From Wikipedia, the free encyclopedia
மாபெரும் செல்யூக் பேரரசு (Great Seljuq Empire, பாரசீக மொழி: دولت سلجوقیان, அரபு மொழி: الدولة السلجوقية) இடைக்காலத்தில் விளங்கிய ஒரு துருக்கிய-பாரசீக[13] சுன்னி இசுலாமியப் பேரரசு ஆகும். ஓகுசு துருக்கியர்களின் (Oghuz Turks) கிளை இராச்சியம் ஒன்றிலிருந்து உருவானது[14]. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே இந்துகுஷ் முதல் அனத்தோலியா வரையும் மத்திய ஆசியாவிலிருந்து பாரசீக வளைகுடா வரையும் பரந்த நிலப்பரப்பு இருந்தது. தங்கள் உறைவிடமான ஏரல் கடல் பகுதியிலிருந்து முதலில் கோராசன் எனப்படும் வடக்கு ஈரான் பகுதியைப் பிடித்து பின்னர் பாரசீகத்தை ஆட்கொண்டு இறுதியில் கிழக்கு அனத்தோலியா வரை முன்னேறினார்கள்.
செல்யூக் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1037–1194 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் (அனாபி) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | கலீபகத்தின் கீழான அரசு (உரிமைப் படி)[8] சுதந்திரமான சுல்தான் (நடை முறைப் படி) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கலீபா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• 1031–1075 | அல் கைம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• 1180–1225 | அல்-நசீர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• 1037–1063 | துக்ரில் (முதல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• 1174–1194 | மூன்றாம் துக்ரில் (கடைசி)[9] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• துக்ரிலின் கீழ் நிறுவப்படுதல் | 1037 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• தந்தனகன் யுத்தம் | 1040 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• மன்சிகெர்து யுத்தம் | 1071 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• முதலாம் சிலுவைப் போர் | 1095–1099 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
• கத்வான் யுத்தம் | 1141 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1194 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1080 மதிப்பீடு.[11][12] | 3,900,000 km2 (1,500,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
செல்யூக் வம்சத்தின் செல்யூக் பெக் நிறுவ முயன்ற செல்யூக் பேரரசு அவரது மகன் துக்ருல் பெக் காலத்தில் 1037ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.செல்யூக்கினர் பிளவுபட்டிருந்த கிழக்கு இசுலாமிய உலகை ஒற்றுமைப்படுத்தி முதலாம் மற்றும் இரண்டாம் சிலுவைப் போர்களில் முக்கியப் பங்காற்றினர். மிகவும் பாரசீக தாக்கம் கொண்ட[13] பண்பாட்டையும் பாவித்த செல்யூக்கர்கள் துருக்கிய-பாரசீக மரபை வளர்த்தெடுத்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.