Remove ads
பொறியியல் தொழில்முறை பயிற்சியாளர் From Wikipedia, the free encyclopedia
பொறியாளர் (பொறியியலாளர், engineer) என்பவர் பொறியியலின் கோட்பாடுகளைப் பின்பற்றும் ஒரு தொழில்முறை செயற்பாட்டாளர் ஆவார். மேலும் அறிவியல் அறிவு (scientific knowldge), கணிதம் (mathematics), அறிவுக்கூர்மை (அல்லது) திறமை [ingenuity] ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பம் ,சமூகம் ,வணிகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டறிந்து முன்னேற்ற வேண்டும். பொறியியலாளர் உலோகம், வடிவம், அமைப்பு ஆகியவற்றை அறிந்து பாதுகாப்புகள் (safety), நிபந்தனைகள் (regulation), செலவுகள் (cost) போன்ற செயல்முறைகளை வரையரையுடன் திட்டமிட்டு செய்ய வேண்டும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
1868ல் நடைபெற்ற பொறியியலாளர்கள் மாநாடு. | |
தொழில் | |
---|---|
பெயர்கள் | பொறியாளர் |
வகை | தொழில் |
செயற்பாட்டுத் துறை | செயல்முறை அறிவியல் |
விவரம் | |
தகுதிகள் | கணிதம், அறிவியல் அறிவு, மேலாண்மை திறன் |
தேவையான கல்வித்தகைமை | பொறியியல் கல்வி |
தொழிற்புலம் | ஆய்வு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி, தொழில்துறை, வணிகம் |
தொடர்புடைய தொழில்கள் | விஞ்ஞானி, கட்டிடக்கலை, திட்ட மேலாளர் |
பொறியாளர் அல்லது பொறியியலாளர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான ingieniare( "to contrive, devise") என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகும். [பொறியியலாளர் (கண்டுபிடித்தல் ,உருவாக்குதல்) மற்றும் ingenium ("Cleverness") (புத்திகூர்மை) என்று பொருள்படும்.
ஒரு பொறியியலாளரின் தொழில் என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் (scientific discoveries) மற்றும் மனித தேவைகளின்( human needs) மேம்பட்ட வாழ்க்கைக்கு பின்தொடரும் தொழில்நுட்பங்களுக்கும் இடையில் ஓர் இனணப்பை ஏற்படுத்துவதே ஆகும்.
வடிவமைப்பு (Design) என்பது பெரும்பாலும் வடிவமைப்பு என்றே பொருள்படும். ஆனால் பொறியாளர்கள் வடிவமைப்பை திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும்.
பொறியாளர் அல்லது பொறியியலாளர் புதிய தொழில்நுட்பங்களுக்கான தீர்வுகளை வளர்க்க (develop) வேண்டும். பொறியாளரின் திட்டத்தின் செயல்முறையானது தீர்வுகளை வரையறுத்தல், பகுப்பாய்வு பிரமாணம், நுணுக்கமான ஆராய்ச்சி, பகுப்பாய்வு தீர்வுகள் மற்றும் முடிவான கருத்தை உருவாக்குதல் போன்றவை அவசியமானது. பொறியியலாளர் அதிக அளவில் நேரத்தை ஆராய்ச்சியின் (Research) மேல் ஈடுபடுத்த வேண்டும். தற்போது 56% பொறியாளர்கள் அவர்களின் நேரத்தை ஆராய்ச்சியின் மேல் ஈடுபடுவதாக அநேக நடத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உட்பட 14% பொறியாளர்கள் சுறுசுறுப்பாக தகவல்களை தேடுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றன.
