காக்கேசியாவில் இருந்த முன்னாள் சியார்சியா இராச்சியம் From Wikipedia, the free encyclopedia
சியார்சியா இராச்சியம் (Kingdom of Georgia, சியார்சிய: საქართველოს სამეფო), அல்லது சியார்சியா பேரரசு (Georgian Empire),[3][4][5][6] என்பது ஒரு நடுக்கால ஐரோவாசிய முடியாட்சி ஆகும். இது அண். கி.பி. 1008 காலத்தில் இருந்தது. இது அதன் பொற்காலத்தை 11-ஆம், 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் நான்காம் டேவிட் மற்றும் ராணி பெரிய தமர் ஆட்சியில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருந்த பொழுது அடைந்தது. கிறித்தவக் கிழக்கு ஜார்ஜியா ஒரு முக்கியமான நாடாக இருந்தது. காக்கேசியா பகுதியிலிருந்த இப்பேரரசு மிகப்பெரிய அளவில் இருந்த பொழுது கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு காக்கேசியா பகுதியிலிருந்து ஈரான் மற்றும் அனத்தோலியாவின் வடக்குப் பகுதி வரை பரவியிருந்தது. எருகலேத்தின் சிலுவை மடாலயம் மற்றும் வடக்கு கிரேக்கத்தின் இவிரோன் மடாலயம் போன்ற இடங்களைக் கொண்டிருந்ததன் மூலம் தங்கள் நாட்டுக்கு வெளியிலும் மதரீதியான இடங்களை இப்பேரரசு கொண்டிருந்தது. தற்கால சியார்சியா வரலாற்று ரீதியான முதன்மை முன்னோடி இந்த இராச்சியமே ஆகும்.
சியார்சியா இராச்சியம் Kingdom of Georgia საქართველოს სამეფო Sakartvelos Samepo | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1008–1463 1490–1493 | |||||||||||||||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அதிகாரபூர்வ மொழி சியார்சியம் பிராந்திய மொழிகள்
| ||||||||||||||||||||||||
சமயம் | பெரும்பான்மை மரபுவழிக் கிறித்தவம் (சியார்சிய மரபுவழித் திருச்சபை) | ||||||||||||||||||||||||
அரசாங்கம் | நிலமானிய முடியாட்சி | ||||||||||||||||||||||||
மன்னர், மன்னர்களின் மன்னர் | |||||||||||||||||||||||||
• 978–1014 | மூன்றாம் பக்ராத் (முதல்) | ||||||||||||||||||||||||
• 1446–1465 | எட்டாம் சியார்ச் (கடைசி) | ||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | உயர் நடுக் காலம் முதல் பிந்தைய நடுக் காலங்கள் | ||||||||||||||||||||||||
• இணைப்பு | 1008 | ||||||||||||||||||||||||
• செல்யூக் முற்றுகை | 1060–1121 | ||||||||||||||||||||||||
• பொற்காலம் | 1122–1226 | ||||||||||||||||||||||||
• மங்கோலிய ஆட்சி | 1238–1335 | ||||||||||||||||||||||||
• தைமூர் முற்றுகை | 1386–1403 | ||||||||||||||||||||||||
• உள்நாட்டுப் போர் | 1493 | ||||||||||||||||||||||||
• கலைப்பு | 1490–1493 | ||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||
1213-1245 | 380,000 km2 (150,000 sq mi) | ||||||||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||||||||
• 13-ஆம் நூற்றாண்டு | 2.4–2.5 மில்.[1] | ||||||||||||||||||||||||
நாணயம் | பல்வேறு பைசாந்திய, சசானிய நாணயங்கள் திராம் (1122 இற்குப் பின்னர்).[2] | ||||||||||||||||||||||||
|
