மேற்கு இந்தியா
From Wikipedia, the free encyclopedia
மேற்கு இந்தியா இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களையும் டையூ-டாமன், தாத்ரா-நகர்வேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். மகாராஷ்டிரமானது தென்னிந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் முன்னர் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தன.
மேற்கு இந்தியா | |
---|---|
![]() | |
நாடு | இந்தியா |
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
சில நேரங்களில் சேர்க்கப்படும் பிற மாநிலங்கள் |
|
மிகப்பெரிய நகரம் | மும்பை |
அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் (2011) | |
பரப்பளவு | |
• மொத்தம் | 508,032 km2 (1,96,152 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 17,33,43,821 |
• அடர்த்தி | 340/km2 (880/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அலுவல் மொழிகள் |

இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகள் இங்கு பரவலாக பேசப்படுகின்றன.
புவியியல்
இப்பகுதியில் வடக்கில் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளான சவுராஷ்டிராவும், கட்ச் ஆகியன அமைந்து உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை தெற்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்கரையில் அமைந்துள்ளது. மத்திய மற்றும் கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா, மராத்வாடாவின் டெக்கான் சமவெளி, இப்பகுதியின் மற்ற பகுதிகளை வரையறுக்கிறது. கொங்கன் கடற்கரையில் வெப்பமண்டல மழைக்காடுகள் முதல் வடக்கு குஜராத்தில் உள்ள முட் புதர்கள் என பல்வேறு வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. இந்த பிராந்தியத்தில் மாகி, நர்மதா , டாபி, கோதாவரி, ஜுவாரி, மண்டோவி, கிருஷ்ணா, காகர், சம்பல் மற்றும் பிற நதிகளின் துணை நதிகள் ஓடுகின்றன.
காலநிலை
வெப்பநிலை 20 ° C முதல் 38 ° C வரை இருந்தாலும் கடலோரப் பகுதிகள் சிறிய பருவகால மாறுபாடுகளை அனுபவிக்கின்றன. மும்பை மற்றும் வடக்கு கொங்கன் பிராந்தியங்கள் குளிர்ந்த குளிர்காலத்தை அனுபவிக்கின்றன. குறைந்தபட்ச வெப்பநிலை 12 பாகை செல்சியசிற்கு அதிகமாக காணப்படும். மகாராஷ்டிராவின் உட்பகுதிகள் அதிகபட்சமாக 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையையும், குளிர்காலத்தில் சராசரியாக 10 பாகை செல்சியஸ் வெப்பநிலையையும் கொண்டிருக்கும். மேற்கு பிராந்தியத்தில் உள்ள புனே, கோடைகாலத்தில் 40-42 ° C வெப்ப நிலையையும், குளிர்காலத்தில் 6-7 ° C வெப்பநிலையை அனுபவிக்கிறது. குஜராத் வெப்பமான கோடைக் காலத்தையும், குளிர்ந்த குளிர்காலம் கொண்ட வெப்பமான காலநிலை கொண்டுள்ளது.
புள்ளிவிபரங்கள்
மேற்கு இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். சிறுபான்மையினர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இசுலாத்தைப் பின்பற்றுபவர்களும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். மராத்தி பேசும் பென் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் ஒரு சில பழங்குடி யூதர்களும் இங்கு வசிக்கின்றனர். சமணர்கள் மற்றும் பௌத்தர்களின் குறிப்பிடத்தக்க சதவீதங்களையும் காணலாம். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கோவா மாநிலத்தில் வாழ்கின்றனர்.
மொத்த மக்கட் தொகையில் இந்துக்கள் 83.66% வீதமும், முசுலீம்கள் 10.12% வீதமும், பௌத்தர்களும், கிறிஸ்தவர்களும் 4% வீதமும் உள்ளனர். பெரும்பாலும் கோவா மற்றும் மகாராஷ்டிராவில் கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும் வாழ்கின்றனர்.
சுமார் 73 மில்லியன் மக்களால் மராத்தி மொழியும், 46 மில்லியன் மக்கள் குஜராத்தி மொழியும், 2.5 மில்லியன் மக்களால் கொங்கனி மொழியும் அதிகம் பேசப்படும் மொழிகளாக திகழ்கின்றன. இவை அனைத்தும் இந்தோ-ஆரிய மொழிகளாகும்.[1] இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, நகர்ப்புறங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி கூடுதல் மொழிகளாக பேசப்படுகின்றன.[2]
மேற்கு இந்தியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் சுமார் 76% வீதம் ஆகும். இது தேசிய சராசரியான 70.5% ஐ விட அதிகமாகும். [3]மக்கட் தொகை அடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 290 ஆகும்.
பொருளாதாரம்
இப்பகுதியானது நாட்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி 14.5% வளர்ச்சி விகிதத்துடன் 24.00% வீதத்தை வழங்குகின்றது.[4] நாட்டின் வரி வருவாயில் சுமார் 23% வீதத்தை மேற்கு இந்தியாவின் மாநிலங்கள் வழங்குகின்றன. இப்பகுதியில் 85% வீதத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைக்கின்றது. சுமார் 55% வீதமானோர் தொலைக்காட்சியை பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகளும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
மேலும் பார்க்க
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.