சீனு இராமசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
தென்மேற்குப் பருவக்காற்று 2010ஆம் ஆண்டு சிபு ஐசக் தயாரிப்பில், சீனு இராமசாமி எழுதி இயக்கி வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் முன்னணி வேடங்களில் விசய் சேதுபதி, வசுந்தரா சியேர்ட்ரா மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளனர். திசம்பர் 24, 2010 அன்று வெளியான இத்திரைப்படத்திற்குச் சிறந்த நடிப்பிற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும் சிறந்த பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
தென்மேற்குப் பருவக்காற்று | |
---|---|
![]() | |
இயக்கம் | சீனு ராமசாமி |
தயாரிப்பு | கேப்டன் சிபு ஐசக் |
கதை | சீனு ராமசாமி |
இசை | என். ஆர். ராகநந்தன் |
நடிப்பு | விசய் சேதுபதி வசுந்தரா சியேர்ட்ரா சரண்யா பொன்வண்ணன் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
கலையகம் | ஜோதம் மீடியா வொர்க்ஸ் |
விநியோகம் | வசுந்தரா சியேர்ட்ரா |
வெளியீடு | திசம்பர் 24, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் இறுதியில் 58 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இடம்பிடித்து அங்கு இது தமிழின் சிறந்த திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டது. சரண்யா பொன்வண்ணன் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து முறையே சிறந்த நடிகை மற்றும் சிறந்த பாடலாசிரியர் விருதுகளைப் பெற்றனர்.[1]
இந்தத் திரைப்படம் வீராயி (சரண்யா) என்ற கைம்பெண்ணின் கதையை சொல்கிறது. தனது மகன் முருகனை (விசய் சேதுபதி) தன்னந்தனியே ஆடு மேய்ப்பவனாக வளர்த்து பெரியவனாக்குகிறாள். கதை மாந்தரை சிறப்பாக காட்டுவதில் திரைக்கதை வெற்றி கண்டுள்ளது. அன்னையின் மதிப்பினை அனைவரும் உணரும் வண்ணம் திரைப்படம் அமைந்துள்ளது. .
இத்திரைப்படத்திற்கான பின்னணி இசையை என்.ஆர் என். ஆர். ரகுநந்தன் அமைத்துள்ளார். பாடல்வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இந்தத் திரைப்படப் பாடலுக்காக 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.[2]
பாடல் வரி | பாடகர்(கள்) |
---|---|
"ஆத்தா அடிக்கையிலே" | ஹரிணி |
"சின்ன சின்னங்காட்டுலே" | சங்கர் மகாதேவன் |
"கள்ளி கள்ளிச்செட்டி" | சுவேதா மோகன் |
"கள்ளிக் காட்டில்" | விசய் பிரகாசு |
"கள்ளிக் காட்டில் 2" | உண்ணிமேனன் |
"நன்மைக்கும்" | விசய் பிரகாசு |
"யேடி கள்ளச்சி" | விசய் பிரகாசு, சிரேயா கோசால் |
Seamless Wikipedia browsing. On steroids.