பஞ்சு அருணாசலம்
பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
பஞ்சு அருணாசலம் (Panchu Arunachalam, 18 சூன் 1941 – 9 ஆகத்து 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதற்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது.[2] கவிஞர் கண்ணதாசன் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.[3] பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். [4] மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு, நடிகர் சுப்பு ஆவார்.
பஞ்சு அருணாசலம் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, காரைக்குடி, சிறுகூடல்பட்டி[1] | 18 சூன் 1941
இறப்பு | ஆகத்து 9, 2016 75) சென்னை, இந்தியா | (அகவை
பணி | தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1965-2016 |
வாழ்க்கைத் துணை | மீனா |
பிள்ளைகள் | சுப்பு பஞ்சு, சண்முகம், கீதா, சித்ரா |
ஏ.எல்.எஸ். ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.[3]
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார்.[4]. விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே, இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும்[5]. இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு[6]
வரிசை எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல் | பாடியவர்கள் | இசையமைப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | 1963 | ஏழை பங்காளன் | தாயாக மாறவா | |||
2 | 1963 | நானும் ஒரு பெண் | பூப்போல பூப்போல பிறக்கும் | |||
3 | 1965 | கலங்கரை விளக்கம் | பொன்னெழில் பூத்தது | டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா | எம். எஸ். விஸ்வநாதன் | |
4 | 1978 | காற்றினிலே வரும் கீதம் | ஒருவானவில் போலே என் | |||
5 | 1979 | ஆறிலிருந்து அறுபது வரை | கண்மணியே காதல் என்பது | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
6 | 1984 | தம்பிக்கு எந்த ஊரு | காதலின் தீபமொன்று ஏற்றினாளே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | |
7 | 1989 | மாப்பிள்ளை | மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
8 | 1976 | அன்னக்கிளி | திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் | இளையராஜா |
பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.