பம்பாய் (Bombay) திரைப்படம் (1995)ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களினாலும் உண்மைச்சம்பவங்களினாலும் பின்னப்பட்ட கற்பனைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பம்பாய் | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | மணிரத்னம் S. Sriram |
கதை | மணிரத்னம் உமேஷ் சர்மா |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | அரவிந்த் சாமி மனிஷா கொய்ராலா தின்னு ஆனந்த் நாசர் சோனாலி பிந்த்ரே பிரகாஷ் ராஜ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 7 1995 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இந்து சமயத்தைச் சேர்ந்தவனான சேகர் (அரவிந்த் சாமி) பம்பாயிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தனது பெற்றோர்களைச் சந்திப்பதற்காக வருகின்றார். அங்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சைலா பானு (மனிஷா கொய்ராலா)வைச் சந்திக்கின்றார். அவர் மீது காதலும் கொள்கின்றார். ஆரம்ப காலங்களில் இவரைக் கண்டு கொள்ளாத சைலா பின்னர் அவரைக் காதலிக்கின்றார். இவர்கள் காதலிப்பதை சேகர் தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் பொழுது தந்தை கடுங்கோபம் கொள்கின்றார். அவ்வாறு இஸ்லாமியப் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாதெனவும் அவர் தெரிவிக்கின்றார். இதனைப் பொருட்படுத்தாத சேகர் தனது காதலியான சைலா பானுவை அழைத்துக் கொண்டு பம்பாய் செல்கின்றார். அங்கு அவரைத் திருமணமும் செய்து கொள்கின்றார். பின்னர் இரு மகன்களைப் பெற்றவர்களைக் காண்பதற்காக இருவரின் குடும்பத்தாரும் அங்கு வந்து சேர்கின்றனர். இரு குடும்பத்தாரும் நல்லுறவைப் பேணவும் செய்கின்றனர். அச்சமயம் அங்கு ஏற்படும் இந்து, இஸ்லாமியக் கலவரத்தின் போது சேகரின் குழந்தைகள் காணாமல் போய்விடுகின்றனர். அங்கு வந்த இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வீட்டில் ஏற்படும் தீயினால் இறந்து விடுகின்றனர். பின்னர் இக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமது இரு குழந்தைகளையும் தேடிச் செல்லும் சேகரும் பானுவும் குழந்தைகளைக் காண்கின்றனர். பின்னர் அங்கு சமாதானம் நிலவியதா என்பதே கதையின் முடிவு.
விருதுகள்
1996 அரசியல் திரைப்படக் குழுமம் (அமெரிக்கா)
- வென்ற விருது - சிறப்பு விருது- பம்பாய் - மணிரத்னம்
1996 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - சிறந்த தொகுப்பாளர்- சுரேஷ் எர்ஸ்
- வென்ற விருது - நார்கிஸ் டத் விருது- சிறந்த திரைப்படம் - பம்பாய் - மணிரத்னம்
1995 பில்ம்பேர் விருது (இந்தியா)
- வென்ற விருது - விமர்சகர்கள் விருது - பம்பாய் - மணிரத்னம்
- வென்ற விருது - சிறந்த நடிப்பிற்காக - மனிஷா கொய்ராலா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து இயற்றியிருந்தார்.
- அந்த அரபிக் கடலோரம் - ஏ. ஆர். ரகுமான்
- பூவுக்கு என்ன- நோல், அனுபமா
- உயிரே உயிரே- ஹரிஹரன், கே. எஸ். சித்ரா
- குச்சி குச்சி - ஹரிஹரன், சுவர்ணலதா
- கண்ணாளனே - கே. எஸ். சித்ரா
- பம்பாய் ஆரம்ப இசை- ஏ. ஆர். ரகுமான்
துணுக்குகள்
- இத்திரைப்படம் வெளியிடப்பட்டபொழுது சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது.
- பம்பாய் ஆரம்ப இசையானது ஆங்கிலத்திரைப்படமான லோஎட் ஒஃவ் வார் என்ற திரைப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.