னி இசுலாம்[6][7] (அனாபி) | ||||||||||||||||
பேரரசரின் முத்திரை | ![]() |
இவர் இளவரசன் சலீமாகப் பிறந்தார். பேரரசர் அக்பர் மற்றும் அவரது முதன்மையான பேரரசி மரியம் உசு-சமானி ஆகியோரின் மூன்றாவது மற்றும் ஒரே ஒரு எஞ்சிய மகன் இவர் ஆவார். தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற அக்பரின் தேடலானது அசரத் இசான் மற்றும் சலீம் சிசுதி ஆகிய சூபித் துறவிகளின் ஆசி பெறுவதற்குக் காரணமானது. அவர்கள் மூன்று மகன்கள் பிறப்பார்கள் என்று கணித்துக் கூறினர். பத்தேப்பூர் சிக்ரியில் ஜஹாங்கீர் பிறந்ததானது சிசுதியின் ஆசீர்வாதம் நிறைவேறியதாகக் கருதப்படுகிறது. சிசுதியின் பெயரான சலீம் தான் ஜஹாங்கீருக்கு வைக்கப்பட்டது. இவரது தொடக்க வாழ்வானது தனிப்பட்ட முறையில் சோகங்களுடையதாக இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே இவரது இரட்டை சகோதரர்கள் இறந்ததும் இதில் அடங்கும். இது இவரது குடும்பத்தில் சோகமான உணர்வுகள் ஏற்படுவதற்கு வழி வகுத்தது. இவரது தொடக்கக் கல்வியானது அகல் விரிவானதாக இருந்தது. பாரசீகம், இந்துசுத்தானி மற்றும் போர்த் தந்திரம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை உள்ளடக்கியிருந்தது. இவரது குடும்பத்தின் கலாச்சார மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தால் ஜஹாங்கீரின் வளர்ப்பானது கடுமையான தாக்கத்துக்கு உள்ளானது. பேரரசராக இவரது பிந்தைய ஆட்சிக்கு அடித்தளத்தை இது அமைத்துக் கொடுத்தது.
இவரது ஆட்சியானது கலைச் சாதனை மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் அரசியல் செயல்கள் ஆகியவற்றின் ஓர் இணைவாகக் குறிக்கப்படுகிறது. முகலாயப் பேரரசின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்துதலின் பின்புலத்தில் இது நடைபெற்றது. நீதிக்கு இவரது உள்ளார்ந்த ஈடுபாடு, கலையில் இவரது ஆர்வம், குறிப்பாக ஓவியம் மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றால் ஜஹாங்கீரின் ஆட்சியானது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது. ஓவியம் மற்றும் கட்டடக் கலையானது இவரது ஆட்சிக் காலத்தின் போது செழித்து வளர்ந்தது. இவரது உயர்குடியினர் மற்றும் குடும்பத்துடனான ஒரு சிக்கலான உறவு முறையை ஜஹாங்கீரின் ஆட்சியானது இயல்பாகக் கொண்டிருந்தது. குறிப்பாக, மெகருன்னிசாவுடனான (பின்னர் பேரரசி நூர் சகான் என்று அறியப்பட்டவர்) இவரது திருமணத்தில் இது பிரதிபலிக்கப்படுகிறது. நூர் சகான் அரியணைக்குப் பின்னால் குறிப்பிடத்தக்க அளவுக்கு அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். இந்தியத் துணைக் கண்டத்துக்குள் பேரரசின் மேற்கொண்ட நிலை நிறுத்துதலை இக்காலகட்டமானது கண்டது. இதில் இராசபுத்திர இராச்சியங்களை அடிபணிய வைக்க முயற்சிகள், முகலாய அதிகாரத்தை தக்காணத்துக்குள் விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. ஜஹாங்கீரின் அயல் நாட்டுக் கொள்கையானது ஈரானின் சபாவியர் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியோருடனான தொடர்புகளை உள்ளடக்கியிருந்தது. மேலும், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் இவர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இந்திய அரசியல் மற்றும் வணிகத்தில் ஐரோப்பியத் தாக்கத்தின் தொடக்கத்தை இது குறித்தது.
