Remove ads
From Wikipedia, the free encyclopedia
கோடார்டு விண்வெளி பறப்பு மையம் (Goddard Space Flight Center) (GSFC) என்பது ஐக்கிய அஎரிக்கா, மேரிலாந்து, கிரீன்பெல்ட்டில் உள்ள வாழ்சிங்டனில் இருந்து வடகிழக்காக, 6.5 மைல்கள் (10.5 km) தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய நாசா விண்வெளி ஆராய்ச்சி ஆய்வகமாகும். நாசாவின் முதல் விண்வெளி பறப்பு மையமாக 1959, மே 1 இல் நிறுவப்பட்டது, கோடார்டு விண்வெளி பறப்பு மையம் தோராயமாக 10,000 அரசு ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்துகிறது. இது அமெரிக்க ஏவூர்தி செலுத்த முன்னோடியான ராபர்ட் எச். கோடார்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது, இது பத்து முதன்மை நாசா கள மையங்களில் ஒன்றாகும். கோடார்டு விண்வெளி பறப்பு மையம் ஓரளவுக்கு முன்னாள் கோடார்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் குறித இடத்தில் உள்ளது; இது கிரீன்பெல்ட் அஞ்சல் முகவரியைக் கொண்டுள்ளது.[3][4]
கோடார்டு விண்வெளி பறப்பு மையம் (2010) | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | மார்ச்சு 1, 1959 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு |
தலைமையகம் | Greenbelt, Maryland, U.S. 38°59′32″N 76°51′9″W[1] |
பணியாட்கள் | 10,000 civil service and contractor |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | நாசா |
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | nasa |
வரைபடம் | |
கோடார்டு நிலப்படம் |
கோடார்டு விண்வெளி பறப்பு மையம் என்பது அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த அமைப்பாகும், இது விண்வெளியில் இருந்து நோக்கீடுகள்கள் மூலம் பூமி, சூரிய குடும்பம் மற்றும் புடவி பற்றிய அறிவை அதிகரிக்க பணிக்கப்பட்டுள்ளது. கோடார்டு விண்வெளி பறப்பு மையம் என்பது ஒரு முதன்மை அமெரிக்க ஆய்வகமாகும். கோடார்டு விண்வெளி பறப்பு மையம் அறிவியல் ஆய்வு, மேம்பாடு, விண்வெளி அமைப்புகளினவூருவாக்கம், செயல்பாடு இன்னும் தொடர்புடைய பிற தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது. கோடார்டு விஞ்ஞானிகள் ஒரு பணியை உருவாக்கி ஆதரிக்க முடியும், மேலும் கோடார்டு பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்தப் பணிக்கான விண்கலத்தை வடிவமைத்து உருவாக்க முடியும். கோடார்டு அறிவியலாளர் ஜான் சி. மாதர் 2006 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை COBE பற்றிய தனது பணிக்காக பகிர்ந்து கொண்டார்.
கோடார்டு விண்வெளி பறப்பு மையம் இரண்டு விண்வெளிப் பயணக் கண்காணிப்பு, தரவு கையகப்படுத்தல் வலைப்பிணையங்களை ( விண்வெளி வலைப்பிணையம், புவியருகு வலைப்பிணையம் ) இயக்குகிறது, மேம்பட்ட விண்வெளி, புவி அறிவியல் தரவு தகவல் அமைப்புகளை உருவாக்கிப் பேணுகிறது; தேசிய கடல், வளிமண்டல மேலாண்மைக்கான (NOAA) செயற்கைக்கோள் அமைப்புகளை உருவாக்குகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.