Remove ads
நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் From Wikipedia, the free encyclopedia
சந்திரயான்-2 (Chandrayaan-2)[13][14] என்பது சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும்.[15] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,[16][17] ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.[8][9][18] இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையூர்தி(நடமாடும் ஆய்வகம்) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டமைக்கப்பட்டன.[19] இதன் முதன்மையான அறிவியல் குறிக்கோள் நிலா மேற்பரப்பு உட்கூற்று வேறுபாடுகளை ஆய்வு செய்து படம் வரைதலும் நிலாத் தண்ணீர் செறிவாக அமையும் இடங்களைக் கண்டறிதலும் ஆகும்.
Chandrayaan-2 composite | |||||
திட்ட வகை |
| ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | ||||
காஸ்பார் குறியீடு | 2019-042A | ||||
சாட்காட் இல. | 44441 | ||||
இணையதளம் | Chandrayaan2 | ||||
திட்டக் காலம் | |||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
தயாரிப்பு | இசுரோ | ||||
ஏவல் திணிவு | இணைந்த தொகுதி (ஈரம்): 3,850 கிகி [2][3] இணைந்த தொகுதி (உலர்): 1,308 கிகி [4] சுற்றுக்கலம் (ஈரம்): 2,379 கிகி [2][3] சுற்றுக்கலம் (உலர்): 682 கிகி [4] விக்ரம் தரையிறங்கி (ஈரம்): 1,471 கிகி [2][3] விக்ரம் தரையிறங்கி (உலர்): 626 கிகி[4] பிரகியான் தரையூர்தி: 27 கிகி [2][3] | ||||
திறன் | சுற்றுக்கலம்: 1000 வாட்டு [5] விக்ரம் தரையிறங்கி: 650 வாட் [6] பிரகியான் தரையூர்தி: 50 வாட் | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 22 சூலை 2019, 09:13:12 ஒசநே[7] | ||||
ஏவுகலன் | ஜி. எஸ். எல். வி மார்க் III M1 [8][9] | ||||
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் | ||||
ஒப்பந்தக்காரர் | இசுரோ | ||||
நிலா சுற்றுக்கலன் | |||||
சுற்றுப்பாதையில் இணைதல் | 20 ஆகத்து 2019, 03:32 ஒசநே[10][11] | ||||
நிலா தரையிறங்கி | |||||
விண்கலப் பகுதி | தரையூர்தி | ||||
தரையிறங்கிய நாள் | 6 செப்டம்பர் 2019, 20:23 ஒசநே [11][12] | ||||
தரையிறங்கிய பகுதி | நிலாவின் தென்முனை (திட்டம்) | ||||
----
|
தரையூர்தி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளவும், தான் திரட்டிய தரவுகளைச் சுற்றுக்கலன், தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.[6][20][21] 2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
என்றாலும், 2019, செப்டம்பர் 6 இல் தரையிறங்க முயலும்போது, தன் திட்டமிட்ட தடவழியில் இருந்து விலகியதால் அது நிலாத்தரையில் மொத்தியநிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, தரையிறங்கியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்ய இயலவில்லை.இசுரோ பெற்ற பழுது பகுப்பாய்வு அறிக்கையின்படி, மொத்தல் சிறு மென்பொருள் வழுவியதால் நேர்ந்ததாகக் கூறப்பட்டது. இதனால், இசுரோ 2023 இல் சந்திரயான்-3 வழியாக நிலாத்தரையில் மென்மையான தரையிறக்கத்துக்கு மறுமுயர்சி செய்ய முடிவெடுத்தது.
சந்திரயான் -1 இன் தொடர்திட்டமான சந்திரயான் -2 திட்டதில் ஒருங்கிணைந்து செயல்ப்பட, 2007 நவம்பர் 12 இல் இராசுகாசுமோசு பேராளர்களும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனப் பேராளர்களும் இருமுகமைகளுக்கும் இடையில் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்[22][23] இசுரோ வட்டணைக்கல்ம், தரையூர்தி இரண்டுக்கும் முதன்மைப் பொறுப்பையும், இராசுகாசுமோசு தரையிறங்கியை தருவதாகவும் ஒப்புக்கொல்லப்பட்டது. இந்திய அரசு, 2008, செப்டம்பர் 18 இல் இந்திய முதன்மை அமைச்சர் மன்மோகன் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சர் மன்றத்தில் இத்திட்டத்துக்கான ஒப்புதலை அளித்தது.[24] விண்கலத்தின் வடிவமைப்பு, 2009 ஆகத்தில் இருநாடுகளின் அறிவியலாளர்களின் மீள்பார்வைக் கூட்டத்தில் முடிக்கப்பட்டது.[25]