இவர் சாதனைகளைப் புரிந்திருந்த போதிலும் ஜஹாங்கீரின் ஆட்சியானது சவால்களைக் கொண்டிருந்தது. இதில் இவரது மகன்களால் தலைமை தாங்கப்பட்ட கிளர்ச்சிகள், இவை இவரது ஆட்சியின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்கியது ஆகியவை உள்ளடங்கும். இவரது உடல் நலக்குறைவு 1627இல் இவரது இறப்புக்கு வழி வகுத்தது. வாழ்நாள் முழுவதும் அபினி மற்றும் மதுவைப் பயன்படுத்தின் காரணமாக இது ஏற்பட்டது. இவரது மகன் ஷாஜகானிடம் அரியணை கை மாறுவதற்கு முன்னர் ஒரு குறுகிய கால வாரிசுப் பிரச்சனைக்கு இது காரணமானது. ஜஹாங்கீரின் மரபானது முகலாய ஓவியம் மற்றும் கட்டடக்கலை, இவரது நினைவுக் குறிப்புகள், மற்றும் இவர் செயல்படுத்திய கொள்கைகள் ஆகியவற்றுக்கு இவரது பங்களிப்புகளின் மூலமாக வாழ்கிறது. இவரது இறப்புக்குப் பிறகும் பேரரசு மீது தாக்கத்தை இவை தொடர்ந்து ஏற்படுத்தின.
இளவரசன் சலீம், அக்பருக்கும் அவரது பட்டத்து இராணியான மரியம் உசு-சமானிக்கும் 3ஆவது மகனாக 31 ஆகத்து 1569ஆம் ஆண்டு பத்தேப்பூர் சிக்ரியில் பிறந்தார்.[13][9][14] இவருக்கு அசன் மிர்சா மற்றும் உசைன் மிர்சா என்று ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளான இரு அண்ணன்கள் இருந்தனர். 1564இல் மரியம் உசு-சமானிக்குப் பிறந்த இந்த இரண்டு அண்ணன்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர்.[15][16][17][18][19] இக்குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்ட காரணத்தால், தனது பேரரசுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காகத் துறவிகளின் ஆசியை அக்பர் வேண்டினார்.[20] தன் மகன்களின் இறப்பிற்குப் பிறகு துயரம் கொண்ட அக்பர் மரியம் உசு-சமானியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அக்பர் அந்நேரத்தில் ஒரு போர்ப் பயணத்திற்க்குச் சென்றிருந்தார். ஆக்ராவுக்குத் தான் திரும்பி வரும் போது சலீம் சிசுதியின் ஆசிகளை வேண்டினார். சலீம் சிசுதி ஒரு பெயர் பெற்ற கவாஜா (சமயத் தலைவர்) ஆவார். இவர் பத்தேப்பூர் சிக்ரியில் வாழ்ந்தார்.[21] அக்பர் சலீம் சிசுதியிடம் இரகசியமாகத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அக்பருக்கு சீக்கிரமே மூன்று மகன்கள் பிறப்பார்கள் என்றும், அவர்கள் முதிர்ந்த வயது வரை வாழ்வார்கள் என்றும் சிசுதி நம்பிக்கையுடன் தெரிவித்தார். இளவரசன் சலீமின் பிறப்பிற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அக்பர் மரியம் உசு-சமானிக்கு ஒரு மகனை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக அஜ்மீர் தர்காவுக்கு புனிதப் பயணம் சென்றிருந்தார்.[22][23]
தனது முதன்மை இந்து மனைவி மீண்டும் ஒரு குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார் என்ற செய்தி அக்பருக்குத் தெரிவிக்கப்பட்ட போது, சேக் சலீம் சிசுதி தங்கியிருந்த இடத்திற்கு அருகில் சிக்ரியில் ஓர் அரண்மனையை நிறுவ ஆணை வழங்கப்பட்டது. அங்கே மதிப்புக்குரிய துறவியின் பார்வையில் அமைதியான சூழ்நிலையைப் பேரரசி அனுபவிக்குமாறு செய்யப்பட்டது. அங்கு நிறுவப்பட்ட அரண்மனைக்கு மரியம் இடமாற்றப்பட்டார். அவர் கர்ப்பமாயிருந்த போது அக்பர் சிக்ரிக்கு பயணம் மேற்கொள்வார். தனது நேரத்தில் பாதியைச் சிக்ரியிலும், மற்றொரு பாதியை ஆக்ராவிலும் கழித்தார்.[24]