பொறியாளர்கள் வேறுபட்ட முக்கியத்துவம் வாய்ந்த வடிவமைப்பைத் (Design) தேர்ந்தெடுப்பதனால் அவர்களின் மேல் நல்லியல்புகள் ஏற்படும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகள் மிக உயர்வானதாக இருப்பது அவசியம். மேலும் அவர்கள் தீர்மானிக்கிற ஒப்பற்ற திட்டமானது கண்டிப்பாக தெரிந்து கொண்டும் மற்றும் புரிந்து கொண்டும் செயல்பட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பகுப்பாய்வு (Analysis) என்பது பகுத்து ஆராய்வது ஆகும். பொறியியல் பகுப்பாய்வு என்பது பொறியியலாளர்கள் தாம் படிக்கும் (அ) கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றையும் பகுத்து ஆராய வேண்டும்.பொறியியலாளர் பொறியியல்பகுப்பாய்வு (engineering analysis) சோதனையில் உற்பத்திகளை (production) தொழில்நுட்பத்திற்கு (techniques) உபயோகிக்க வேண்டும். பகுப்பாய்வு பொறியியலாளர்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்த பொருளை வேறொரிடத்தில் உற்பத்தி செய்யும் போது தோல்வியுற்றால் உற்பத்தி அளவை சோதனை செய்து தொடர்ந்து செயலாற்றி தரத்தை உயர்த்த வேண்டும். மேலும் அவர்கள் முழுமையான திட்டத்திற்கு (Design) ஆகும் நேரம் (cost) மற்றும் பணத்தேவைகளை மதிப்பிட வேண்டும். அறிவியல் பகுப்பாய்வு கொள்கைகள் செயல்முறையின் குணம், அமைப்பின் நிலை ,கண்டுபிடிப்புகளை புலப்படச் செய்வதை பொறியியல் பகுப்பாய்வு உள்ளடக்குகிறது.
ஒவ்வொரு பொறியியலின் முக்கியமான பிரிவுகளில் எண்ணற்ற துணைப்பிரிவுகள் பல இருக்கின்றன. உதாரணமாக, குடிசார் பொறியியலில் (civil Engineering), வடிவமைப்பு (structural) பொறியியல், போக்குவரத்து (transportation) பொறியியல் எனவும் பிரிவுகள் இருக்கின்றன. இதை கட்டிடக்கலை பொறியியல் என்றும் அழைப்பர். மேலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் [Electrical and Electronics Engineering (EEE)], மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் கழகம் [Institute of Electrical and Electronics Engineering (IEEE)] ,பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் [ Institution of Engineering and Technology (IET) ] என பிரிவுகள் இருக்கின்றன. தற்போதைய ஆாய்வின்படி (investigated ) எப்படி நேரத்தை செலவிடுவது, செய்யப்பட வேண்டிய (tasks) வேலையை சிறப்பாக செய்ய, எல்லாவற்றிற்கும் எப்படி நேரத்தை அமைப்பது என்று பொறியாளர்களுக்கு விளக்குகிறது. ஆராய்ச்சியில் குறிப்பிட்டதின் படி நிறைய வழிமுறைகள் தற்போதுள்ள பொறியாளர்களுக்கு தேவை. அவைகள்
பொறியாளர்களின் ஆராய்ச்சியின்(Research) படி 62.92% பேர் தொழில்நுட்ப வேலையிலும் (technical work), 40.37% பேர் சமூக வேலையிலும் (social work), 49.66% பேர் அடிப்படை கணினி வேலையிலும் (computer-based work) இருப்பதாக ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பொறியாளர்கள் 37.97%பேர் தொழில்நுட்பம் மற்றும் சமூக வேலை இல்லாமல் (technical and non-social), 15.42% பேர் தொழில்நுட்பம் இல்லாமல் மற்றும் சமூக வேலையிலும் (non-technical and social), 21.66% பேர் தொழில்நுட்ப வேலையில் இல்லாமல் மற்றும் சமூக வேலையில் இல்லாமலும் (non-technical and non-social), இவ்வாறு அவர்கள் வேறுபட்ட வகைகளில் வேலைகளில் ஈடுபடுகின்றனர். பொறியாளர்களிடம் நடந்த ஆராய்ச்சியில் 55.8 % பேர் நேரத்தை வேறுபட்ட நடத்தை தகவல்களுக்கு நேரத்தை செலவிடுகின்றனர்.