இசுரோ திட்டமிட்டபடி, சந்திரயான் -2 இன் அறிவியல் கருவிகளை இறுதிப்படுத்தி இருந்த போதும்,[26] உருசியா தரையிறங்கியைக் காலத்தே உருவாக்காததால், 2013 ஜனவரியில் திட்டம் தள்ளிவைத்து 2016 ஆம் ஆண்டுக்கு மீள்திட்டமிடப்பட்டது.[27][28][29] செவ்வாய்க்கான போபோசு கிரன்ட்டுத் திட்டம் பழுதுற்றதால் 2012 இல் மறுபடியும் சந்திரயான் -2 விண்கலத்திட்டத்துக்கான தரையிறங்கி கட்டுமானம் காலத் தாழ்த்தமானது. ஏனெனில், போபோசு கிரன்ட்டுத் தொழில்நுட்பச் சிக்கல்கள் சந்திரயான்-2 வின் தரையிறங்கியிலும் பயன்படுத்தியுள்லதால் அவற்ற மீள்பார்வையிட வேண்டியதாயிற்று.[28] உருசியா 2015 இலும் தரையிறங்கியைத் தர இயலாமையைத் தெரிவித்ததும், நிலாத் திட்டத்தைத் தனியாகவே உருவாக்கி நிறைவேற்றத் திட்டமிட்டது.[27][30] சந்திரயான்-2 திட்டத்துக்குப் புதிய காலநிரல் வகுக்கப்பட்டதாலும், 2013 இல் செவ்வாய்த் திட்ட ஏவுதலுக்கான வாய்ப்புச் சாளரம் ஏற்பட்டதாலும் பயன்படுத்தாத சந்திரயான்-2 விண்கல வன்பொருட்கள் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.[31]
முதலில் 2018 மார்ச்சில் விண்கல்ம் ஏவத் திட்டமிடப்பட்டது. மேலும், ஏவூர்தியில் சில ஓர்வுகள் செய்ய, 2018 ஏப்பிரலில் இருந்து அக்தோபர் வரை காலந்தாழ்த்தப்பட்டது.[32][33] 2019, சூன் 19 இல் நடந்த நான்காம் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மீள்பார்வைக் கூட்டத்தில்லுருவமைப்பிலும் தரையிறங்கும் வரிசையிலும் நடைமுரைப்படுத்தலில் பல மாற்றங்கள் திட்டமிடப்பட்டதால் ஏவுதல் 2019 முதல் அரையாண்டுக்கு தள்ளிப் போக நேர்ந்தது.[34] 2019 பிப்ரவரியில் ந்டந்த ஆய்வுகளில் தரையிறங்கியின் கால்கலில் இரண்டு சிறுசிதைவுக்கு உள்ளானது.[35]
சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு சிறி அரிகோட்டாவில் உள்ளசத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலம் ஏவப்பட 56 மணித்துளிகள் இருந்த போது, சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்திராயனை ஏவும் ஏவுதளக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.[36][37]
சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரியமின் பலகம் பழுதடைந்ததால் வரையறுத்த 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டிருந்தது. எனினும் 95% பணிகளை அது முடித்துவிட்டதாக `இசுரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கைக்கோள உருவாக்கும் பணிகள் முடிவடைந்தன.
இத்திட்டப் பணிகளின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.
சந்திரயான் எனும் சமக்கிருதச்(இந்திச்) சொல்லின் பொருள் "நிலாக்கலம்" என்பதாகும்.[38][39] சந்திரயான்-2 விண்கலம்(3850கிகி) புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III (ஜி எசு எல் வி எம்கே III)ஏம்1 ஏவூர்தியால் ஆந்திரப் பிரதேசம், சிறி அரிகோட்டா, சத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.[9][40][41][42] 2019 சூனில் இத்திட்ட செலவு ஒதுக்கீடு₹ 9.78 பில்லியன்(978 கோடி) (தோராயமாக 141 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்; இதில் ₹ 6 பில்லியன் விண்வெளி வன்கலனுக்கும் ₹ 3.75 பில்லியன் ஏவூர்தியின் ஏவுதல் செலவுக்கும் ஒதுக்கப்பட்டது.[43][44] சந்திரயான்-2 முதலில் புவிசுற்றிவரும் வட்டணையில் 170 கிமீ புவியண்மை புள்ளியிலும் 40400 கிமீ புவிச்சேய்மைப் புள்ளியிலும் நிலைநிறுத்தப்பட்டது.[45]