ஒரு நாள் மரியம் உசு-சமானி சலீமைத் தன் வயிற்றில் சுமந்த போது குழந்தை உதைப்பதை திடீரென நிறுத்தியது. இச்செய்தி அக்பருக்குத் தெரிவிக்கப்பட்ட போது அந்த நேரத்தில் அவர் சிறுத்தைப் புலிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தார். தனது இன்னும் பிறக்காத குழந்தையின் பாதுகாப்புக்காகத் தன்னால் மேலும் ஏதாவது செய்ய முடியுமா என்று அவர் எண்ணிக் கொண்டிருந்தார். அந்த நாள் முதல் சிறுத்தைப் புலிகளை வெள்ளிக் கிழமையில் வேட்டையாட மாட்டேன் என்று அக்பர் சபதம் கொண்டார். சலீம் தனது தன்வரலாற்று நூலில் தன் வாழ்நாள் முழுவதும் அக்பர் இந்த சபதத்தைக் கடைபிடித்தார் என்று குறிப்பிடுகிறார். சலீமும் கூட தன்னுடைய தந்தையின் சபதத்துக்கு மதிப்பளிக்கும் விதமாக வெள்ளிக் கிழமையில் என்றுமே சிறுத்தைப் புலிகளை வேட்டையாடியது கிடையாது.[25] மரியம் உசு-சமானி பிரசவ காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது சலீம் சிசுதியின் எளிமையான குடியிருப்புக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு இவர் சலீமைப் பெற்றெடுத்தார். புனிதர்களின் பிரார்த்தனை மீது அக்பருக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக அக்பர் இளவரசனுக்கு சலீம் சிசுதுயின் பெயரான சலீமை வைத்தார்.[13][26] தனக்கு வாரிசு வந்த செய்தியை அறிந்த அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சலீமின் பிறந்த நிகழ்வை ஒட்டி ஒரு பெரும் விருந்துக்கு ஆணையிட்டார். பெரும் குற்றமிழைத்த குற்றவாளிகளைக் கூட விடுவித்து ஆணையைப் பிறப்பித்தார். பேரரசு முழுவதும் பொதுமக்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. உடனே சிக்ரிக்குச் செல்ல அக்பர் தயாரானார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மகனின் பிறப்பிற்குப் பிறகு ஒரு தந்தை உடனே அவனைப் பார்க்கக்கூடாது என்று இந்துஸ்தானில் நிலவிய நம்பிக்கையின் பொருட்டு சிக்ரிக்குச் செல்லும் அவரின் பயணத்தைத் தள்ளி வைக்குமாறு அக்பரின் அவையோர்கள் அறிவுறுத்தினர். எனவே அக்பர் தனது பயணத்தைத் தள்ளி வைத்தார். இவர் பிறந்து 41 நாட்களுக்குப் பிறகு சிக்ரிக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனைக் கண்டார். ஜஹாங்கீரின் வளர்ப்புத்தாய் இந்திய சூபித் துறவி சலீம் சிசுதியின் மகள் ஆவார். இவரின் வளர்ப்புச் சகோதரர் சிசுதியின் பேரனான குதுபுதீன் கோகா (உண்மையில் சேக் குபு) ஆவார்.[27][28]
சலீம் தனது 5ஆம் வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார். இந்த நிகழ்வின்போது தனது மகன் கல்வி கற்பதைத் தொடங்கி வைக்க விழா எடுப்பதற்காக ஒரு பெரிய விருந்தைப் பேரரசர் அக்பர் அளித்தார். இவரது முதல் ஆசிரியர் குத்புதீன் கோகா ஆவார். பாரசீக மொழி, அரபி, துருக்கிய மொழி, இந்தி, எண்கணிதம், வரலாறு, புவியியல் மற்றும் அறிவியலைக் கற்றுக் கொடுப்பதற்காக பல பிற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பல்துறைப் புலமை வாய்ந்த மேதைகளில் ஒருவரான அப்துல் ரஹீம் கான்-இ-கானா இவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் ஆவார்.[29] இவரது மாமா பகவந்த் தாசு ஆமெரை ஆண்ட கச்வகா ஆட்சியாளராக இருந்தார். போர் உத்திகள் குறித்த படத்திற்காக இவருக்கு ஆசிரியராக அவர் இருக்க வேண்டியிருந்தது.[சான்று தேவை] இந்த நேரத்தில் ஜஹாங்கீர் பாரசீக மொழி மற்றும் நவீன காலத்துக்கு முந்தைய உருது மொழியைச் சரளமாகப் பேசத் தெரிந்தவராக வளர்ந்தார். முகலாயர்களின் பண்டைய மொழியான அரசவையில் பேசப்பட்ட பாரசீகமயமாக்கப்பட்ட சகதாயி ("துர்கி") குறித்த "மதிக்கத்தக்க" அறிவையும் இவர் கொண்டிருந்தார்.[30]
