செய்ப்பூர்
இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் மற்றும் மாநகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
செய்ப்பூர் (ஆங்கிலம்: Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.
Remove ads
Remove ads
அமைவிடம்
மேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கி.மீ. தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கி.மீ. தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கி.மீ. தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கி.மீ. தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 1510 கி.மீ. தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கி.மீ. தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
வரலாறு
மக்கள்தொகையியல்
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர்.[1]
இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.
போக்குவரத்து
செய்ப்பூர் தொடருந்து நிலையம்
செய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, சம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விசயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, சான்சி, புவனேசுவர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது.[2]
செய்ப்பூர் வானூர்தி நிலையம்
ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது.
செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மசுகட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது.[3]
சாலைப் போக்குவரத்து
1428 கி.மீ. நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அச்சுமீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது.[4]
ஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கி.மீ. (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 செய்ப்பூர் வழியாக செல்கிறது.
Remove ads
சுற்றுலாத்தலங்கள்
படக்காட்சிகள்
- பிர்லா மந்திர், செய்ப்பூர்
- சாங்கிலி திகம்பர சமணக் கோயில்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads