கிழக்கத்திய கிறித்தவம்
From Wikipedia, the free encyclopedia
கிழக்கத்திய கிறித்தவம் என்பது பால்கன் குடா, கிழக்கு ஐரோப்பா, அனத்தோலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடிகளில் பல நூற்றாண்டுகளாக உருவாக்கி வளர்ந்துவரும் கிறித்தவ மரபையும் அதனைச்சேர்ந்த திருச்சபைகளையும் குறிக்கும்.
மேற்கு ஐரோப்பாவின் மேற்கத்திய கிறித்தவ மரபுகளை சேராத சபைகளை குறிக்க இதனைப்பயன்படுத்துகின்றனர். இது ஒரு தனி கிறித்தவ உட்பிரிவு அல்ல. உண்மையில், சில "கிழக்கு" திருச்சபைகள் ஒன்றை ஒன்று ஒத்திருப்பதை விட "மேற்கத்திய" கிறிஸ்துவத்தினை மரபுகளிலும் வரலாற்றிலும் இறையியலிலும் அதிகம் ஒத்து போகின்றன. இவ்வகை கிழக்கத்திய கிறித்தவ மரபுகளில் கிழக்கு மரபுவழி திருச்சபையே பெரியது ஆகும். கிழக்கத்திய கிறித்தவ திருச்சபைகளுல் சில கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு முறைபிரிவுகள் என்பதும் இவை திருத்தந்தையின் ஆட்சிக்கு உபட்டவை என்பதும் குறிக்கத்தக்கது.
இன்று, மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்துவத்துகிடையேயான புவியியல் எல்லைகள், குறிப்பாக மறைபணியாளர்களின் பரவலுக்குப்பின், கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.