24 பெப்ரவரி 1585 அன்று ஜஹாங்கீர் ஆம்பரின் கச்வகா இராசபுத்திர இளவரசியான குமாரி மன்பவத் தெய்சியை அப்பெண்ணின் பூர்வீகப் பட்டணமான ஆம்பரில் திருமணம் செய்து கொண்டார். ஆம்பர் கோட்டையில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. பெண்ணின் பல்லக்கானது அப்பெண்ணுக்கு மரியாதை செலுத்துவதற்காக குறுகிய தூரத்துக்கு அக்பர் மற்றும் சலீமால் தோலில் தாங்கப்பட்டு தூக்கிச் செல்லப்பட்டது. மரியம் உசு-சமானி மணமகன் மற்றும் மணப் பெண்னுக்கு கொடுத்த பரிசுப் பொருட்களின் மதிப்பானது ₹12 இலட்சம் என மதிப்பிடப்பட்டது.[31] இப்பெண் ஜஹாங்கீரின் விருப்பத்திற்குரிய மனைவியானார். சாதாரண மனைவி என்பதைத் தவிர்த்து சீக்கிரமே ஒரு பட்டத்து இளவரசி என்ற நிலைக்கு உயர்ந்தார். இவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததாக ஜஹாங்கீர் குறிப்பிட்டுள்ளார். இவர் இளவரசராக இருந்த நாட்களில் அரசு அந்தப் புரத்தில் இவரது முதன்மையான மனைவியாக இவருக்கு மதிப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அப்பெண் மீதான இணைப்பு மற்றும் அன்பு குறித்து ஜஹாங்கீரும் கூட பதிவிட்டுள்ளார். அப்பெண் இவர் மீது கொண்டிருந்த உறுதியான பக்தி குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.[32] ஜஹாங்கீர் இவருக்கு "ஷா பேகம்" என்ற மரியாதைக்குரிய பட்டத்தைக் கொடுத்தார். ஜஹாங்கீரின் மூத்த மகனான இளவரசன் முஸ்ரவ் மிர்சாவை இவர் பெற்றதற்குப் பின்னர் இப்பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.[33]
11 சனவரி 1586 அன்று ஜஹாங்கீர் தன்னுடைய தொடக்க கால விருப்பத்திற்குரிய மனைவிகளில் ஒருவரான இரத்தோர் இராசபுத்திர இளவரசியான குமாரி மனவதி தெய்சியைத் திருமணம் செய்து கொண்டார். இவர் சோத்பூர் சமஸ்தானத்தின் மோதா இராஜா உதய் சிங்கின் மகள் ஆவார். சோத்பூரில் மணப் பெண்ணின் இருப்பிடத்தில் இத்திருமணம் நடைபெற்றது[34]. அவரது இறப்பிற்குப் பிறகு ஜஹாங்கீர் அவருக்கு "பில்கிசு மகானி" (பொருள். தூய்மையான இருப்பிடத்தில் வசிக்கும் பெண்)என்ற மரியாதைக்குரிய பட்டத்தைக் கொடுத்தார். சலீமின் இரண்டு மகள்களை இவர் பெற்றெடுத்தார். இந்த இரண்டு மகள்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். இளவரசன் குர்ரமையும் இவர் தான் பெற்றெடுத்தார். இவரே எதிர்காலத்தில் பேரரசர் ஷாஜகான் ஆனார். அரியணைக்கு ஜஹாங்கீருக்குப் பின் இவர் ஆட்சிக்கு வந்தார்.[சான்று தேவை] 26 சூன் அன்று ஜஹாங்கீர் இரண்டாவது இரத்தோர் இராசபுத்திரப் பெண்ணான குமாரி சுஜாஸ் தெய்சியை மணம் புரிந்தார். சோத்பூரின் ஒரு பிரிவினரான பிகானேரின் இராஜா இராய் சிங்கின் மகள் இவர் ஆவார். சூலையில், இவர் அபு சயீத் கான் சகதாயியின் மகளான மலிகா சிகார் பேகத்தைத் திருமணம் புரிந்து கொண்டார். மேலும், 1586இல் ஆப்கானித்தானின் ஹெறாத் நகரத்தில் இருந்த கவாஜா அசனின் மகளான சாகிப்-இ-சமால் பேகத்தைத் திருமணம் செய்து கொண்டார். சய்ன் கான் கோகாவின் ஓர் உறவினர் இப்பெண் ஆவார்.