சந்திரயான்-2 சுற்றுகலன் 100 கிமீ உயரத்தில் நிலா முனைய வட்டணையில் சுற்றிக் கொண்டிருக்கும்.[46] இதில் 8 அறிவியல் கருவிகள உண்டு; அவற்றில் இரண்டு சந்திரயான்-1 இல் இவற்றில் இரண்டு மேம்படுத்திய வகையின. தோராயமான ஏவுதலுக்கான பொருண்மை(நிறை) 2379 கிகி.[2][3][26][47] சுற்றுகலன் உயர்பிரிதிறன் ஒளிப்படக் கருவி (OHRC) தரையிறங்கும் இடத்தின் உயர்பிரிதிற நோக்கீடுகளை, சுற்றுகலனில் இருந்து தரையிறங்கி பிரிவதற்கு முன், எடுத்தது.[1][46] சுற்றுகல்ன் கட்டமைப்பு இந்துத்தான் வானூர்துக் குழுமத்தால(HAL) செய்து 2015 சூனில் வழங்கப்பட்டது.[48][49]
திட்டத்தின் தரையிறங்கி விக்ரம் எனப்படுகிறது. (சமக்கிருதம்: विक्रम [53]) ⓘ இது இந்திய விண்வெளித் திட்டத்தை உருவாக்கிய அண்டக்கதிர் அறிவியலாளர் விக்ரம் சாராபாய்(1919–1971) நினைவாகப் பெயரிடப்பட்டது.[54] வட்டணைக்கலத்தில் இருந்து பிரியும் விக்ரம் தரையிறங்கி, தன் 800 நி முதன்மைப் பொறிகளைப் பயன்படுத்தி, நிலாவின் 30 x100 கிலோமீட்டர் தாழ்வட்டணைக்கு இறங்கும். கல அமைப்புகள் அனைத்தையும் சரிபார்த்த பின்னர், இது மென்தரையிறக்கத்துக்கு முயன்று, தரையூர்தியை இறக்கவிட்டு தரையூர்தி நிலாவினொரு பகல் நேரத்துக்கு(புவியின் 14 நாட்களுக்கு) அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். இந்த முயற்சியில் விக்ரம் மொத்தி இறங்க நேர்ந்தது.[50][55] தரையிறங்கி, தரையூர்தி இரண்டன் கூட்டுப்பொருண்மை(நிறை) தோராயமாக 1,471 kg (3,243 lb) ஆகும்.[2][3]
தரையிறங்கியின் தொடக்கநிலை உருவடிவ ஆய்வு 2013 இலேயே அகமதாபாது விண்வெளி பயன்பாடுகள் மையத்தால்(SAC) முடிக்கப்பட்டது.[27] தரையிறங்கியின் செலுத்த அமைப்பில் எட்டு 58 நி உந்துபொறிகள் விண்கல இயக்கப்பாங்கைக் கட்டுபடுத்த உள்ளன.[56] மேலும், ஐந்து 800 நி முதன்மை நீர்மப் பொறிகளும் 440 நி நீர்மப் புவிச்சேய்மைப் பொறி ஒன்றும் இசுரோவின் விண்வெளிச் செயற்கைக்கொள் மய்யத்தில் இருந்து கொணர்ந்து இணைக்கப்பட்டன]].[57][58] தொடக்கத்தில் தரையிறங்கி வடிவமைப்பு நான்கு வேக ஒடுக்கப் பொறிகளைப் பயன்படுத்தியது; ஆனால், ஓர் உந்து பொறியொன்று நடுமையத்தில் [59] தரையிறங்குமுன், நிலாவைச் சுற்றிவர வேண்டிய புதிய தேவைகளுக்காக, கூடுதலாகப் பொருத்தப்பட்டது. இந்தக் கூடுதல் பொறி தரையிறங்கும்போது எழும் நிலாத் தூசின் மேல்நோக்கிய இழுப்பை மென்தரையிறக்கத்தில் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.[42] தரையிறங்கியின் நான்கு ஒடுக்க வேகப் பொறிகள் 40% முதல் 90% வரை, 20% படிநிலையில் ஒடுக்கும் தகுதி உள்ளவை.[60]விக்ரம் 12° சாய்வு வரை பாதுகாப்பாக இறங்க வடிவமைக்கப்பட்டது.[61][62]
கல இயக்கத்தில் பின்வரும் தொழில்நுட்பங்கள் இணைந்துள்ளன:
2016 அக்தோபரிலேயே தரையிறங்கியின் பொறியியல் படிமங்கள் தரை, வான் ஆய்வுகளுக்கு கருநாடக மாநிலச் சித்திரதுர்கா மாவட்டத்தின் சல்லகெரெவில் செய்யப்பட்டன. இதற்காக ஆய்விடத்தில் இசுரோ 10 நிலாவில் இருப்பவை போன்ற குழிப்பள்ளங்கள் தரையின் மேற்பரப்பில் உருவாக்கப்பட்டு தரையிறங்கியின் உணரிகளின் இடத் தேர்வு நுட்பம் சரிபார்க்கப்பட்டது.[68][69]
