முனிவர். From Wikipedia, the free encyclopedia
ரிஷி (Rishi) (சமக்கிருதம்: ऋषि தவ வலிமையல், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து வேத மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆவார். ரிஷிகளை [1][2] மந்திரதிரஷ்டா என்பர்.[3] வேத மந்திரங்களின் சப்தத்தை உணர்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்று இதற்குப் பொருளாகும். தங்களால் அறியப்படும் வேதமந்திரங்களை ரிஷிகள் செய்யுள் வடிவிலும், சூக்தங்களாகவும் அமைத்துப் பாடி வைத்தனர்.[4] ரிஷிகளின் தாங்கள் கண்டறிந்த ஒலி அலைகளை மந்திரங்களாகப் படைத்து வேத மந்திரங்களை அமைத்தனர். பின்னர் வந்த முனிவர்கள் தங்கள் வசதிக்காக வேதத்தை இருக்கு, சாமம், யஜூர் மற்றும் அதர்வணம் என நான்காகப் பிரித்தனர்.
ரிக் வேத கால ரிஷிகளில் புகழ்பெற்றவர்கள் வசிட்டர், விசுவாமித்திரர், பாரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், ஆங்கிரசர், கௌதமர், தீர்க்கதமஸ், வசிட்டர், யாக்யவல்க்கியர் முதலானவர்கள் ஆவார். பெண் ரிஷிகளில் புகழ் பெற்றவர்களாக லோபாமுத்திரை, மேதாதிதி, அபலா, கோஷா, ஜுகு, வாகம்பிரினீ, பௌலமி, யமி, இந்திராணி, சாவித்திரி மற்றும் தேவயானி என ரிக் வேதம் கூறுகிறது.
முதல் மன்வந்தரத்தில் இருந்த மரீசி, அத்திரி, ஆங்கிரஸ், புலஸ்தியர், கிரது, புலகர், வசிட்டர் ஏழு சப்தரிஷிகளைக் குறித்து மகாபாரத காவியம் கூறுகிறது.
ரிஷிகளின் தவ வலிமைக்கு தக்கவாறு தேவரிஷி, பிரம்மரிஷி, மகரிஷி, இராஜரிஷி, ரிஷி அழைக்கப்படுகிறார்கள். தேவரிஷிகளில் நாரதரும், பிரம்மரிஷிகளில் வசிட்டரும், இராஜரிஷிகளில் விசுவாமித்திரரும், மகரிஷிகளில் வாமதேவரும் நன்கறியப்பட்டவர்கள்.
ஹேமாத்திரி என்பவர் எழுதிய சதுர்வர்க்க-சிந்தாமணி எனும் நூலில் எட்டு தொகுப்புகள் கொண்ட பிராம்மனங்களில் ரிஷிகளை ஏழாவது தொகுப்பில் வைத்துள்ளது.
அமரசிம்மர் எழுதிய சமஸ்கிருத நிகண்டான அமரகோசத்தில்[5] ரிஷிகளில் சிரௌதரிஷி, காந்தர்ரிஷி, பரமரிஷி , மகரிஷி , இராஜரிஷி , பிரம்மரிஷி மற்றும் தேவரிஷி ஏழாக வகைப்படுத்திகிறது.
ரிஷிகள் இல்லற வாழ்க்கை வாழ்ந்தனர். வேத காலத்திற்கு பின்னரே சந்நியாசம் என்ற ஆசிரம வாழ்க்கைத் தோன்றியது. மேலும் அமரகோசம் நிகண்டு துறவிகள் சந்நியாசிகள், முனிவர்கள், பிக்குகள், பிரம்மச்சாரிகள், பரிவிவ்ராஜகர்கள், தபஸ்விகள், யதிகள் முதலானர்களிடமிருந்து ரிஷிகளை முற்றிலும் வேறுபட்டவர்களாகக் கூறுகிறது.
ரிஷிகளின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு சில சமூகத்தினர் தங்களின் கோத்திரங்களைக் கொண்டுள்ளனர். ரிஷி பாரத்துவாசரின் வழிவந்தவர்கள், தங்களை பரத்துவாஜ கோத்திரத்தினர் என அழைத்துக் கொள்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் அந்தணர்கள் ரிஷிகளின் பெயர்களை கோத்திரங்களாக வைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சௌராட்டிரர் மற்றும் ஆயிர வைசியர் சமூகத்தினரும் ரிஷிகளின் பெயரைக் கோத்திரங்களாகக் கொண்டுள்ளனர்.
கர்நாடகா இசையின் மேளகர்த்தா இராகங்களில் ரிஷி என்பது ஏழாவது சக்கரத் தொகுதியாக அமைந்துள்ளது.[6][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.