தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
சோனாலி பேந்திரே (Sonali Bendre Behl) (மராத்தி: सोनाली बेंद्रे, 1 ஜனவரி 1975 இல் பிறந்தவர்) ஓர் இந்திய நடிகை மற்றும் மாதிரியுரு ஆவார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1]
சோனாலி பேந்திரே | |
---|---|
பிறப்பு | சனவரி 1, 1975 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
தொழில் | நடிகை, விளம்பர அழகி தொலைக்காட்சி தொகுப்பாளர் |
நடிப்புக் காலம் | 1994 - 2013 |
துணைவர் | கோல்டி பெல் |
பிள்ளைகள் | ரான்வீர் பெல் |
பெற்றோர் | சித் பேந்த்ரே (தந்தை) ரூப்சி பேந்த்ரே (தாய்) |
சோனாலி பேந்த்ரேவின் தாயார் ரூப்சி பேந்த்ரே, தந்தை சித் பேந்த்ரே ஆவர்.[2] சோனாலி பேந்த்ரே பெங்களூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார் மற்றும் மும்பையில் உள்ள ராம்நரேன் ரூயா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி நாட்களில், அவர் மாடலிங்கில் இறங்கினார் மற்றும் ஸ்டார் டஸ்ட் டேலண்ட் தேடலில் (Star Dust Talent Search) வெற்றி பெற்றதன் மூலம் அங்கீகாரம் பெற்றார்.[3] 12 நவம்பர் 2002 இல், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்டார்.[4] 9 ஆகஸ்ட் 2005 இல், ப்ரீச் கேண்டி மருத்துவமனையில், ரான்வீர் பெல் என்கிற அவரது மகனைப் பெற்றெடுத்தார்.[5]
கல்லூரி நாட்களில், விளம்பர மாதிரியுறருவாக பணியாற்றினார். மற்றும் ஸ்டார் டஸ்ட் டேலண்ட் தேடலில் (Star Dust Talent Search) வெற்றி பெற்றதன் மூலம் அங்கீகாரத்தை பெற்றார்.[6] மும்பைக்கு சென்ற சோனாலி, திரைப்படத் துறையின் பல்வேறு சிறந்த நடிகர்கள் மற்றும் திறமையாளர்களிடம் இருந்து பயிற்சி பெற்றார். 1994 இல் வெளியான ஆக் என்ற திரைப்படத்தில் கோவிந்தாவிற்கு ஜோடியாக சோனாலி முதல் முறையாக கதாநாயகியாகத் தோன்றினார்.[7]
சோனாலியின் பல திரைப்படங்களுள் பாய் (1997), முராரி (தெலுங்குத் திரைப்படம்), சர்ஃபரோச் , சம்கம் , டூப்ளிகேட் , காதலர் தினம் (தமிழ்த் திரைப்படம்) , கம் சாத்-சாத் கெயின் (1999), தேரா மேரா சாத் ரகே மற்றும் அனாகட் (2003) போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார்.[8]
அமீர் கான், சாருக் கான், சையிஃப் கான் மற்றும் சல்மான் கானுடனும் ஜோடியாக நடித்தார். அக்சய் குமார், சுனில் செட்டி, அஜய் தேவ்கான், சஞ்சய் தத் மற்றும் அனில் கபூர் போன்ற பாலிவுட்டின் பிற பெரிய நடிகர்களுடனும் சோனாலி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவரது நடிப்புத் திறமைகள் நன்றாக கவனிக்கப்பட்டதன் காரணமாக, கத்தார் (1995), சபூட் , பம்பாய் , லச்சா மற்றும் மேஜர் சாப் போன்ற சிலத் திரைப்படங்களின் நேர்த்தியாக நடனத்தை வெளிப்படுத்தினார். ஆப் கி சோனியா என்றழைக்கப்பட்ட அரங்க நாடகத்திலும் பேந்த்ரே நடித்தார்.[9][10][11]
கியா மஸ்தி கியா தூம் என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார்.[12] மேலும் இப்போது சோனி பொழுதுபோக்குத் தொலைக்காட்சியின் இந்தியன் ஐடால் என்ற நிகழச்சியின் நடுவர்களில் ஒருவராக பங்கேற்றார். 2003 இல், கரன் ஜோஹரால் தயாரிக்கப்பட்ட கல் ஹோ நா ஹோ வில் ஷாருக் கானின் மருத்துவராக பேந்த்ரே சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.
சையிஃப் அலிக் கான் மற்றும் பிரீத்தி சிந்தா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.[13] 26 பிப்ரவரி 2005 இல், சைப் அலிகான் மற்றும் பஃரீதா ஜலால் ஆகியோருடன் 50வது ஃபிலிம் ஃபேர் விருதுகளை பேந்த்ரே தொகுத்து வழங்கினார். பேந்த்ரே தற்போது இந்தியன் ஐடால் 4 மற்றும் இந்தியா'ஸ் காட் டேலண்ட் ஆகிய நிகழ்ச்சிகளின் நடுவராக பங்கேற்றார் .