திட்டத் தரையூர்தி Pragyan எனப்படுகிறது (சமக்கிருதம்: प्रज्ञान.[70][71]) ⓘ)[70][72] 27 கிகி எடையுள்ள இது விண்கலச் சூரியப் பலகச் சூரியமின் திறனால் இயக்கப்படும்.[2][3] தரையிறங்கி ஆறு சக்கரங்களின்மீது நொடிக்கு 1 செமீ வித்தில் ந்கர்ந்து 500 மீ வரைஅ செல்லும். அப்போது இது களத்தில் உரிய பகுப்பாய்வுகளைச் செய்து, தரவுகளை தரையிறங்கிக்கு அனுப்பும். அவற்றைத் தரையிறங்கி புவித் திட்டக் கட்டுபாட்டு நிலையத்துக்கு அஞ்சல் செய்யும்.[26][43][47][73][74]
தரையூர்தி நகர்ந்துசெல்ல, பின்வருபவன பயன்படும்:
தரையிறங்கியின் பின்னிரு சக்கரங்களில் இசுரோ சின்னமும்( கொடி-சந்திரயான்-2) இந்திய அரசு சின்னமும்( அசோகச் சக்கரம்) பொறிக்கப்பட்டுள்ளன. ஊர்தி உருண்டு நகரும்போது இவை நிலாவின் மேற்பரப்பில் தரையில் பதிந்து விடும்.[80][81]
இசுரோ அறிவியல் கருவிகளைச் சுற்றுகலனுக்கு எட்டும் தரையிறங்கிக்கு நான்கும்[40][82][83] தரையூர்திக்கு இரண்டும் எனத் தேர்வு செய்தது.[26] தொடக்கத்தில் நாசா வும் ஈசாவும் சுற்றுகலனுக்கு அறிவியல் கருவிகளைத் தந்து திட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தன;[84] என்றாலும் இசுரோ 2010 இல் எடை காரணமாக திட்டத்தில் அயல்நாட்டுக் கருவிகளை எடுத்துசெல்ல இயலாமயை தெளிவாக விளக்கியது.[85] எனினும், ஏவுதலுக்கு ஒரு மாதம் முன்பு,[86] இசுரோ நாசாவுடனும் ஈசாவுடனும் தரையிறங்கியில் ஒரு சிறிய ஒருங்கொளி மீள்தெறிப்பியைக் கொண்டுசெல்ல ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இக்கருவி மேலுள்ள செயற்கைக்கோளில் இருந்து நிலாத் தரையில் உள்ள நுண்தெறிப்பிக்கும் இடையில் உள்ள தொலைவை அளக்கும் அளக்கும்.[87][88]
சுற்றுகலனில் பின்வரும் எட்டு அறிவியல் கருவிகள் உள்ளன:[40][50][83]
விக்ரம் தரையிறங்கியில் பின்வரும் நான்கு அறிவியல் கருவிகள் உள்ளன:[40][83]
பிரக்யான் தரையூர்தியில் இறங்கும் இடத்தில் உள்ள செறிவான வேதித் தனிமங்களைக் கண்டறியும் இருகருவிகள் உள்ளன:[40][83]
சந்திரயான்-2 விண்கல ஏவுதல் முதலில் 2019 சூலை 14, 21:21 ஒபொநே (2ஒ19, சூலை 15 02:51 இ சீ நே ) ஆகத் திட்டமிடப்பட்டிருந்தது.[111] என்றாலும், 56 மணித்துளிகள் 24 நொடிகளுக்கு முன் ஒரு தொழில்நுட்ப நெருடலால் ஏவல் நிறுத்தப்ப்பட்டது; எனவே, ஏவுதல் 2019, சூலை 22 இல் மீள ஏவத் தள்ளி வைக்கப்பட்டது.[7][112] உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் ஏவல் நிறுத்தபட்டத்ற்கு காரணமாக எல்லியம்(ஈலியம்) வளிமக் குடுவையின் காம்பிணைப்புக் கசிவு அமைந்த்து என அறிவித்தன.[113][114][115] இறுதியாக, சந்திரயான்-2 LVM3 வரிசை மார்க் 1 ஏவூர்தியால் 2019 சூலை 22 09:13 ஒபொநே (14:43 இசீநே) நேரத்தில், தண்குளிர் பொறி மேல்கட்டம் எரிபொருள் தீர எரிந்துவிட்டதால், நல்ல புவிச்சேய்மையுடன் ஏவப்பட்டது.[116]
இதனால், பிறகு, திட்டத்தின் புவிமைய வட்டணையின் ஒரு புவிச்சேய்மை உயர்த்தல் கட்டம் குறைந்தது.[117][118][119] மேலும், இதன் விளைவாகd 40 கிகி விண்கல எரிபொருள் மிச்சமானது.[120] ஏவுதல் முடிந்த உடனே, ஆத்திரேலியா மீது மெதுவாக நகரும் பொருளின் மெல்லிய ஒளி மிளிர்வு பல நோக்கீடுகளால் அறியப்பட்டது. இது மேல்கட்ட முதன்மை எரித்தல் தீர்ந்த பிறகான எஞ்சிய LOX / LH2 எரிபொருள் கசிவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[121][122]
