கண. முத்தையா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

கண. முத்தையா (24 மே 1913 – 12 நவம்பர் 1997) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய விடுதலைக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியும் ஆவார். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கண்ணப்பன் மறைவால் மெட்ரிக் தேர்வு எழுத இயலாது, தந்தையின் வணிகத்தை மீட்டெடுத்தார்.

விரைவான உண்மைகள் கண. முத்தையா, பிறப்பு ...
கண. முத்தையா
பிறப்பு24 மே 1913 (1913-05-24) (அகவை 111)
இறப்பு12 நவம்பர் 1997(1997-11-12) (அகவை 84)
பெற்றோர்கண்ணப்பன்
மூடு

இந்திய விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர். 1936-ல் வணிகத்திற்காக பர்மா சென்று, தன வணிகன் இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவர். பின்னர். 1937-இல் ஜோதி மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார்.

பர்மாவின் ரங்கூன் நகரை அடுத்த கம்பை எனும் ஊரில் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியை கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, இராகுல் சாங்கிருத்தியாயனின் பொதுவுடைமைதான் என்ன , வால்காவிலிருந்து கங்கை வரை என இரண்டு நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.

1946-இல் தமிழ் புத்தகாலயத்தை நிறுவினார்[1]. நேதாஜியின் புரட்சி என்ற நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார். மாவோ, கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களை தமிழில் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, பிரேம்சந்த் போன்ற இந்தி மொழி இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில் வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர்..[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.