இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா (Haradanahalli Doddegowda Deve Gowda, கன்னடம்: ಹರದನಹಳ್ಳಿ ದೊಡ್ಡೇಗೌಡ ದೇವೇಗೌಡ) (பிறப்பு மே 18,1933[1]) இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.
எச். டி. தேவ கவுடா | |
---|---|
11வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் 1 ஜூன் 1996 – 21 ஏப்ரல் 1997 | |
குடியரசுத் தலைவர் | சங்கர் தயாள் சர்மா |
முன்னையவர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
பின்னவர் | ஐ. கே. குஜரால் |
இந்தியா உள்துறை அமைச்சர் | |
பதவியில் 1 ஜூன் 1996 – 29 ஜூன் 1996 | |
பிரதமர் | தானே |
முன்னையவர் | முரளி மனோகர் ஜோஷி |
பின்னவர் | இந்திரஜித் குப்தா |
14வது கர்நாடக முதலமைச்சர் | |
பதவியில் 11 டிசம்பர் 1994 – 31 மே 1996 | |
ஆளுநர் | குர்சித் ஆலம் கான் |
Deputy | ஜெயதேவப்பா ஹாலப்பா படேல் |
முன்னையவர் | வீரப்ப மொய்லி |
பின்னவர் | ஜெயதேவப்பா ஹாலப்பா படேல் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 ஜூன் 2020 | |
முன்னையவர் | டி. குபேந்திர ரெட்டி |
தொகுதி | கர்நாடகம் |
பதவியில் 23 செப்டம்பர் 1996 – 2 மார்ச் 1998 | |
முன்னையவர் | லீலாதேவி ரேணுகா பிரசாத் |
பின்னவர் | ஏ.லட்சுமிசாகர் |
தொகுதி | கர்நாடகம் |
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)யின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஜூலை 1999 | |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 17 மே 2004 – 23 மே 2019 | |
முன்னையவர் | ஜி.புட்டசாமி கவுடா |
பின்னவர் | பிரஜ்வால் ரேவண்ணா |
தொகுதி | ஹாசன் |
பதவியில் 2 பிப்ரவரி 2002 – 16 மே 2004 | |
முன்னையவர் | எம். வி. சந்திரசேகர மூர்த்தி |
பின்னவர் | தேஜஸ்வினி ஸ்ரீரமேஷ் |
தொகுதி | கனகபுரம் |
பதவியில் 10 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999 | |
முன்னையவர் | ருத்ரேஷ் கவுடா |
பின்னவர் | ஜி.புட்டசாமி கவுடா |
தொகுதி | ஹாசன் |
பதவியில் 20 ஜூன் 1991 – 11 டிசம்பர் 1994 | |
முன்னையவர் | எச்.சி ஸ்ரீகாந்தய்யா |
பின்னவர் | ருத்ரேஷ் கவுடா |
தொகுதி | ஹாசன் |
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1994 –1996 | |
முன்னையவர் | சி.எம்.லிங்கப்பா |
பின்னவர் | சி.எம்.லிங்கப்பா |
தொகுதி | இராமநகரம் |
பதவியில் 1962 –1989 | |
முன்னையவர் | வை.வீரப்பா |
பின்னவர் | ஜி.புட்டசாமி கவுடா |
தொகுதி | ஹோலெனரசிபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா 18 மே 1933 ஹரதனஹள்ளி, மைசூர், பிரித்தானிய இந்தியா (இப்போது கர்நாடகா, இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) (1999–இன்றுவரை) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | சென்னம்மா (தி. 1954) |
பிள்ளைகள் | 6 குழந்தைகள்;உட்பட எச். டி. குமாரசாமி, ஹ.தே. ரேவண்ணா |
கல்வி | பொறியியல் டிப்ளோமா |
முன்னாள் கல்லூரி | எல். வி. பாலிடெக்னிக், ஹாசன் |
தொழில் | அரசியல்வாதி, விவசாயி, பொறியாளர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | hddevegowda |
விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தேவ கௌடா,[2] 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கவுடா 1975களில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980இல் அக்கட்சி பிளவுபட்டது. அதன் பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் அவர் தலைமையில் நடந்த போபர்ஸ் ஊழல், ரஃபேல் ஊழல், எச்.டி.நீர்முழ்கி கப்பல் ஊழல் வழக்குகளை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறிய அமைச்சர்களில் ஒருவரான வி. பி. சிங் ஆரம்பித்த ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார். 1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க முடியததால். அத்தேர்தலில் வெற்றி பெற்ற பல மாநில கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற முன்னணியை உருவாக்கி ஜனதா தளம் கட்சி சார்பில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார்.
1999 இல் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சியை முடக்கம் செய்து கொண்டதால். தனது தலைமையில் ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்று வரை உள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.