ஏவூர்தியால் சந்திரயான்-2 விண்கலம் 45,475 × 169 கிமீ வட்டணையில் தங்கவைக்கப்பட்டதும்,[117] அதன் வட்டணை படிப்படியாக கலச் செலுத்தவழி 22 நாட்கள் உயர்த்தப்பட்டு வந்தது. இதற்காக இக்கட்டத்தில் ஒரு புவியண்மைக்கான எரிப்பும் ஐந்து புவிச்சேய்மைக்கான எரிப்பும் நிகழ்த்தி, 142,975 × 276 கிமீ உயர் நீள்வட்டமான வட்டணைக்கு உயர்த்தப்பட்டது.[123] பிறகு, 2019 ஆகத்து 13 இல் நிலாவின் ஈர்ப்புக்குப் பெயரும் நுழைவு அடையப்பட்டது.[124] ஏவூர்தியின் தூக்குதிறன் வரம்பாலும் கலச்செலுத்த உந்துவிசை அமைப்பாலும் இத்தகைய நீண்ட புவியீர்ப்புக் கட்டத்தில் பல வட்டணை உயர்த்தும் முயற்சிகள் ஓபெர்த் விளைவைப் பயன்படுத்தி மேற்கொள்ளவேண்டிய தேவை உருவாகிறது. இதே செயற்பாங்கு சந்திரயான்-1, செவ்வாய் சுற்றுகலன் திட்டம் ஆகியவற்றின் புவியீர்ப்பில் உள்ள தடவழிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.[125]விக்ரம் தரையிரங்கியின் LI4 வொளிப்படக் கருவி 2019 ஆகத்து 3 இல் வட அமெரிக்க நிலப்பரப்பைக் காட்டும் புவியின் முதல் தொகுதி படிமங்களை எடுத்தது.[52]
ஏவிய பிறகு 29 நாட்கள் கழித்து, சந்திரயான்-2 விண்கலம் நிலா வட்டணையில் 2019, ஆகத்து 20 இல், நிலா வட்டனை நுழைவு எரிப்பை 28 மணித்துளிகள் 57 நொடிகளுக்கு நிகழ்த்தடிய பிறகு, நுழைந்தது.[126] விௐஅல்த்தின் மூடௌக்குகளும் நிலாவை முனைகள் ஊடாகச் சுற்றிவரும் நீல்வட்ட வட்டணையில் வைக்கப்பட்டன. இந்த நீள்வட்ட நிலாச்சேய்மை18072 கிமீ ஆகவும் நிலாவண்மை 114 கிமீ ஆகவும் இருந்தது.[127] நான்கு வட்டணை உயரம் இறக்கும் முயற்சிகளுக்குப் பிறகு, 2019, செப்டம்பர் 1 இல்லிந்த நீள்வட்ட வட்டணை ஓரளவு வட்ட வடிவ வட்டணைக்கு மாற்றப்பட்டது. அப்போது நிலாச்சேய்மை 127 கிமீ ஆகவும் நிலாவண்மை 119 கிமீ அகவும் இருந்தது [128]:{{{3}}}[129]:{{{3}}}[130]:{{{3}}}[131]:{{{3}}} இந்த வட்டணையில் இருந்து விக்ரம் தரையிறங்கி வட்டணைக்கலத்தில் இருந்து 2019, செப்டம்பர் 2 இல் ஒபொநே 07:45 மணி நேரத்தில் பிரிந்தது.[132]
இறங்குகளம் [133] | ஆயக் கூறுகள் |
---|---|
முதன்மை இறங்குகளம் | 70.90267°S 22.78110°E |
மாற்று இறங்குகளம் | 67.87406°S 18.46947°W |
ஒவ்வொன்றும் 32×11 கிமீ நீள்வட்டமான இருகளங்கள் விக்ரம் இறங்க தெரிந்தெடுக்கப்பட்டன.[133] தென்முனையில் இருந்து 600 கிமீ தொலைவில் அமைந்த முதன்மையான இறங்குதளமான(PLS54) இன் ஆயக்கூறுகள் 70.90267°தெ 22.78110°கி ஆகும்;[134]) மாற்று இறங்குதளமாக தெரிந்தெடுத்த (ALS01) இன் ஆயக்கூறு 67.87406° தெ 18.46947°மே ஆகும். முதன்மையான இறங்குதளம் மஞ்சீனசு சி, சிம்புலியசு என் குழிப்பள்ளங்களுக்கு இடையில் அமைந்த மேட்டுச் சமவெளி ஆகும்;[135][136] இது நிலாவுக்கு அண்மைப் பக்கத்தில் உள்ளது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்த பிறகு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிப்படியாகக் குறைந்தது. அதிகாலை 1.58 மணியளவில் விண்கலத்திலிருந்து எந்த ஒரு சிக்னல்களும் வரவில்லை.[137] நிலவின் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது,என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். இது குறித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.[138] தொடர்ந்து 11 நாட்களாக தகவல் தொடர்பை மீடக முயற்சித்தும் முடியவில்லை. மேலும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் நிலவின் தென் துருவத்தில் இரவு துவங்குவதால் விக்ரம் தொடர்பை மீட்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.[139]
