Remove ads
ஒரு சாதியினர் From Wikipedia, the free encyclopedia
நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார் என்று அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில் முற்பட்ட சாதியினர் பிரிவில் உள்ளனர்.[1] இவர்கள் நகரத்தார் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சுற்றியுள்ள 76 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகச் சமுதாயத்தினரான இவர்கள் வாழும் இந்தப் பகுதி செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது சைவ சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவர்கள் சமையலில் தங்களுக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர்கள். நகரத்தார்களின் வீடுகள் மிகப் பிரம்மாண்டமானவை, இவ்வீீீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது
சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். திசையாயிரத்து ஐநூற்றுவர், நானாதேசிகள் எனப்பல்வேறு வணிகக்குழுவின் பெயரால் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறார்கள் பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் 96 ஊர்கள் 76 ஊராக மாறியது பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது.
செட்டிநாடு என்று சொல் வழக்கில் இந்த 76 கிராமங்கள் அமைந்த பகுதி தனித்த கட்டிடக் கலையையும், பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் ஆலைத்தொழில், மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான பெரும் வணிகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள்.
ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும், மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப் பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.
பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
1950ல் தமிழ்நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப்பயிற்சியாகும்.
இந்த ஒன்பது கோயில்களும் நகரக் கோயில் என்று அழைக்கப்படும். இவை பாண்டியனால் நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவில் சுட்டசெங்கலால் ஆன கோயிலாக இருந்து வந்துள்ளது. பின்னர் நகரத்தாரால் பெரிய கற்றளி கோயிலாக கட்டப்பட்டுள்ளது.
ஒரு கோயிலை சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. அவை, இளையாற்றங்குடி கோயில் : ஒக்கூருடையார், பட்டணசாமியார், பெருமருதூருடையார், கழனி வாசல்குடியார், கிங்கிணிக்கூருடையார், பேரசெந்தூருடையர், சிறுசெந்தூருடையர். மாத்துர் கோயில் : உறையூர், அரும்பாக்கூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர், மண்ணூர், மணலூர். வைரவன் கோயில்: பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.
நாட்டுக்கோட்டை நகரத்தார் வாழும் 76 ஊர்கள்(ஒரு காலத்தில் 96 ஊராக இருந்தது)பின்வருமாறு.
● வீர. லெ. சிந்நயச் செட்டியார், பெரும்புலவர், சைவ சித்தாந்த வித்தகர்.
● பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், சைவ சித்தாந்த வித்தகர்.[4]
● அருசோ, பொற்கிழிக்கவிஞர்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.