From Wikipedia, the free encyclopedia
சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த துணை நடிகைக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ் | |
---|---|
![]() 2018 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை சரண்யா பொன்வண்ணன் என்பவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார். | |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | சினேகா (2002) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | சரண்யா பொன்வண்ணன் (2018) |
இணையதளம் | Filmfare Awards |
இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பிடப்படும் ஆண்டானது அந்தத் திரைப்படம் வெளியான ஆண்டினைக் குறிப்பதாகும்.
ஆண்டு | நடிகை | திரைப்படம் | சான்றுகள் |
---|---|---|---|
2018 | சரண்யா பொன்வண்ணன் | கோலமாவு கோகிலா | |
2017 | நித்யா மேனன் | மெர்சல் | |
2016 | தன்சிகா | கபாலி | |
2015 | ராதிகா சரத்குமார் | தங்க மகன் | |
2014 | ரித்விகா | மெட்ராஸ் | [1] |
2013 | தன்சிகா | பரதேசி | [2] |
2012 | சரண்யா பொன்வண்ணன் | நீர்ப்பறவை | |
2011 | அனன்யா | எங்கேயும் எப்போதும் | |
2010 | சரண்யா பொன்வண்ணன் | தென்மேற்கு பருவக்காற்று | |
2009 | சம்மு | காஞ்சிவரம் | [3] |
2008 | சிம்ரன் | வாரணம் ஆயிரம் | [4] |
2007 | சுஜாதா | பருத்திவீரன் | [5] |
2006 | சரண்யா பொன்வண்ணன் | எம் மகன் | [6] |
2005 | சரண்யா பொன்வண்ணன் | தவமாய் தவமிருந்து | [7] |
2004 | மல்லிகா | ஆட்டோகிராப் | [8] |
2003 | சங்கீதா | பிதாமகன் | [9] |
2002 | சினேகா | உன்னை நினைத்து | [10] |
Seamless Wikipedia browsing. On steroids.