நிலாவில் இறங்கும்போது, தரையிறங்கி வெளியிட்ட கதிர்வீச்சலைப் பரப்புகள் 25 மீ கதிர்வீச்சுத் தொலைநோக்கியால் நெதர்லாந்து கதிரலை வானியல் நிறுவன ஆய்வாளர்கள் கண்கானித்துள்ளனர். டாப்பிளர் விளைவுத் தரவுகலைப் பகுப்பாய்வு செய்தபோது குறிகை இழப்பு, நொடிக்கு 50 மீ வேகத்துக்கு அணுக்கமான வேகத்தில் தரையிறங்கி நிலாத்தரையில் மொத்தியதோடு ஒன்றியுள்ளது. இது திட்டமிட்ட தரைதொடும் நொடிக்கு 2 மீ வேகத்துடன் முரண்படுகிறது.[40][140] திறனூட்டத் தரையிறக்கம் நாசாவின் நிலாக் கண்காணிப்பு வட்டணைக்கலத்தின் அறிவியல் கருவியான ஒருங்கொளி தொலைவளத்தல் கருவியாலும் நிலா வெளிவளிமண்கலத்தில் தரையிறங்கியின் வேக ஒடுக்கப் பொறிகள் வெளியிட்ட வளிமங்களால் ஏற்பட்ட மாற்றங்களும் நோக்கப்பட்டுள்ளன.[141] கே. சிவன் பழுது பகுப்பாய்வுக் குழுவின் தலவராக முதுநிலை அறிவியலாளரானபிரேம் சங்கர் கோயலை அமர்த்தி பழுதின் காரணங்களைப் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க சொன்னார்.[142]
நாசாவும் இசுரோவும் நிலா இரவு கவியும் முன்னே இரண்டு வாரம் வரை தரையிறங்கியோடு தொடர்புகொள்ள முயன்றன;[100][143] நாசாவின் நிலாக் கண்காணிப்புக்கல ஒருங்கொளி தொலைவளத்தல் கருவியால் 2019 செப்டம்பர் 17 இல் மீண்டும் பறந்தபோது தரையிறங்கிடத்தின் சில படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன.[99] என்றாலும், ஒளிவழி படம் எடுக்க இயலாத அளவுக்கு அந்தப் பகுதி இருட்டில் இருந்தது;[144][145] தரையிறங்கியின் சுவடெதுவும் காட்டாத நாசாவின் படிமங்கள் 2019 செப்டம்பர் 26 இல் வெளியிடப்பட்டன.[134] மேலும் உகந்த வெளிச்சத்தில் நிலாக் கண்காணிப்பு வட்டணைக்கலம் 2019 அக்தோபர் 14 இல் மீண்டும் பறந்த போனது;[146][147] ஆனாலும் தரையிறங்கி இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.[148][149] நிலாக் கண்காணிப்பு வட்டணைக்கலம் மூன்றாம் முறையாக 2019, நவம்பர் 10 இல் பறந்து சென்றுள்ளது.[148]
பழுது பகுப்பாய்வுக் குழு, 2019, நவம்பர் 16 இல் வெண்வெளி ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், ஒரு சிறு மென்பொருள் நெருடலால் மொத்தல் ஏற்பட்டதாகத் தன் முடிவை அறிவித்தது.[150] முதல் கட்டத்தில் நிலாத் தரையில் இருந்து 30 கிமீ இலிருந்து 7.4 கிமீ வரையிலான் குத்துயரத்தில் தரையிறங்கியபோது, திட்டமிட்ட கருதல்படி, விரைவு(திசை வேகம்) நொடிக்கு 1683 மீ இலிருந்து நொடிக்கு 146மீ வரை குறைந்தது. விகரம் பொறிகள் 40 முதல் 100% வரையிலான விரைவு நெடுக்கத்தை 20% படிநிலைகளில் குறைக்க வல்லனவாகும். வேக ஒடுக்கப் பொறிகளின் இந்த படிநிலை வேகக் குறைப்பு திட்டமிட்ட தரையிறங்கல் விறைவை அடைய போதுமாந்தாயில்லை; எனவே, இரண்டாம் கட்ட தரையிறங்கும் விரைவு எதிர்பார்த்ததை விட கூடுதலாகும். மேலும், பிற கட்டுபாட்டு, வழிகாட்டல் சார்ந்த சிக்கல்களையும் கருதும்போது[60] வரையளவு விரைவுக் குறைப்பின் விலக்கம், கல மென்பொருளின் வடிவமைப்பு அளவுருக்களுக்கு அப்பாற்பட்டதாகும்;[41] இதனால் விக்ரம் தரையிறங்கி வன்தரையிறக்கத்துக்கு ஆட்பட்டாலும், அது திட்டமிட்ட இறங்குகளத்துக்கு ஓரளவு அருகிலேயே இறங்கியுள்ளது.[151] முழு கண்டுபிடிப்புகள் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை.[152][153][154]
விக்ரம் மொத்தல் கள இருப்பிடம் 70.8810தெ|22.7840 கி ஆயக்கூறுகளில் இருப்பதாக, LROC குழுவால் தமிழ் நாடு, சென்னை நகரத் தன்னார்வலர் சண்முக சுப்பிரமணியன் தந்த பயனுள்ள தரவுகளைப் பெற்றதும் அறிவிக்கப்பட்டது; இவர் நாசா வெளியிட்ட படங்களில் இருந்து விண்கலச் சிதிலங்களின் இருப்புகளைக் கண்டறிந்தார்.[155][156] முதலில் இறங்குகளத்தில் இருந்து 500 மீ தொலைவு தள்ளி வந்தறையிக்கம் உற்றதாகக் கருதினும் பிறகு, செயற்கைக்கோள் படிமங்களில் இருந்தான சரியான ஊகம் 600 மீ தொலைவு தள்ளி வன் தரையிறக்கம் அடைந்துள்ளதாகக் கணிக்கிறது.[157] விண்கலம் மொத்தலால் சிதறுண்டு,[158] பல கிமீ பரப்பில் சிதிலங்கள் 24 இடங்களில் காணப்படுகின்றன.[156]