1995 இல், ஃபிலிம் ஃபேர் லக்ஸ் புதுமுக விருதை பேந்த்ரே வென்றார்.[14]2001 இல், அனில் கபூர் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து நடித்த அமாரா தில் ஆப்கே பாசு கே திரைப்படத்தில் பேந்த்ரேவின் சிறந்த நடிப்புக்காக சிறந்த துணை நடிகைக்கான நட்சத்திரத் திரை விருதை அவர் வென்றார்.[15]
ஆண்டு | திரைப்படம் | மொழி | இதர குறிப்புகள் |
---|---|---|---|
1994 | ஆக் (தீ ) [16] | இந்தி | வெற்றி , ஃபிலிம்பேர் லக்ஸ் புதுமுக விருது |
1994 | நாராஸ் (கோபம்) [17] | இந்தி | |
1995 | த டான் [18] | இந்தி | |
1995 | கத்தார் [19] | இந்தி | |
1995 | டக்கர் (மோதல் ) [20] | இந்தி | முதல் எதிர்மறையான பாத்திரம் |
1995 | பம்பாய் [21] | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
1996 | ரக்சக் (காவலன் ) [22] | இந்தி | |
1996 | இங்கிலீஷ் பாபு தேசி மேம் [23] | இந்தி | |
1996 | தில்ஜலே[24] | இந்தி | |
1996 | அப்னே தம் ஃபர் [25] | இந்தி | சிறப்புத் தோற்றம் |
1996 | சபூத் (மகன் ) [26] | இந்தி | |
1997 | பாயி (சகோதரன்) [27] | இந்தி | |
1997 | தராசு [28] | இந்தி | |
1997 | கஹர் [29] | இந்தி | |
1998 | கீமத் [30] | இந்தி | |
1998 | டூப்ளிகட் [31] | இந்தி | |
1998 | ஹம் செ பட்கர் கௌன் [32] | இந்தி | |
1998 | மேஜர் சாப் [33] | இந்தி | |
1998 | அங்காரே (தீக்கதிர்கள்) [34] | இந்தி | |
1998 | ஜக்ம் [35] | இந்தி | |
1999 | லவ் யூ ஹமேஷா [36] | இந்தி | 2006 இல் வெளியிடப்பட்டது |
1999 | காதலர் தினம் [37] | தமிழ் | தில் ஹி தில் மெய்ன் என்ற இந்தித் திரைப்படமாக மறுதயாரிப்பு செய்யப்பட்டது |
1999 | கண்ணோடு காண்பதெல்லாம் [38] | தமிழ் | |
1999 | ஹம் சாத்-சாத் கைம் [39] | இந்தி | |
1999 | தகத் [40] | இந்தி | |
1999 | சர்ஃப்ரோசு [41] | இந்தி | |
2000 | தில் கி தில் மெய்ன் [42] | இந்தி | |
2000 | கமாரா தில் ஆப்கே பாசு கை [43] | இந்தி | |
2000 | டாயி அக்சர் ப்ரேம் கே [44] | இந்தி | சிறப்புத் தோற்றம் |
2000 | ஜிஸ் தேஸ் மே கங்கா ரக்தா கை [45] | இந்தி | |
2000 | பிரீத்ஸ் [46] | கன்னடம் | |
2001 | முராரி [47] | தமிழ் மற்றும் தெலுங்கு | தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. |
2001 | லவ் கே லியே குச் பி கரேங்கா [48] | இந்தி | |
2001 | லஜ்ஜா [49] | இந்தி | 'முஜே சாஜன் கெ கர் ஜானா ஹை' என்ற பாடலுக்கான சிறப்புத் தோற்றம் |
2001 | தேரா மேரா சாத் ரஹேன் [50] | இந்தி | |
2002 | இந்திரா [51] | தெலுங்கு | |
2002 | கத்கம் (வாள்) [52] | தெலுங்கு | |
2002 | மன்மதுடு [53] | தெலுங்கு | |
2003 | அநாஹத் (காயமில்லாமல்) [54] | மராத்தி | |
2003 | பல்நாட்டு பிரம்மநாயுடு [55] | தெலுங்கு | |
2003 | சோரி சோரி [56] | இந்தி | |
2003 | கல் ஹோ நா ஹோ [57] | இந்தி | சிறப்புத் தோற்றம் |
2004 | சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் [58] | தெலுங்கு | |
2004 | அக பாய் அரேச்சா! [59] | மராத்தி | சிறப்புத் தோற்றம் |
2013 | ஒன்ஸ் அபான் அ டைம் மும்பை எகய்ன் [60] | இந்தி |
Seamless Wikipedia browsing. On steroids.