மலாக்கா சுல்தானகத்தின் ஒன்பதாவது அரசர் From Wikipedia, the free encyclopedia
சுல்தான் அகமட் சா (மலாய் மொழி: Sultan Ahmad Shah ibni Almarhum Sultan Mahmud Shah; ஆங்கிலம்: Sultan Ahmad Shah of Malacca); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் ஒன்பதாவது அரசர். இவர் சுல்தான் மகமுட் சாவின் மகன் ஆவார். 1511 முதல் 1513 வரை மலாக்காவை ஆட்சி செய்தவர்.[1]:246
சுல்தான் அகமட் சா Ahmad Shah | |
---|---|
மலாக்காவின் 9-ஆவது சுல்தான் | |
ஆட்சி | மலாக்கா சுல்தானகம்: 1511 – 1513 |
முன்னிருந்தவர் | சுல்தான் மகமுட் சா |
பின்வந்தவர் | சொகூர் சுல்தானகம் |
மரபு | மலாக்கா சுல்தானகம் |
தந்தை | சுல்தான் மகமுட் சா |
இறப்பு | 1513 |
சமயம் | இசுலாம் |
அதே காலக்கட்டத்தில் மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். இருப்பினும் நாடு கடந்து வாழ்ந்த சுல்தான் அகமட் சா, மலாக்காவின் சுல்தான் எனும் பெயரில் மலாக்காவை ஆட்சி செய்தார்.
சுல்தான் மகமுட் ஷாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.
இவர்களில் சுல்தான் அகமட் ஷா என்பவர் மலாக்காவின் சுல்தான் பதவியை ஏற்றுக் கொண்டார். முசபர் ஷா I என்பவர், பின்னர் காலத்தில் பேராக் சுல்தானகத்தை உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் ஷா II என்பவர் ஜொகூர் சுல்தானகத்தை உருவாக்கினார்.
மலாக்காவின் சமூகத் தலைவர்களில் ஒருவரான ராஜா முதலியாரின் பேச்சைக் கேட்டு பெண்டகாரா துன் முத்தாகிரையும், அவரின் குடும்பத்தைரையும் கொன்றது தவறு என சுல்தான் மகமுட் ஷா பின்னர் உணர்ந்தார்.
அதனால் சுல்தான் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் அகமட் ஷா பதவிக்கு வந்தார். சுல்தான் அகமட் ஷா என்று அழைக்கப்பட்டார்.
இருப்பினும் போர்த்துகீசியர்களிடம் சண்டை போட்டு, மலாக்காவை மீட்க முடியாத காரணத்தினால், 1513-ஆம் ஆண்டில், அவரின் தந்தையார் சுல்தான் மகமுட் ஷாவினால், சுல்தான் அகமட் ஷா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
பின்னர் சுல்தான் மகமுட் ஷாவே தன்னை மலாக்காவின் சுல்தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அந்த வகையில் சுல்தான் மகமுட் ஷா, மலாக்காவின் 10-ஆவது சுல்தானாகவும் பொறுப்பில் இருந்து உள்ளார்.
இதற்கிடையில், 1509 - 1510-ஆம் ஆண்டுகளில் போர்த்துகீசியக் கடல் தளபதி லோபெஸ் டி செக்குயிரா மலாக்காவிற்கு வருகை தந்த போது, அவரைக் கொலை செய்ய சுல்தான் மகமுட் ஷா திட்டமிட்டார்.
இருப்பினும், செக்குயிரா அந்தக் கொலைச் சதியை அறிந்து கொண்டு, மலாக்காவை விட்டு தப்பித்துப் போனார். இதைக் கேள்விப்பட்ட அபோன்சோ டி அல்புகெர்க் (Afonso de Albuquerque) எனும் மற்றொரு போர்த்துகீசியக் கடல் தளபதி கோவாவில் இருந்து 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களுடன் மலாக்காவிற்கு வந்தார்.[2][3]
போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு, சுல்தான் மகமுட் ஷாவின் படைகளின் மீது தாக்குதல்கள் நடத்தினர். மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் 40 நாட்கள் நடந்தது. 1511 ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது. மலாக்கா வீழ்ச்சி அடைந்தது.[4]
சுல்தான் மகமுட் ஷா, தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் இருக்கும் பகாங்கிற்கு தப்பிச் சென்றார். அங்கு இருந்து பின்னர் சிங்கப்பூரின் தென்கிழக்கே இருந்த பிந்தான் தீவிற்குச் சென்றார். அங்கு ஒரு மலாய் முஸ்லிம் கூட்டமைப்பிற்குத் தலைவரானார்.
அங்கு இருந்தவாறு, போர்த்துகீசியர்களை எதிர்த்து, சுல்தான் மகமுட் ஷா, 1515 முதல் 1519 வரை பல தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியுற்றன.
பிந்தான் தீவில் இருந்த சுல்தான் முகமது ஷாவை அடக்குவதற்கு போர்த்துகீசியர்கள் தீவிரமாகக் களம் இறங்கினார்கள். சுல்தான் முகமது ஷாவின் அச்சுறுத்தல்களை அடியோடு களைந்து விட, பிந்தான் தீவையே அழித்துவிட முடிவு செய்தார்கள். ஒரு பெரும் படை பிந்தான் தீவிற்கு அனுப்பப்பட்டது.
அந்தப் படைக்கு பெட்ரோ மாஸ்காரன்காஸ் (Pedro Mascarenhas) என்பவர் தலைமை தாங்கினார். 1526-ஆம் ஆண்டு பிந்தான் தீவைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
சுல்தான் முகமது ஷாவும் அவருடைய குடும்பத்தினரும் பிந்தான் தீவில் இருந்து சுமத்திரா, ரியாவ் (Riau) தீவுக் கூட்டத்தில் இருக்கும் கம்பார் எனும் இடத்திற்குத் தப்பிச் சென்றனர். அங்கேயே சுல்தான் முகமது ஷா தன்னுடைய கடைசி நாட்களையும் கழித்தார்.
1528-ஆம் ஆண்டு சுல்தான் முகமது ஷா காலமானார். அத்துடன் மலாக்கா சுல்தான்களின் வரலாறும் ஒரு முடிவிற்கு வந்தது.
மலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேசுவரா | |
மெகாட் இசுகந்தர் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
பரமேசுவரா தேவ ஷா | |
சுல்தான் முசபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா | |
சுல்தான் அகமட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.