திட்ட வட்டணைக்கலம் எட்டு அறிவியல் கருவிகளுடன் ஏழு ஆண்டுகளுக்கு இயங்கி நிலாவை ஆய்வுசெய்யும்.[159]
கட்டம் | நாள் | நிகழ்ச்சி | விவரம் | முடிவு | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|---|
புவிச் சேய்மை / நிலாச் சேய்மை |
புவியண்மை / நிலாவண்மை | |||||
புவிமையக் கட்டம் | 22 சூலை 2019, 09:13:12 ஒபொநே | ஏவல் | எரிப்பு நேரம்: 16 மணித்துளி 14 நொடி | 45,475 km (28,257 mi) | 169.7 km (105.4 mi) | [117] |
24 சூலை 2019, 09:22 ஒபொநே | முதல் வட்டணைக்கு உயர்த்தல் | எரிப்பு நேரம்: 48 நொடிகள் | 45,163 km (28,063 mi) | 230 km (140 mi) | [162] | |
25 சூலை 2019, 19:38 ஒபொநே | 2 ஆம் வட்டணைக்கு உயர்த்தல் | எரிப்பு நேரம்: 883 நொடிகள் | 54,829 km (34,069 mi) | 251 km (156 mi) | [163] | |
29 சூலை 2019, 09:42 ஒபொநே | 3 ஆம் வட்டணைக்கு உயர்த்தல் | எரிப்பு நேரம்: 989 seconds | 71,792 km (44,609 mi) | 276 km (171.5 mi) | [164] | |
2 ஆகத்து 2019, 09:57 ஒபொநே | 4 ஆம் வட்டணைக்கு உயர்த்தல் | எரிப்பு நேரம்: 646 நொடிகள் | 89,472 km (55,595 mi) | 277 km (172 mi) | [165] | |
6 ஆகத்து 2019, 09:34 ஒபொநே | 5 ஆம் வட்டணைக்கு உயர்த்தல் | எரிப்பு நேரம்: 1041 நொடிகள் | 142,975 km (88,841 mi) | 276 km (171 mi) | [123] | |
19 ஆகத்து 2019, 20:51 ஒபொநே | நிலா பெயரும் நுழைவு | எரிப்பு நேரம்: 1203 நொடிகள் | — | — |
[124] | |
நிலாமையக் கட்டம் | 20 ஆகத்து 2019, 03:32 ஒபொநே | நிலா வட்டணை நுழைவு முதல் நிலாசார் முயற்சி |
எரிப்பு நேரம்: 1738 நொடிகள் | 18,072 km (11,229 mi) | 114 km (71 mi) | [127] |
21 ஆகத்து 2019, 07:20 ஒபொநே | 2 ஆம் நிலாசார் முயற்சி | எரிப்பு நேரம்: 1228 நொடிகள் | 4,412 km (2,741 mi) | 118 km (73 mi) | [128] | |
28 ஆகத்து 2019, 03:34 ஒபொநே | 3 ஆம் நிலாசார் முயற்சி | எரிப்பு நேரம்: 1190 நொடிகள் | 1,412 km (877 mi) | 179 km (111 mi) | [129] | |
30 ஆகத்து 2019, 12:48 ஒபொநே | 4 ஆம் நிலாசார் முயற்சி | எரிப்பு நேரம்: 1155 நொடிகள் | 164 km (102 mi) | 124 km (77 mi) | [130] | |
1 செப்டம்பர் 2019, 12:51 ஒபொநே | 5 ஆம் நிலாசார் முயற்சி | எரிப்பு நேரம்: 52 நொடிகள் | 127 km (79 mi) | 119 km (74 mi) | [131] | |
விக்ரம் நிலாவில் தரையிறங்கல் | 2 செப்டம்பர் 2019, 07:45 ஒபொநே | விக்ரம் பிரிதல் | — |
127 km (79 mi) | 119 km (74 mi) | [132] |
3 செப்டம்பர் 2019 3:20 ஒபொநே | முதல் வட்டணைக் குறைப்பு எரிப்பு | எரிப்பு நேரம்: 4 நொடிகள் | 128 km (80 mi) | 104 km (65 mi) | [166] | |
3 செப்டம்பர் 2019, 22:12 ஒபொநே | 2 ஆம் வட்டணைக் குறைப்பு எரிப்பு | எரிப்பு நேரம்: 9 நொடிகள் | 101 கிலோமீட்டர்கள் (63 mi) | 35 km (22 mi) | [167] | |
6 செப்டம்பர் 2019, 20:00 ஒபொநே | திறனூட்ட இறங்கல் | எரிப்பு நேரம்: 15 மணித்துளிகள் | தரையிறங்கல் (திட்டமிட்டபடி) | தரையிறங்கல் (திட்டமிட்டபடி) | ||
6 செப்டம்பர் 2019, 20:23 ஒபொநே | விக்ரம் தரையிறங்கல் | செல்தட விலக்கத் தொடக்கம் 2.1 கிமீ குத்துயரம், தரைதொடு சில நொடிக்கு முன் தொலையளவி செயலிழப்பு.[168][169] | மொத்தலால் தரையிறங்கி இழப்பு. | |||
7 செப்டம்பர் 2019, 01:00 ஒபொநே (திட்டமிட்டபடி) | பிரக்யான் தரையூர்தி இறங்கல் | தரையிறங்கிப் பழுதால் தரையூர்தி இறங்கவில்லை. | — |
— |
[170][171][172] | |
