From Wikipedia, the free encyclopedia
மலாக்கா சுல்தானகம் (மலாய் மொழி: Kesultanan Melaka; ஆங்கிலம்: Sultanate of Malacca; ஜாவி: کسلطانن ملاک); என்பது பரமேசுவரா எனும் சிங்கப்பூர் அரசரால் 1400-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட ஒரு சுல்தானகம் ஆகும். பரமேசுவரா என்பவர் இசுகந்தர் ஷா என்றும் அழைக்கப் படுகிறார்.[1]
Malacca Sultanate كسلطانن ملايو ملاك | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1402–1511 | |||||||||||||
தலைநகரம் | மலாக்கா | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் | ||||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | Monarchy (மரபுவழி அரசாட்சி) | ||||||||||||
சுல்தான் | |||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1402 | ||||||||||||
1511 | |||||||||||||
நாணயம் | தங்க, வெள்ளிக் காசுகள் | ||||||||||||
|
15-ஆம் நூற்றாண்டில், மலாக்கா சுல்தானகத்தின் அதிகார உச்சத்தில், தீபகற்ப மலேசியாவின் பெரும்பகுதிகளும்; ரியாவ் தீவுகளும் உள்ளடக்கியதாக இருந்தது. அதன் காலத்தில் மிக முக்கியமான கடல்சார் துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்கியது.[2]
பரபரப்பான பன்னாட்டு வர்த்தக துறைமுகமாகவும்; இஸ்லாமிய கற்றல் மற்றும் பரப்புதலுக்கான மையமாகவும் உருவெடுத்தது. மேலும் மலாய் மொழி, இலக்கியம் மற்றும் கலைகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது.[3]
1511-ஆம் ஆண்டில், மலாக்காவின் தலைநகரம் போர்த்துகீசியப் பேரரசிடம் வீழ்ந்தது. மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் மகமுட் ஷா (1488 - 1511) மலாக்காவை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் அவரின் சந்ததியினர் ஜொகூர் சுல்தானகம் மற்றும் பேராக் சுல்தானகம் ஆகிய இரு புதிய சுல்தானகங்களை நிறுவினார்கள்.[4]
தாய்லாந்திற்கு கீழும் சுமாத்திராவிற்கு மேலேயும் உள்ள இடைப்பட்ட நிலத்தில் மலாக்கா சுல்தானகம் பரவியிருந்தது. இதன் தலைநகரத்தில் போர்த்துகீசியர் 1511-ஆம் ஆண்டில் படையெடுத்தனர். இதன் பின்னர் சுல்தான் மகமுட் ஷாவின் இரண்டாவது மகனார், அலாவுதீன் ரியாட் ஷா II என்பவரால் ஜொகூர் சுல்தானகம் நிறுவப்பட்டது.
மலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேசுவரா | |
மெகாட் இசுகந்தர் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
பரமேசுவரா தேவ ஷா | |
சுல்தான் முசபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா | |
சுல்தான் அகமட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.