இவர் 3 நவம்பர் 1605 வியாழக் கிழமைக்கு அன்று இவரது தந்தையின் இறப்பிற்கு எட்டு நாட்களுக்கு பிறகு அரியணை ஏறினார். சலீம் அரியணைக்கு நூருதீன் முகம்மது ஜஹாங்கீர் பாட்ஷா காஷி என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். இவ்வாறாக தனது 36ஆம் வயதில் தன்னுடைய 22 ஆண்டு கால ஆட்சியை தொடங்கினார். சீக்கிரமே இவர் தன்னுடைய சொந்த மகன் இளவரசர் குஸ்ரவ் மிர்சாவுடனேயே சண்டையிட வேண்டியிருந்தது. அக்பரின் உயிலை அடிப்படையாகக் கொண்டு அக்பரின் அடுத்த வாரிசாக அரியணைக்கு குஸ்ரவ் மிர்சா உரிமை கோரினார். பர்கா மற்றும் புகாரி சையிதுகளின் உதவியுடன் 1606ஆம் ஆண்டு குஸ்ரவ் மிர்சா தோற்கடிக்கப்பட்டார். ஆக்ரா கோட்டையில் ஒடுக்கி வைக்கப்பட்டார்.[35] தன்னுடைய விருப்பத்திற்குரிய மகனாக ஜஹாங்கீர் தன்னுடைய மூன்றாவது மகன் இளவரசர் குர்ரமை (பட்டப்பெயர் ஷாஜகான்) கருதினார். தண்டனையாக குஸ்ரவ் மிர்சா தன்னுடைய தம்பி குர்ரமிடம் ஒப்படைக்கப்பட்டார். பகுதியளவு கண்பார்வையற்றவர் ஆக்கப்பட்டார். பிற்காலத்தில் நூர் சகான் என்று அறியப்பட்ட மெகருன்னிசாவுடனான தனது திருமண வாழ்வு காலத்திலிருந்து, ஜஹாங்கீர் தன்னுடைய அரசாங்கத்தின் கடிவாளத்தை அவரது கைகளில் கொடுத்துவிட்டார். நூர் சகானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை உயர் பதவிகளுக்கு நியமித்தார். நூர் சகானுக்கு முழுவதுமான பேச்சு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜஹாங்கீர் அவரை கண்டிக்கவில்லை. மாறாக சிறு விஷயங்களில் கூட ஜஹாங்கீரிடம் நூர் சகான் சண்டையிட்டார். அரசை கட்டுப்படுத்துவதில் அதற்கு முன்னர் கண்டிராத சுதந்திரத்தை நூர் சகான் கொண்டிருந்தார். நூர் சகானின் சுதந்திர செயல்பாடுகள் ஜஹாங்கீரின் அரசவையினர் மற்றும் அயல் நாட்டவர் ஆகியோர் மத்தியில் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தியது.[36] அக்டோபர் 1616இல் அகமது நகர், பிஜாப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய அரசுகளின் ஒன்றிணைந்த படைகளுக்கு எதிராக சண்டையிட ஜஹாங்கீர் இளவரசர் குர்ரமை அனுப்பினார்.[37] எனினும், நூர் சகான் தனது முதல் கணவருடன் தான் பெற்றெடுத்த மகளான லத்லி பேகத்தை ஜஹாங்கீரின் இளைய மகன் சகாரியர் மிர்சாவுக்கு பெப்ரவரி 1621இல் திருமணம் செய்து வைத்தது, தன்னுடைய சிற்றன்னை தன்னைத் தாண்டி சகாரியரை ஜஹாங்கீரின் வாரிசாக நியமிக்க முயற்சிப்பதாக குர்ரம் சந்தேகிப்பதற்கு வழி வகுத்தது. தக்காணத்தின் கரடு முரடான