சந்திரயான்-2 திட்ட விண்கல ஏவுதல், இயக்குதல் சார்ந்த பல்வேறு கட்டங்களிலும், தொலையளவியல், தடக்கண்காணிப்பு, கட்டளை ஆகிய பணிகளை இசுட்டிராக் எனும் இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் இந்திய ஆழ்வெளி வலைப்பிணையம் (IDSN) தேசிய ஆழ்வெளி வலைப்பிணையம், தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INPE), அல்காந்தாரா, கியுவபா ஆகிய இடங்களின் தரைக் கட்டுபாட்டு நிலையங்கள் ஆகியன பொறுப்பேற்று நிறைவேற்றின.[173][174]
தரையிறங்கி துண்டிப்புற்று தரையில் மோதிய பிறகு பல வட்டாரங்களில் இருந்து இசுரோவுக்கு ஆதரவுகள் பெருகின. என்றாலும் முதன்மையான செய்தி ஊடகம் தரையிறங்கி நொறுங்கியது பற்றியும் அதற்கான பகுப்பாய்வு முடிவுகள் பற்றியும் வெளிப்படையாக தொடர்பு வைக்காமை குறித்து கன்டித்தது.[175][176] இந்திய ஊடகங்கள் இசுரோ முந்தைய வெளிப்படையான பதிவுகளைப் போல, பொய்த்தல் பகுப்பாய்வுக் குழுவின் அறிக்கையை பொதுவெளியில் பகிரவில்லை எனக் கண்டித்தன,[177] மேலும் இதைப் பற்றித் தகவல் உரிமைச் சட்டம்,2005 இன்படி எழுப்பிய கேள்விகளுக்கு இசுரோ அச்சத்தின் 8() பிரிவைக் காட்டி பதிலளிக்க மறுத்தது.[178] தம் தரப்புகளுக்கான நிறுவல் ஏதும் தராமல், இசுரோ வெளியிடும் தரையிறங்கி நொறுங்கியமை பற்றி தரும் விளக்கங்களில் பொருத்தமின்மை அமைவதிச் சுட்டி விமர்சனம் எழுந்தது.நாசாவும் சென்னைசார் தனிப் பொறியாளர் ஒருவரும் முயற்சிகள் எடுத்து நிலாத்தரையில் தரையிறங்கியின் சிதிலமடைந்த பகுதிகளின் இருப்பிடங்களை சுட்டி விளக்கும் வரை இது தொடர நேர்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.[179] சந்திரயான்-2 நிகழ்ச்சிகளால் விழிப்புற்ற முன்னாள் இசுரோ பணியாளர்களளிசுரோ தலைவரின் கூற்றுகளை விமர்சனம் செய்து, இசுரோவின் மேலிருந்து அதிகாரம் செய்யும் நிறுவன வேலைமுறை வழக்கத்தை வெளிப்படுத்தினர்.[180][181][182]
சந்திரயான்-2 திட்டத்தின் முதன்மை அறிவியலாளரும் பொறியியலாளரும் பின்வருமாறு:[184][185][186]
இசுரோ அலுவலர்கள், 2019 நவம்பரில் புதிய 2023 ஜூலை 14 இல் நிலாவில் தரையிறங்கித் திட்டம் ஆய்வில் உள்ளதாகக் கூறினர் 2023;[191] இந்த முன்மொழிவு சந்திரயான்-3 எனப்படும் எனவும் இது 2025 இல் யப்பானுடன் இணைந்து செயல்படுத்தவுள்ள நிலா முனைய தேட்டத் திட்டத்துக்கு த் தேவைப்படும் நிலாவில் தரையிறங்கும் திறன்களை நிறுவுவதற்கான செயல்விளக்கமாக மீள எடுக்கும் முயற்சியாகும் எனவும் கூறப்பட்டது.[192][193] இந்த மறுமுயற்சிக்கு நிதி தரப்பட்டால், அதில் வட்டணைக்கலம் ஏதும் ஏவப்பட மாட்டாது.[194] இம்முன்மொழிவில் தொலைதொடர்பு அஞ்சல் ஊதவி செயற்கைக்கோள் போல இயங்கும் பிரிதகவு செலுத்தப் பெட்டகம் ஒன்றும்,[195] தரையிறங்கி ஒன்றும் தரையூர்தி ஒன்றும் மட்டுமே அமையும்.[196][197][198][199] மேலும், விக்ரம் சாராபய் செயர்கைக்கோள் மைய இயக்குநர் எசு. சோமநாத், சந்திரயான் நிகழ்நிரலில் பல தொடர்கண்கானிப்பு திட்டங்கள் அமையும் எனக் கூறியுள்ளார்.[41][200]
டைம்சு ஆஃப் இந்தியா கூற்றுப்படி, சந்திரயான்-3 இன் பணி 2019 நவம்பரில் தொடங்கிவிட்டது.[201] மேலும், 2019 திசம்பரில், இசுரோ திட்டத் தொடக்கநிலை நிதியாக 75 கோடி உரூபா வேண்டியதாகவும் இதில் 60 கோடி உரூபா முதலீட்டுச் செலவுக்கும் எஞ்சிய 15 கோடிஉரூபா வர்வாய்ச் செலவுக்கும் பயன்படும் என அறிவிக்கப்பட்டது.[202] இத்திட்ட நிலவலை உறுதிபடுத்திய இசுரோ தலைவர் சிவன் திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு 615 கோடி உரூபா ஆகும் என அறிவித்தார்.[203]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.