பொறியாளர்கள் பொது மக்கள், பணியாளர்கள், மற்றவர்களுக்கும் உதவி செய்ய (obligations) வேண்டும். வடஅமெரிக்காவில் (North America) பொறியாளர்கள் பல்கழைக்கழக பட்டம் பெறும் நிகழ்ச்சியில் கையின் சிறிய விரலில் அணியக்கூடிய இரும்பால் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தால் செய்யப்பட்ட மோதிரமான இரும்பு மோதிரம் [Iron Ring ] அல்லது பொறியாளர்களின் மோதிரத்தை [Engineer's Ring] நினைவு கூர்ந்துள்ளனர். 1925 ல் கனடாவில் தொடங்கப்பட்ட மரபு ஒரு வழிபாட்டு முறையாக பொறியாளர்களின் ஓர் அடையாளமாகவும் மற்றும் நினைவூட்டுவதாகவும் பொறியாளர்களின் வேலைக்கு உதவியாக உள்ளது. 1972ல் செய்முறையானது (practice) அமெரிக்காவில் பல கல்லூரிகளில் இணைக்கப்பட்டது. இதனுடைய உறுப்பினர்கள் Order of the Engineer (ஒழுக்கமான பொறியாளர்கள்)
பெரும்பாலான பொறியாளர்களின் நிகழ்ச்சிகள் பொறியாளர்கள் கல்வியில் கவனத்தை செலுத்தவும் கணிதம் (mathematics), இயற்பியல் (physics), வாழ்க்கை அறிவியல் (life science) போன்றவைகளை உள்ளடக்க பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. மேலும் பல நிகழ்ச்சிகள் பொதுவான பொறியியல் மற்றும் பயன்பாட்டு கணக்குகளை(applied accounting) உள்ளடக்குகிறது. வடிவமைப்பு பயிற்சிகள், சில நேரங்களில் தொழிலகம் அல்லது, பயிற்சி வகுப்புகள் அல்லது, இரண்டுமே பாடத்திட்டத்தின் நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. பொதுவான பயிற்சிகள் பொறியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படாது. ஆகையால் அவர்கள் சமூக அறிவியல் அல்லது மனிதத்தன்மைகளை கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.
நிறைய நாடுகளில் பொறியாளர்கள் செய்யப்பட வேண்டிய வேலையான பாலங்கள், மின்சக்தி திட்டம் ,தொழிலக உபகரணங்கள் மற்றும் இயந்திர வடிவமைப்பு போன்றவை கண்டிப்பாக உரிமையான பொறியாளர்களின் தொழிலாகும்.UK (United Kingdom)ல் பொறியாளர்களின் செய்முறையானது நிபந்தனைகளற்ற தொழிலாக விளங்குகிறது. ஆனால் நிபந்தனைகளில் கட்டுப்பாடான தலைப்பாக Chartered Engineer (CEng) மற்றும் Incorporated Engineer (IEng). இந்த தலைப்புகள் கண்டிப்பான வரையரை தேவைகளுக்கு ஆலோசனைக் குழுவின் விதிகளால் உருவாக்கப்படுகின்றன. CEng என்ற தலைப்பு பெரும்பாலும் காமன்வெல்த் நாடுகளிலே பயன்படுத்துகின்றனர். கனடாவில், ஒவ்வொரு பிரதேசத்திலும் தொழில்கள் சொந்த பொறியாளர் கழகங்களால் கெளரவிக்கப்படுகின்றன.
கனடா மற்றும் அமெரிக்காவில் பொறியாளர்கள் செயல்முறைகள் மற்றும் தொழில்பயில உரிமையுள்ள விதிகளால் தொழில் நிபந்தனைகளை செய்கின்றனர். 2002, மருத்துவர் மற்றும் மருந்தகத்திற்கு அடுத்ததாக மூன்றாவதாக பொறியாளர்களின் தொழில் மற்றும் பொறியாளர்கள் Ontario சமூகத்தில் படித்தனர். பெரும் நிலப்பகுதியான இந்தியா (India), ரஷ்யா (Russia), சீனாவில் (China), பொறியியல் முடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் திறமைகளுடன் உயர்ந்த நுழைவுத் தேர்வு போட்டிகளில் வரும்படி அழைத்துள்ளனர். எகிப்தின் (in Egypt) கல்வித் திட்டத்தின்படி இரண்டாவது, மரியாதைக்குரியதாக பொறியியல் விளங்குகிறது. பொறியியல் கல்லூரிகள் பொதுவான சான்றிதழின்படி உயர்ந்த மதிப்புத் தேவையாக எகிப்தின் பல்கலைக்கழகம் கருதுகிறது. ஒன்றுபட்ட கலாச்சாரம்
அலுவலகம் மற்றும் பல நிறுவனங்களில் புகழ்பெற்றவர் மற்றும் நிர்வாகிகளை ஒப்பிடும் போது அறிவியல் திறமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் குறைந்த மதிப்புள்ள மக்களிடமும் அவர்கள் சாரந்து இருக்கிறார்கள்.
"The Mythical Man-Month" இந்த புத்தகத்தில் "Fred Brooks Jr" கூறியதாவது
நிர்வாகிகள் சிந்திப்பது மிகவும் மதிப்புமிக்க மூத்த குடிமக்களின் தொழில்நுட்ப வேலைகள் மற்றும் அவர்கள் நிர்வாகிகளின் வேலைகளை உயர்ந்த தன்மதிப்பாக எடுத்துக் கொள்வர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.