From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ விஜயம் (Srivijaya) (ஆங்கிலம்: Srivijaya; மலாய்: Srivijaya; ப.ஒ.அ. மலாய்: srividʒaja; இந்தோனேசியம்: Sriwijaya; ப.ஒ.அ. இந்தோனேசியம்: sriwidʒaja) என்பது இந்தோனேசியா, சுமத்திரா தீவை மையமாகக் கொண்ட பழைய பேரரசாகும்.[1]
7-ஆம் நூற்றாண்டு–13-ஆம் நூற்றாண்டு | |
தலைநகரம் |
|
பேசப்படும் மொழிகள் | பழைய மலாய், சமசுகிருதம் |
சமயம் | இந்து, பௌத்தம் |
அரசாங்கம் | முடியாட்சி |
மன்னர் | |
• கி.பி. 683 | ஜெயநேசன் |
• கி.பி. 775 | தர்மசேது |
• கி.பி. 792 | சமரதுங்கன் |
• கி.பி. 835 | பாலபுத்திரன் |
• கி.பி. 988 | ஸ்ரீ குலமணி வர்மதேவன் |
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் |
• ஸ்ரீ ஜெயனாசா பயணம் | 7-ஆம் நூற்றாண்டு |
• முடிவு | 13-ஆம் நூற்றாண்டு |
நாணயம் | தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் |
தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இந்தப் பேரரசு பரவி இருந்தது. இந்த அரசு இருந்ததற்கான சான்றுகள் 7-ஆம் நூற்றாண்டில் இருந்து கிடைத்து உள்ளன..
சீன பௌத்த துறவியான யி சிங் (Yijing) என்பவர் தான் ஸ்ரீ விஜயத்தி்ல் கி.பி 671-ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் தங்கி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். சுமத்திராவி்ல் பலெம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கெடுக்கான் கல்வெட்டில் (Kedukan Bukit inscription) ஸ்ரீ விஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683-ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும்.[3]
13-ஆம் நூற்றாண்டில் இந்தப் பேரரசு அழிவுற்றது. அக்காலத்தி்ல் ஜாவா தீவை மையமாகக் கொண்ட மஜபாகித் அரசின் விரிவாக்கமும் ஒரு காரணமாகும். 8 - 12-ஆம் நூற்றாண்டுகளி்ல் ஸ்ரீ விஜயப் பேரரசு பௌத்த மதம் பரவுவதற்கு முதன்மை மையமாக விளங்கி உள்ளது.
ஸ்ரீ விஜயம் பேரரசின் அழிவிற்குப் பிறகு அந்தப் பேரரசு முற்றிலும் மறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் இந்தப் பேரரசு இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. 1918-ஆம் ஆண்டில் பிரெஞ்சு தூரக் கிழக்குப் பள்ளியின் பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் கோடெஸ் (George Cœdès) என்பவர் இப்படி ஒரு பேரரசு இருந்து இருக்கும் என சொன்னார்.
அதன் பின்னர் இந்தப் பேரரசு இருந்து இருக்கும் என அதிகாரப் பூர்வமாக சந்தேகிக்கப் பட்டது. 1993-ஆம் ஆண்டில் சுமத்திரா தீவின் மூசி ஆற்றங்கரையில் (Musi River) பலெம்பாங் என்ற இடத்தில் இந்தப் பேரரசின் தலைநகரம் இருந்து இருக்கும் என நிரூபிக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.