பல நூற்றாண்டுகளுக்கு நீடித்த இந்த இராச்சியம் 13ம் நூற்றாண்டில் மங்கோலியத் தாக்குதலுக்கு உள்ளானது. எனினும் 1340களில் மீண்டெழுந்தது. பின்வந்த தசாப்தங்களில் கறுப்புச் சாவு மற்றும் தைமூர் தலைமையிலான பல்வேறு படையெடுப்புகளுக்கு உள்ளானது. தைமூர் இந்த நாட்டின் பொருளாதாரம், மக்கள்தொகை மற்றும் நகர்ப்புறங்களுக்கு பெரும் சேதம் விளைவித்தார். இந்த இராச்சியத்தின் புவி அரசியல் நிலைமை ட்ரெபிசோன்ட் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மேலும் மோசமானது. மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளால் 15ம் நூற்றாண்டின் இறுதியில் சார்சியா ஒரு உடைந்து போன பகுதியானது. 1386ல் தொடங்கிய தைமூரின் புதிய தாக்குதல்கள் மற்றும் காரா கோயுன்லு மற்றும் அக் கோயுன்லு ஆகியவர்களின் பிந்தைய படையெடுப்புகள் ஆகியவற்றால் 1466ல் இந்த இராச்சியம் சிதறுண்டது. கர்ட்லி, ககேட்டி மற்றும் இமேரேடி ஆகிய இராச்சியங்கள் சுதந்திர மாநிலங்களாக 1490 மற்றும் 1493க்கு இடையில் ஒன்றை மற்றொன்று அங்கீகரித்து கொண்டன. இதில் ஒவ்வொன்றும் பக்ரேசன் அரசமரபின் எதிர் எதிர்க் கிளைகளால் தலைமைதாங்கப்பட்டன. இவை தங்களது சொந்த நிலப்பிரபுத்துவ இனங்களால் ஆளப்பட்ட 5 பகுதியளவு சுதந்திரம் கொண்ட குறுநில நாடுகளாயின.
நெடிய உரோமானிய மற்றும் பாரசீகப் போர்களுக்கு இடையில் இது அமைந்திருந்தது. ஆரம்பகால சார்சியா இராச்சியங்கள் பல்வேறு நிலப்பிரபுத்துவப் பகுதிகளாக ஆரம்ப நடுக்காலத்தில் சிதறுண்டன. இதன் காரணமாக எஞ்சிய சார்சியப் பகுதிகள் 7ம் நூற்றாண்டின் ஆரம்ப முஸ்லிம் படையெடுப்புகளுக்கு எளிதான தாக்குதல் இரையாயின. முஸ்லிம் படையெடுப்புகளால் கொண்டுவரப்பட்ட பரந்த அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங்கள் ஐபீரியாவில் இருந்த அகதிகளை சார்சியாவின் மேற்குப் பகுதிகளான அப்காசியா அல்லது டவோ-க்லர்ஜெடிக்குக் கொண்டு வந்தன. அந்த அகதிகள் தங்களது கலாச்சாரத்தையும் இப்பகுதிக்குக் கொண்டுவந்தனர்.
அரேபிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பக்ரேசன் அரசமரபின் இளவரசர்கள் தாவோ-க்லர்ஜெடி மற்றும் ஐபீரியாவின் முன்னாள் தெற்குப் பகுதிகள் ஆகியவற்றை ஆண்டனர். ஐபீரியாவின் கோவுரோபலடேட் என்ற குறுநில அரசைத் தோற்றுவித்து பைசாந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருந்தனர். பக்ரேசன் அரசமரபினர் கர்ட்லியின் டுச்சி என்று அழைக்கப்பட்ட மத்திய சியார்சிய நிலப்பரப்புக்கு அப்காசியா இராச்சியம், திபிலிசியின் ஆமிர்கள் மற்றும் ஏன் ககேடியன் மற்றும் தஷிர்-ட்ஜோரகெட்டின் ஆர்மீனிய ஆட்சியாளர்களுடனும் போரிட்டனர். ஐபீரிய அரசை மீட்டெடுப்பது 888ல் தொடங்கியது. எனினும் பக்ரேசன் அரசமரபால் அவர்களது இராச்சியத்தை ஸ்திரத்தன்மையுடன் நடத்த முடியவில்லை. இராச்சியமானது அந்த அரசமரபின் இரண்டு கிளைகளுக்கிடையில் பிரித்து கொள்ளப்பட்டது. முக்கியமான கிளை தாவோ பகுதியையும் மற்றொரு கிளை க்லர்ஜெடிப் பகுதியையும் ஆண்டன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.