Remove ads
From Wikipedia, the free encyclopedia
புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III (The Geosynchronous Satellite Launch Vehicle Mark III) புவி ஒத்தியங்கும் வட்டணையில் ஏவப்படும் செயற்கைக்கோள் ஏவூர்தி ஆகும். இசுரோ (ISRO)வினால் வடிவமித்துக் கட்டமைக்கப்பட்ட இது ஒரு முறை மட்டுமே ஏவும் மீளப்பயன்பட இயலாத வகை ஏவூர்தி ஆகும்.[2][3] 5 ஜூன் 2017 அன்று 17:28 மணியளவில் இந்தியாவின் சத்தீசு தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிசாட்-19 (GSAT-19) செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.[4]இந்த ஏவூர்தியால் புவி ஒத்தியங்கும் வட்டணைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த இயலும். மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் இயலும். இந்த ஏவூர்தியின் மூன்றாவது அடுக்கில் தண்ணியக்கப் பொறி பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிக எடையுடைய விண்கலங்களை ஏவ இயலும்.[5][6]
ஜி. எஸ். எல். வி மார்க் III | |
ஜி. எஸ். எல். வி மார்க் III டி2 - ஜிசாட்-29 உடன் | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | Heavy-Lift Launch System |
அமைப்பு | இஸ்ரோ |
நாடு | இந்தியா |
அளவு | |
உயரம் | 42.4 m |
விட்டம் | 4.0 m |
நிறை | 630,000 கிலோகிராம் |
படிகள் | 2 |
கொள்திறன் | |
Payload to LEO | 8,000 கிலோகிராம்[1] |
Payload to GTO | 4,000 கிலோகிராம் [1] |
ஏவு வரலாறு | |
நிலை | செயலில் |
ஏவல் பகுதி | சதீஸ் தவான் விண்வெளி மையம் |
மொத்த ஏவல்கள் | 3 |
வெற்றிகள் | 3 |
முதல் பயணம் | 18 டிசம்பர் 2014 (துணை சுற்றுப்பாதை) 5 ஜூன் 2017 (சுற்றுப்பாதை) |
Boosters (Stage 0) - S-200 | |
No boosters | 2 |
Engines | 1 திட எரிபொருள் |
Thrust | 7698 கிலோ நியூட்டன் |
குறித்த உந்தம் | 269 வினாடிகள் |
எரிநேரம் | 108 வினாடிகள் |
எரிபொருள் | திட எரிபொருள் |
First Stage - L-110 | |
Engines | 2 விகாஸ் |
Thrust | 1,600 கிலோ நியூட்டன் |
குறித்த உந்தம் | 300 sec |
எரிநேரம் | 220-230 வினாடிகள் |
எரிபொருள் | UDMH + N2O4 |
Second Stage - C-25 | |
Engines | 1 CE-20 |
Thrust | 200 கிலோ நியூட்டன் (20 Tf) |
குறித்த உந்தம் | 450 வினாடிகள் |
எரிநேரம் | 720 வினாடிகள் |
எரிபொருள் | LOX/LH2 |
புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 கால இடைவெளியில்நிகழலாம் எனத் திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது.[7] 15 ஏப்ரல் 2010 புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் II ஏவூர்தியின் மேலடுக்கு ந்தண்னியக்கப் பொறி]] சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.[7]
1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு இன்சாட்-2 வகைச் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ இசைவு அளித்தது. இவ்வகைச் செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவி ஒத்தியங்கும் வட்டணைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த தண்னியக்கப் பொற் தேவையானதாக இருந்தது. உருசியாவிடமிருந்து இவ்வகைப் பொறிகளை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது.[8] இதன் காரணமாக உருசிய வடிவமைப்பில் உள்நாட்டிலேயே தண்னியக்கப் பொறி வடிவமைத்துக் கட்டமைப்பட்டது.[9]
புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III ஏவூர்தி வடிவமைப்பைக் கீழ்க்கண்ட ஏவூர்திகளுடன் ஒப்பிடலாம்,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.