நிலப்பரப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 1622ஆம் ஆண்டு ஜஹாங்கீருக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைக் குர்ரம் தொடங்கினார். ஜஹாங்கீரின் அரசவையில் ஒரு அரசியல் பிரச்சினையை இது விரைவுபடுத்தியது. குர்ரம் அரியணைக்கு தன்னுடைய சொந்த பாதையை மென்மையாக்கும் பொருட்டு கண்பார்வையற்ற தனது அண்ணன் குஸ்ரவ் மிர்சாவை கொலை செய்தார்.[38]
இதே நேரத்தில், 1622ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் சபாவிய ஆட்சியாளரான ஷா அப்பாஸ் காந்தாரத்தைத் தாக்கினார். முகலாயப் பேரரசின் எல்லையில் ஒரு வணிக மையமாகவும், முகலாய அரசமரபைத் தோற்றுவித்த பாபர் புதைக்கப்பட்ட இடமாகவும் இருந்ததால் சபாவியர்களை முறியடித்து வெளியேற்ற சகாரியாரை ஜஹாங்கீர் அனுப்பினார். சகாரியாரின் அனுபவமின்மை மற்றும் கடுமையான ஆப்கானிய குளிர்காலம் ஆகியவற்றின் காரணமாக காந்தாரமானது சபாவியர்களிடம் வீழ்ந்தது. மார்ச் 1623இல் தன் மிகுந்த விசுவாசத்துக்குரிய தளபதிகளில் ஒருவரான மகாபத் கானை தக்காணத்தில் குர்ரமின் கிளர்ச்சியை ஒடுக்குமாறு ஜஹாங்கீர் ஆணையிட்டார். குர்ரமுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான வெற்றிகளை மகாபத் கான் பெற்றதற்குப் பிறகு உள்நாட்டு போரானது இறுதியாக அக்டோபர் 1625இல் முடிவுக்கு வந்தது.[37][12]
ஜஹாங்கீர் தன்னுடைய "நீதிச் சங்கிலிக்கு" பெயர் பெற்றிருந்தார். சம கால ஓவியங்களில் தங்க மணிகளையுடைய ஒரு தங்கச் சங்கிலியாக இது காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய நினைவுக் குறிப்பான துசுக்-இ-ஜஹாங்கீரியில் ஒடுக்கப்பட்ட குடி மக்கள் எந்த ஒரு நிலையிலும் நீதி மறுக்கப்பட்டிருந்தால் பேரரசரிடம் முறையிடுவதற்காக இந்தச் சங்கிலியை உருவாக்கத் தான் ஆணையிட்டதாக ஜஹாங்கீர் எழுதியுள்ளார். முகலாய அரசவைக்கு பிரித்தானிய தூதுவராக வந்த தாமசு ரே "தரிசனத்தின்" போது தீர்ப்புகளானவை அவர்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் பேரரசரின் கவனத்தை பெறுவதற்காக நீதிச் சங்கிலியை மனு அளிப்பவர்கள் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய-அரசியல் பழக்க வழக்கங்களின் படி தங்களது குடி மக்களுக்கு முன்னால் தோன்றி மக்களைச் சந்திப்பதிலிருந்து முகலாயப் பேரரசர்கள் இந்த "தரிசன" பழக்க வழக்கத்தைப் பின்பற்றியிருந்தனர். இது மனு நீதிச் சோழனின் நீதி வழங்கும் முறையை ஓரளவு ஒத்துள்ளது.[39]
Seamless Wikipedia browsing. On steroids.